Posted on 2021-03-012021-10-14வாசிப்பு திட்டங்கள் – மார்ச் 2021 சமாதானத்தை கண்டுக்கொள்வோம் 10 நாட்கள் உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். டாக்டர். ஜான் ஸ்டான்லியுடன் இணைந்து வாழ்க்கையை மாற்றக்கூடிய மன அமைதிக்கான வழிகளை கண்டடையுங்கள், கடந்த கால வருத்தங்களை சரிசெய்ய உதவும் கருவிகளை பெற்றுக்கொள்ளுங்கள், தற்போதைய கவலைகளை சந்திக்கவும் எதிர் காலத்தைக் குறித்த பயங்களை நீக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். சமாதானத்தை நாடுதல் 7 நாட்கள் Tearfund நிறுவனம் , எப்படி சமாதானத்தின் குரலாகவும், உறவுகள் மீண்டும் சேர்க்கவும், உலகம் முழுவதும் சமூகங்கள் மத்தியில் ஒற்றுமையை முற்படுத்தி, தேவனுடைய வழிநடத்துதலை தேடுகிறது.இந்த 7 நாள் ஆய்வு, உங்கள் சொந்த உறவுகளை மீட்டெடுப்பதற்கும், அன்றாட நடவடிக்கைகளான, நாம் வாழும் உலகத்திற்காக பிரார்த்தனை செய்வதற்கும் . ஆப்பிரிக்கா பழமொழிகளிலிருந்து செழிப்பான ஞானத்தைப் பயன்படுத்தி, தேவனுடைய உண்மையான சமாதானத்தைக் கண்டுபிடிக்க உதவும். தேவனின் சமாதானம் 4 நாட்கள் தேவனுடைய வார்த்தை நமக்கு அவர் “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்” தருகிறார் என்று கூறுகிறது. இந்த 4 நாள் வாசிப்பு திட்டத்தில் நீங்களும் உங்கள் குழந்தைகளும் இச்சமானத்தை உங்கள் வாழ்க்கையின் எந்த எந்த பகுதிகளில் அனுபவிக்கலாம் என்பதைக் குறித்துப் பார்க்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு ஜெபக்குறிப்பும், சிறிய வேத வாசிப்பு பகுதியும் அதன் விளக்கமும், ஒரு செயல்முறை நடவடிக்கையும், கலந்துரையாடலுக்கான கேள்விகளும் கொடுக்கப்படும். ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் – ஆவியில் வாழ்க்கை 30 நாட்கள் சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். எபிரேயர் 1 வாரம் இந்த எளிய திட்டம் உங்களை எபிரேயர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. உயிருள்ள நம்பிக்கை: உயிர்தெழுதல் நாளுக்கு முன் 3 நாட்கள் இருள் உங்களை சூழும் போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மூன்று நாட்களும், உயிர்த்தெழுதல் சம்பவத்தில் மூழ்கி, கைவிடப்பட்டவராக, தனிமையாக, மதிப்பற்றவராக நீங்கள் உணரும் போது, நம்பிக்கையை எப்படி பற்றிக் கொள்வது என்று கண்டறியுங்கள்.
Posted on 2021-02-012021-10-14வாசிப்பு திட்டங்கள் – பிப்ரவரி 2021 தெய்வீக திசை 7 நாட்கள் தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ.சர்ச் தலைமை போதகரான க்ரைக் குரோவ்ஷெல் எழுதின தெய்வீக திசை வேதாகம திட்டம், அவருடைய தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஏழு அடிப்படை கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, அது நாம் தினந்தோறும் தேவ ஞானத்துடன் முடிவுகளை எடுக்க நமக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துகிறது. தேவன் மகிமைப் படும்படியான, மற்றும் மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதான ஒரு வாழ்க்கைக் கதை நீங்கள் வாழத் தேவையான ஆவியின் வழிகாட்டுதலை இத்திட்டத்தில் கண்டறிக. ஜெபம் 21 நாட்கள் எப்படி ஜெபிப்பது என்று பக்தர்களின் ஜெபங்களிலிருந்தும் இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கைகளை தேவனிடம் தினமும், தொடர்ந்து பொறுமையாக எடுத்து செல்வதில் உற்சாகம் கண்டடையுங்கள். காலியான சுய நீதி நிறைந்த ஜெபங்களுக்கும், சுத்த இருதயத்திலிருந்து வரும் தூய்மையான ஜெபங்களுக்கும் மாதிரிகளை காணுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள். தீர்க்கமான பிராத்தனைகள் 7 நாட்கள் உங்கள் விசுவாசத்துடன் பாதுகாப்பாக விளையாடி களைப்படைந்து விட்டீர்களா? உங்கள் அச்சங்களை எதிர் கொள்ளவும், உங்கள் விசுவாசத்தை பேணிவளர்க்கவும், உங்கள் ஆற்றலை கட்டவிழ்த்து விடவும் நீங்கள் தயாரா? Life.Churchஇன் நல்லாயர் கிரேக் க்ரோஷெலின் புத்தகமான, அபாயகரமான பிராத்தனைகள், என்பதிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஏழு நாள் பைபிள் திட்டம் உங்களை துணிகரமாக பிரார்த்திக்க ஊக்குவிக்கும்- ஏனெனில் இயேசுவை பின்பற்றுவது ஒரு போதும் பாதுகாப்புடையதாக இருக்க உத்தேசப்படவில்லை. வேதாகமத்தை எப்படி வாசிக்க துவங்குவது 4 நாட்கள் உண்மையை ஏற்றுக்கொள்வோம்.: நாம் வேதாகமத்தை வாசிப்பது நல்லது என்று உணருகிறோம், ஆனால் எங்கு வாசிக்க துவங்குவது என்று தெரியாமல் இருக்கிறோம். இனி வரும் நான்கு நாட்களில், வேதாகமம் ஏன் முக்கியமானது என்றும், எவ்வாறு தினந்தோறும் வேதத்தை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவது என்றும், நம் வாழ்வில் அது எவ்வாறு உதவும் என்றும் நாம் கற்றுக்கொள்வோம்.
Posted on 2021-01-312021-06-07வாசிப்பு திட்டங்கள் – ஜனவரி 2021 Walk With Jesus – வாழ்க்கையில் மகிழ்ச்சி 6 நாட்கள் தேவனின் கிருபைகள் காலைதோறும் புதியவைகள். இந்த திட்டம் உங்களை ஒவ்வொரு நாளும் வாழ்கை பாதையில் தேவனோடு நடத்தி ஜெப வாழ்க்கையில் உறுதிப்பட வாழ்க்கையில் மகிழ்ச்சிப்பெற தேவ வார்த்தையால் பெலப்படுத்தும். இயேசு உங்களோடு தினமும் பேசி மகிழ்ச்சியோடு வழிநடத்த வாஞ்சிக்கிறார். உங்கள் இருதயங்களை அவருக்கு கொடுப்பீர்களா ? Walk with Jesus – பயப்படாதே ! 4 நாட்கள் இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எதிர்காலம், வியாதி, கடன் பிரட்சனை போன்ற காரியங்களினால் பயத்தோடு காணப்படலாம். ஆனால் எல்லா பயத்தையும் நீக்கி, ” பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன் ” என்று சொல்லும் கர்த்தராகிய இயேசு உங்களோடு உண்டு ! இயேசுவே, நீர் எனக்கு தேவை 2 நாட்கள் இயேசு உங்களுக்குத் தேவை என்பதை நீங்கள் ஆழமாக உணருகிறீர்களா? ஜெபத்திற்கான இந்த இரண்டு நாள் திட்டம் நீங்கள் அவருடன் தனியாக செலவிடும் நேரத்தை மேம்படுத்தவும் நீங்கள் அவரிடம் அழுவதற்கு உதவவுமே வடிவமைக்கப் பட்டுள்ளது. திசில்பென்ட் மினிஸ்ட்ரீஸின் “இயேசுவே நீர் எனக்கு வேண்டும்” என்ற எட்டு பாகம் கொண்ட தொடருக்கு ஜெபத்துணையாகவும் இது செயல்படுகிறது. ஜெபம் 21 நாட்கள் எப்படி ஜெபிப்பது என்று பக்தர்களின் ஜெபங்களிலிருந்தும் இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கைகளை தேவனிடம் தினமும், தொடர்ந்து பொறுமையாக எடுத்து செல்வதில் உற்சாகம் கண்டடையுங்கள். காலியான சுய நீதி நிறைந்த ஜெபங்களுக்கும், சுத்த இருதயத்திலிருந்து வரும் தூய்மையான ஜெபங்களுக்கும் மாதிரிகளை காணுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள். கவலை பற்றி வேதம் சொல்லும் 7 விஷயங்கள் 7 நாட்கள் ஒவ்வொரு நாளுக்கும் நம் வாழ்க்கையில் சிக்கலான புதிய சவால்களை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு அற்புதமான புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்த ஏழு நாள் தியானத்தில், YouVersion-இல் உள்ள ஊழியர்கள், இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லாவற்றிற்கும் கடவுளின் வார்த்தையிலிருந்து உண்மைகளைப் பயன்படுத்த உதவுகிறார்கள். ஒவ்வொரு நாளின் தியானத்திலும், கடவுள் உங்களிடம் பேசுவதைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் வசன படம் இணைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் குரல் 7 நாட்கள் ‘நம்பிக்கையின் குரல்’ – என்னும் நிகழ் ச்சியினை தொடர் ந்து கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். ‘Voice of hope’ an audio series of encouragement and hope for a time such as this. Listen and be blessed! உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள் 14 நாட்கள் ஜாய்ஸ் மேயரின் நடைமுறை வேதபாட போதனையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான வேத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், உங்கள் மனதைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் என்பதைக் கண்டறிய உதவுகிறது!
Posted on 2021-01-012021-10-14வாசிப்பு திட்டங்கள் – ஜனவரி 2021 தேவன் + இலக்குகள்: ஒரு கிறிஸ்தவராக இலக்குகளை எவ்வாறு அமைப்பது 5 நாட்கள் ஒரு கிறிஸ்தவராக நமக்காக ஒரு இலக்கை வைத்துக்கொள்வது சரியா? நமக்கு எப்படி தெரியும் அந்த இலக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது நமது ஆசையா என்று? சரி, கிறிஸ்தவ இலக்கு எப்படி இருக்கும்? இந்த 5 நாள் வாசிப்பு திட்டத்தில், வேதத்தை முற்றும் குடைந்து இந்த இலக்கை குறித்ததான பகுதியில் ஒரு தெளிவைப் பெற போகிறோம். அது மட்டுமல்லாது நமது திசையையும் அந்த கிருபையால் இயங்கும் இலக்கை நோக்கி திருப்ப போகிறோம்! ஜீவனைப் பேசுதல் 6 நாட்கள் வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள், சக்தி நிறைந்த வார்த்தைகள்! கட்டியெழுப்பும் வார்தைகள் அல்லது மனதை கிழிக்கும் வார்த்தைகள். உயிரைக் கொடுக்கும் வார்தைகள் அல்லது மரணத்தைக் கொண்டுவரும் வார்த்தைகள். தேர்வு நம்முடையது. நமது வார்த்தைகளில் உள்ள குறிப்பிடத்தக்க சக்தியை மதிப்பீடு செய்வோம். திருமணத்திற்கு-முன் பாடநெறி 5 நாட்கள் வலுவான திருமணங்கள் தானாகவே உருவாகாது. வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஆரோக்கியமான மற்றும் வலுவான திருமணத்தை உருவாக்க தேவையான அணுகுமுறைகள், மதிப்புகள் மற்றும் பழக்கங்களை நீங்கள் கண்டுபிடிக்கப் வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இந்த 5 நாள் திட்டமானது The Marriage புத்தகத்தின் ஆசிரியர்களான நிக்கி மற்றும் சிலா லீ ஆகியோரால் உருவாக்கப்பட்ட The Pre-Marriage பாடத்திட்டத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கனவுகள் மீட்கப்பட்டன 7 நாட்கள் நம்முடைய கனவுகள் எட்டாத தூரத்தில் இருப்பதுபோலவோ அல்லது தகர்க்கப்பட்டது போலவோ தோன்றும்போது நாம் என்ன செய்வோம்? அதிர்ச்சியையும் தூஷணங்களையும் மேற்கொண்டதோடு, விவாகரத்தின் மணமுறிவையும் சந்தித்தவளாக, இந்த கேள்வியை நான் அதிகதிகமாக சந்தித்திருக்கிறேன். நீ சோகத்தையோ அல்லது இழப்பையோ அனுபவித்துக்கொண்டிருக்கலாம், அல்லது நீண்ட காலமாக காத்துக்கொண்டிருப்பதால் விரக்தியில் இருக்கலாம், ஆனாலும் உன் வாழ்விற்குரிய தேவ-சித்தம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது! நண்பரே, மீண்டும் கனவுகாணும் நேரமிது.