Posted on 2021-12-072021-12-08வாசிப்பு திட்டங்கள் – டிசம்பர் 2021 வருகை: கிறிஸ்துமஸ் பயணம் 25 நாட்கள் உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம். மிகுந்த சந்தோஷம்: கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு விழிப்புடன் ஒரு காத்திருப்பு 7 நாட்கள் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் நிகழ்வாக இருக்க வேண்டும் – ஆனால் மகிழ்ச்சி என்றால் என்ன, உலகம் வேதனையுடனும் கஷ்டத்துடனும் நிறைந்திருக்கும் போது அதை எவ்வாறு தேர்வு செய்வது? இந்த சிறப்பு, 7 நாள் கிறிஸ்துமஸ் திட்டத்துடன் கிறிஸ்துமஸ் கதையில் மூழ்குவதன் மூலம் “உலகிற்கு மகிழ்ச்சி” உண்மையில் என்ன அர்த்தம் என்பதைக் கண்டறியவும். எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம் 5 நாட்கள் இது சந்தோஷமாக இருக்கவேண்டிய காலம், கூடவே மிகவும் மும்முரமாக இருக்கக்கூடிய காலமும்கூட. இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க கொஞ்சம் நேரம் அமைதி மற்றும் ஆராதனைக்காக உங்கள் மும்முரமான வாழ்க்கையை விட்டு வெளியே வாருங்கள். இயேசுவின் பெயரை புரிந்துகொள்ள, என்ற புத்தகத்தை சார்ந்து, இந்த 5 நாள் தியானம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உங்களுக்கு இயேசுவின் நன்மையை அறிந்து, உங்கள் தேவையை புரிந்துகொண்டு, அவருடைய அமைதி மற்றும் உண்மைத்தன்மையை நாட உதவும். கிறிஸ்துமஸ் கதையின் 7 நாட்கள்: ஒரு கிறிஸ்து பிறப்பு பண்டிகை குடும்ப தியானம் 7 நாட்கள் நாம் அனைவருக்கும் ஒரு நல்ல அரவணைப்பு, உண்மையான இணைப்பு மற்றும் இப்போது கொண்டாட மகிழ்ச்சிகரமான ஒன்று தேவை என்று தெரிகிறது. இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை தியானம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இணைவதற்கும், உண்மையான கிறிஸ்துமஸ் கதையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், புதிய மரபுகள், இரவு உணவு கதைகள், படுக்கை நேர உரையாடல்கள் மற்றும் குடும்ப நடவடிக்கைகளுடன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கும் ஒரு வழியை வழங்கும் என்பதே எங்கள் பிரார்த்தனை. இந்த கிறிஸ்துமஸ் “அரவணைப்பு” இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை காலத்தில்உங்கள் வீட்டிற்கு அழகான நினைவுகளைத் தருகிறது என்று நாங்கள் நம்புகிறோம்! கிறிஸ்துமஸ் நம்பிக்கை 10 நாட்கள் பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை கொண்டாட வேண்டியதின் காரணத்தை நினைவுகூற உதவுகிறார். மேலும், அது விடுமறையைக் கொண்டாட வேண்டிய விதத்தை மட்டும் மாற்றாமல், மீதமிருக்கும் வாழ்க்கையையும் மாற்றவேண்டும் என்றும் நினைவூட்டுகிறார்.
Posted on 2021-12-012021-12-07கிறிஸ்து பிறப்பு பண்டிகை – டிசம்பர் 2021 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (டிசெம்பர்) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 12 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய பகுதியை ஒவ்வொரு மாதமும் துவங்கும்போதும் பிறரையும் இணையும்படி அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 12ம் பகுதியானது ஏசாயா, மீகா, முதலாம் இரண்டாம் பேதுரு, முதலாம் இரண்டாம் மூன்றாம் யோவான் மற்றும் யூதா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன், விசுவாசத்திற்கான ஒரு வருகையின் பயணம் 7 நாட்கள் வருகை என்பது எதிர்பார்ப்புடனும் ஆயத்ததுடனும் காத்திருக்கும் காலமாகும். நீங்கள் கர்த்தரை நோக்கி காத்திருக்கும் போது உங்கள் காத்திருப்பு வீண் போகாது என்பதைக் கண்டறிய ஒரு வருகையின் பயணத்தில் போதகரும் எழுத்தாளருமான லூயி கிக்லியோவுடன் இணையுங்கள். இத்திட்டத்தின் கீழ் உள்ள வருகையின் பயணத்தின் மூலம் பரந்த விசுவாசத்தை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களில் உங்கள் ஆத்துமாவுக்கு அமைதியையும் ஊக்கத்தையும் இந்த வருகையின் நாட்களுக்கான எதிர்பார்ப்பின் காலங்களில் கண்டுணருங்கள்! பளு அதிகம் இல்லாத பயணம் செய் 7 நாட்கள் மும்முரமான கிறிஸ்துமஸ் காலத்தில், நம்மில் அநேகர் குடும்ப உறவுகள், பண பிரச்சனைகள், அவசர முடிவுகள் மற்றும் ஏமாற்றமளிக்கும் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை உணருகிறோம். ஆகவே தொடர்ந்து வாசியுங்கள். பொறுமையாக ஒரு மூச்சு விடுங்கள். இந்த ‘Life Church’ இன் வேதாகம திட்டத்தை வாசித்து தேவன் நாம் சுமக்க சொல்லாத அநேக பாரங்களை நாம் சுமந்து கொண்டிருப்பதை உணருங்கள். இந்த பாரங்களை இறக்கி வைத்துவிட்டால் என்ன? பளு அதிகம் இல்லாத பயணம் செயலாம். மத்தேயு 14 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை மத்தேயு நற்செய்தி நூல் துவக்கத்திலிருந்து இறுதி வரை நடத்தி செல்லும்.
Posted on 2021-11-042021-11-04வேதாகமம் உயிருள்ளது வேதாகமம் உயிருள்ளது வேதாகமம் உயிருள்ளது 7 நாட்கள் ஆதிமுதல், தேவனுடைய வார்த்தை இருதயங்களையும் மனதுகளையும் மாற்றிவருகிறது-தேவன் அந்த கிரியையை முடித்துவிவில்லை. இந்த விசேஷித்த 7-நாள் திட்டத்தில், தேவனுடைய வாழ்க்கையை மாற்றும் வல்லமையை கொண்டாடி, வேதாகமத்தை கொண்டு தேவன் எவ்வாறு சரித்திரத்தையும் உலகத்தையும் மாற்றினார் என்று தெளிவாக காண்போம். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரெயர் 4:12 வேதாகமம் உயிருள்ளது
Posted on 2021-11-012021-10-28வாசிப்பு திட்டங்கள் – நவம்பர் 2021 1 மற்றும் 2 பேதுரு 4 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை 1 மற்றும் 2 பேதுரு வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (நவம்பர்) 30 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 11 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 11ம் பகுதியானது உன்னதப்பாட்டு, எசேக்கியேல், ஓசியா, மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. மனந்திரும்புதலின் செயல்கள் 5 நாட்கள் கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நமது ஒரு முக்கியமான செயல் மனதிரும்புதல் ஆகும். மனந்திரும்புதல் நம் செயல்; அதற்கு மன்னித்தல் கர்த்தரின் மகத்தான அன்பின் நிமித்தமாக அவரது பிரதிச்செயல் ஆகும். இந்த ஐந்து நாள் திட்டத்தில் ஒரு தினவேத வாசிப்பு பகுதியும் சுருக்கமான தியானமும் பெறுவீர்கள், இவை கிறிஸ்துவுடனான வாழ்விற்கு மனந்திரும்புதலின் அவசியத்தை உங்களுக்கு நன்கு விளக்கிக் காட்டும். உறுதிமொழி 6 நாட்கள் இந்த லயிஃப் சபையின் வேதாகம திட்டத்தில், ஆறு தம்பதியினர் சபையில் அதிகாரப்பூர்வமாக சொல்லாத ஆறு திருமண உறுதிமொழிகளைப் பற்றி எழுதுகிறார்கள். ஆயத்தம், முன்னுரிமை, பின்தொடர்தல், ஒற்றுமை, தூய்மை மற்றும் பிரார்த்தனை ஆகிய இந்த உறுதிமொழிகளே திருமணத்திற்கு முன்பே திருமணங்களை நிலைக்க செய்கின்றன. நீங்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி அல்லது அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும் சரி, உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் இது
Posted on 2021-10-012021-09-22வாசிப்பு திட்டங்கள் – அக்டோபர் 2021 யாக்கோபு 3 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை யாக்கோபு புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (அக்டோபர்) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 10 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய திட்டத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும். ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 10ம் பகுதியானது பிரசங்கி, யோவான், எரேமியா, மற்றும் புலம்பல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல் 5 நாட்கள் தேவனின் தயவைப் பற்றிய உண்மையை இன்று திருச்சபைக்குள்ளும் திருச்சபைக்கு வெளியேயும் அநேக செய்திகள் கறைப்படுத்தியுள்ளன. உண்மை என்னவென்றால், தேவன் நமக்கு நல்ல காரியங்களை கொடுக்க கடமைப்பட்டவரல்ல, ஆனால் அவர் அப்படி செய்ய விரும்புகிறார்! அடுத்த 5 நாட்கள் தேவனின் மறுக்கமுடியாத நற்குணத்தை, இவ்வுலக நெறி பிறழ்வுகளினூடும் கூட ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க உங்களுக்கு உதவ முடியும்.