சிறுவர் பைபிள் பயன்பாடு இப்போது சாதனங்கள் அனைத்திலும் ஒத்திசைக்கிறது!

சுயவிவரங்களுக்குத் தக்க சிறுவர் பைபிள் பயன்பாடு

“ஓஹோ! என் நட்சத்திரங்கள் இங்கே உள்ளன!”

சிறுவர் பைபிள் பயன்பாட்டில் உங்கள் பிள்ளையின் விருதுகள் எப்பொழுதும் அவற்றைப் பெற்ற சாதனத்தில் சேமிக்கப்படுகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு புதியதாக ஒரு சாதனம் கொடுக்கப்பட்டிருந்தால், அல்லது வேறொரு கைபேசியில் சிறுவர் பைபிள் பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்தினால், அவர்கள் அனைத்தையும் புதிதாகத் தொடங்க வேண்டும். அவ்வளவே.

ஒத்திசைக்கப்பட்ட எல்லா சாதனங்களிலும் உங்கள் ஒவ்வொரு குழந்தையின் தேற்றமும் இப்போது சேமிக்கப்படுகிறது!

பெற்றோர் அல்லது காப்பாளராக, உங்களது ஏற்கெனவே உள்ள YouVersion கணக்கு மூலம் சிறுவர் பைபிள் பயன்பாட்டில் உள்நுழைந்து ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனி சின்னம் அமைக்கலாம். ஒரு சுயவிவரத்தை சேர்ப்பது வேகமாகவும் சுலபமாகவும் உள்ளது. உங்கள் குழந்தைகள் தங்கள் விருப்பமான சின்னத்தையும் வண்ணத்தையும் கூட தேர்ந்தெடுக்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டைப் பெறுக

Share this post:

உங்கள் பிள்ளைகள் தமிழிலும் சிறுவர் பைபிள் ஆப்பை அனுபவிக்கலாம்!

இன்றைக்கு, எங்களுடன் கூட்டமைத்திருக்கும் OneHope உடன் சேர்ந்து, சிறுவர் பைபிள் ஆப்பை தமிழில் வெளியிடுகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எப்போதும் இல்லாத அளவிற்கு, இப்போது இன்னும் அநேக பிள்ளைகள் பைபிள் அனுபவத்தை பெற இது ஒரு வாய்ப்பாக அமையும்.

பயன்பாட்டின் அமைப்புகளுக்குள்ளேயே சுலபமாய் எந்த மொழியையும் தேர்ந்தெடுக்கலாம்:

  1. பயன்பாட்டை சமீபத்திய பதிப்பிற்க்கு மேம்படுத்திக் கொண்டீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
  2. பயன்பாட்டைத் திறந்து, பற்சக்கரத்தை தட்டவும் () அது அமைப்புகளைத் திறக்கும்.
  3. மொழியை அழுத்தி, உங்களுக்கு வேண்டிய மொழியை தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியிலேயே ஒலி கேட்கும், மற்றும் வாக்கியங்களும் அம்மொழியிலேயே தோன்றும்!

இந்த நற்செய்தியை கொண்டாட எங்களுக்கு உதவுங்கள்!

பகிரவும்
ட்வீட்
மின்னஞ்சல்


சிறுவர்களுக்கான பைபிள் ஆப் பற்றி

ஒருங்கிணைவாளரான OneHope உடன் உருவாக்கப்பட்ட சிறுவர் பைபிள் ஆப், YouVersion இன் தயாரிப்பாகும், இவர்களே வேதாகம பயன்பாட்டின் தயாரிப்பாளருமாவர். பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய அனுபவத்தை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிறுவர் பைபிள் ஆப் ஏற்கெனவே 21 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்களில் ஆப்பிள், ஆண்ட்ராயிடு, கிண்டில் சாதனங்களில் நிறுவப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு எப்போதுமே முற்றிலும் இலவசம். உலகெங்கிலும் உள்ள பிள்ளைகள் இந்த சிறுவர் பைபிள் ஆப்பை அனுபவித்து வருகிறார்கள், 35 மொழிகளில் — இப்போது தமிழில் கூட!

App Store Google Play Amazon
Share this post: