வாசிப்பு திட்டங்கள் – அக்டோபர் 2022

5 நாட்கள்

“நான் ஏன் அந்த பாவத்தோடு கூட போராடி கொண்டிருக்கிறேன்” என்று என்றைக்காவது உங்களை பார்த்து நீங்களே கேட்டிருக்கிறீர்களா? ரோமர் 7:15 -ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் பாருங்கள்: “நான் விரும்புகிறதை செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்”. நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றத்தை தடை செய்யும் இந்த பாவங்களை நாம் செய்யாமல் இருப்பது எப்படி? பாவம் செய்யாத வாழ்க்கை உண்மையில் சாத்தியமா? இந்த தியான திட்டத்தில் பாவத்தை குறித்தும் சோதனைகளை குறித்தும், பிசாசை குறித்தும், மிக முக்கியமாக தேவனுடைய அன்பை குறித்தும் நாம் தியானித்து கற்றுக்கொள்ள இருக்கிறோம்.

வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2022

30 நாட்கள்

12 பாகம் கொண்ட தொடரின் 9வது பாகம், இந்த திட்டம் 365 நாட்களில் முழு பைபிள் மூலம் ஒன்றாக தொடர்புபடுத்த வழிவகுக்கிறது. நீங்கள் எப்போதும் ஒரு புதிய பகுதியை ஒவ்வொரு மாதத்திலும் தொடங்கும் போது பிறரையும் சேர அழைக்கவும். இந்த தொடர் ஒலி பைபிளில் நன்றாக இயங்கும் – ஒரு நாளைக்கு 20-க்கும் குறைவான நிமிடங்களில் கேளுங்கள்! ஒவ்வொரு பிரிவிலும், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அத்தியாயங்களோடு சங்கீதங்களும் முழுவதும் சிதறி இருக்கும். நெகேமியா, எஸ்தர், முதல் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு, யோவேல், ஆமோஸ், ஒபதியா நாகூம், ஆபகூக், செப்பனியா, தீத்து, பிலேமோன், யாக்கோபு, ஆகாய், சகரியா, மல்கியா புத்தகங்களை பகுதி 9 கொண்டுள்ளது.

தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்

எபேசியர் 6:10-18

10  
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

11  
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

12  
ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

13  
ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

14  
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்

15  
சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்

16  
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.

17  
இரட்சணியமென்னும் தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

18  
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

Ephesians 6 in Tamil

Ephesians 6 in English

வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2022

31 நாட்கள்

12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 8வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 8ம் பகுதியானது முதலாம் இரண்டாம் நாளாகமம், முதலாம் இரண்டாம் தெசலோனியர் மற்றும் எஸ்றா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.

வாசிப்பு திட்டங்கள் – ஜூலை 2022

31 நாட்கள்

12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 7 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் -தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 7ம் பகுதியானது இரண்டாம் சாமுவேல், முதலாம் இரண்டாம் இராஜாக்கள் மற்றும் மாற்கு புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.

6 நாட்கள்

நான் பல ஆண்டுகளாக ஒரு பொய்யை நம்பி வாழ்ந்து வந்தேன். இந்த பொய்யானது கிறிஸ்தவ வட்டாரங்களில் மிகவும் பொதுவானது. நான் மதச்சார்பற்ற-புனிதமான ஒரு கருத்தில் நம்பிக்கை வைத்திருந்தேன். அது என்னைத் தடுத்து நிறுத்தியது. பரத்தை பூமிக்குக் கொண்டு வரவும், வணிகம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெறவும் தேவன் எவ்வாறு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை அளிக்க விரும்புகிறார் என்பதை ஆராய என்னுடன் இத்திட்டத்தில் சேரவும். பெரும்பாலான “முழுநேர ஊழியர்களை” விட இந்த உலகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர உங்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன, இந்த வேதாகம திட்டம் அது எப்படி என்பதை உங்களுக்குக் காண்பிக்கும்!