Posted on 2019-11-012021-10-01வாசிப்பு திட்டங்கள் – நவம்பர் 2019 சங்கீதம் 31 நாட்கள் சங்கீத புத்தகத்தை வாசிப்பது எளிமையாக உற்சாகமூட்டக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு கஷ்டமான நேரத்தின் ஊடாக சென்றுக்கொண்டிருக்கும் போது, சங்கீத புத்தகம் ஒரு ஆறுதலாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கும். தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் – ஞானம் 5 நாட்கள் நாம் கடந்து செல்லும் அன்றாட வாழ்க்கைப் பாதையில் நம்மை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி நமக்கு உதவி செய்வதே தேவனின் இருதயத்தைத் தினமும் தேடுதல் என்ற 5-நாள் வாசிப்பு திட்டத்தின் நோக்கமாகும். பாய்டு பெய்லி அவர்கள் சொல்கிறார்கள், “உங்களுக்கு தேவனைத் தேட வேண்டும் என்ற விருப்பம் இல்லாதிருக்கும் நேரங்களிலும் அல்லது அதிக ஓய்வே இல்லாதிருக்கும் நேரங்களிலும் கூட அவரைத் தேடுங்கள், அப்பொழுது அவர் உங்கள் உண்மைக்குப் பலன் அளிப்பார்”. வேதம் சொல்லுகிறது, “அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்”. சங்கீதம் 119:2 தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள் 7 நாட்கள் ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
Posted on 2019-10-012021-10-01வாசிப்பு திட்டங்கள் – அக்டோபர் 2019 வெளிப்படுத்தின விசேஷம் 11 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை வெளிப்படுத்தின விசேஷம் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. உங்கள் திருமண வாழ்க்கைக்குள் ஆத்மீய பேரார்வத்தை செலுத்துங்கள். 7 நாட்கள் கேரி தாமஸ் அவர்களின் புதிய புத்தகமாகிய “A Lifelong Love” லிருந்து எடுக்கப்பட்ட இவை திருமணத்தின் நித்திய நோக்கங்களைப் பற்றி பேசுகின்றன. மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உயிரை பரப்பும் ஒரு ஊக்கமூட்டும் உறவாக உங்கள் திருமண வாழ்வை அமைக்க நடைமுறை கலையை கற்றுக்கொள்ளுங்கள்.
Posted on 2019-09-012021-10-01வாசிப்பு திட்டங்கள் – செப்டம்பர் 2019 விசுவாசம் 12 நாட்கள் காண்பது நம்பிக்கையா? அல்லது நம்பிக்கை காண்பதா? இவை விசுவாசத்தைக் குறித்த கேள்விகள். இந்தத் திட்டம் விசுவாசத்தைக் குறித்த ஆழ்ந்த ஆய்வாகும் – பழைய ஏற்பாட்டிலிருந்து உண்மை தைரியமுள்ள விசுவாசத்தை அசாத்தியமான சூழ்நிலைகளில் நிரூபித்தவர்களின் நிகழ்வுகள் முதற்கொண்டு விசுவாசத்தைப் பற்றிய இயேசுவின் உபதேசங்களும் இதில் அடங்கும். உங்கள் வாசிப்புகளின் மூலம் கர்த்தருடனான உங்கள் உறவை ஆழமாக்கி இயேசுவின் அதிக விசுவாசமுள்ள தொண்டராக ஆகும்படி ஊக்குவிக்கப்படுவீர்கள். 2 கொரிந்தியர் 1 வாரம் இந்த எளிய திட்டம் உங்களை 2 கொரிந்தியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது.
Posted on 2019-08-012021-10-01வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2019 1 கொரிந்தியர் 8 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை 1 கொரிந்தியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் – ஆவியில் வாழ்க்கை 30 நாட்கள் சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
Posted on 2019-07-012021-10-01வாசிப்பு திட்டங்கள் – ஜூலை 2019 கலாத்தியர் 3 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை கலாத்தியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. இயேசுவினுடைய உவமைகள் 36 நாட்கள் இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்! உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது 4 நாட்கள் உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது பற்றி ஆர்.சி. ஸ்ப்ரௌலின் நான்கு நாள் தியானம். ஒவ்வொரு தியானமும் நீங்கள் தேவனின் பிரசனத்தில் வாழ, தேவனின் அதிகாரத்தின் கீழ் வாழ, தேவனின் மகிமைக்காக வாழ உங்களை அழைக்கிறது.