Posted on 2023-12-01வாசிப்பு திட்டங்கள் – டிசம்பர் 2023 வாழ்க்கை மாற்றப்பட்டது: கிறிஸ்துமஸில் 5 நாட்கள் எல்லா விடுமுறை சலசலப்புகளிலும், நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்பதை எளிதாகப் பார்க்க முடியாது. இந்த 5-நாள் வருகைத் திட்டத்தில், இயேசுவின் பிறப்பால் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஆகியவற்றில் நாம் மூழ்குவோம். தேவன் யார் என்பதைப் பற்றி மேலும் அறியும்போது, நம்பிக்கை, நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் அமைதியுடன் விடுமுறைக் காலத்தில் வாழ்வது எப்படி என்பதைக் கண்டுபிடிப்போம். உலகின் ஒளி – யேசுபிறப்பு தியான திட்டம் 4 நாட்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ளனர். அட்வென்ட், கிறிஸ்மஸ் தினத்திற்கு வழிவகுக்கும் ஒரு அழகான அடையாளக் கொண்டாட்டம், பல நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் பெரும் பகுதியாகும். இந்த அற்புதமான அட்வென்ட் தியானத்தை நீங்கள் படிக்கும்போது, தொலைதூர நாடுகளில் உள்ள உங்கள் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து கொண்டாடவும், அவர்களின் தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த கண்ணோட்டங்கள் மற்றும் மரபுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். லூக்கா 12 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை லூக்கா நற்செய்தி நூல் துவக்கத்திலிருந்து இறுதி வரை நடத்தி செல்லும். கர்த்தரின் குரலைக் கண்டறிதல் // அவரைச் சந்திக்கக் கற்றறிதல் 4 நாட்கள் தேவனின் சத்தம் மென்மையான கிசுகிசுப்பாகவோ அல்லது கடும் புயல் காற்றாகவோ இருக்கக்கூடும். முக்கியமானது என்னவென்றால், அது எப்படி வெளிப்பட்டாலும் அதை அடையாளம் காண்பதே – அத்துடன் அவர் நன்மை செய்பவர் என உறுதியாக நம்புவது. ஆம், நமது எவ்விதமான போராட்டத்தின் சக்தியைவிட, அவர் வல்லமை மிக்கவர். நீங்கள் இந்த நான்கு – நாட்கள் தியானத் திட்டத்தில் இணைவதன் வழியாக, கர்த்தருடன் உறவாடுவது, அவரது சப்தத்தை, பிரசன்னத்தை உணர்வது எங்கனம் எனக் கற்றுக் கொள்ளலாம் – இத்தகைய அனுபவத்தைக் கண்டடைந்த சகோதர, சகோதரிகளுடன் விரைவாக இணைந்து கொள்ளுங்கள்.| நவீன வாழ்வியலில் தூயாவியானவர். வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (டிசெம்பர்) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 12 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய பகுதியை ஒவ்வொரு மாதமும் துவங்கும்போதும் பிறரையும் இணையும்படி அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 12ம் பகுதியானது ஏசாயா, மீகா, முதலாம் இரண்டாம் பேதுரு, முதலாம் இரண்டாம் மூன்றாம் யோவான் மற்றும் யூதா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.
Posted on 2023-11-01வாசிப்பு திட்டங்கள் – நவம்பர் 2023 இயேசு யார்? 5 நாட்கள் இயேசுவே கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாய் இருக்கிறார். இந்த 5 நாள் திட்டம் இயேசு யார் என்பதை பற்றிய ஆழமான தோற்றத்தைக் காண்பிக்கிறது. இயேசு: பாவங்களை மன்னிக்கிறவர், பாவிகளின் சிநேகிதர், ஒளியாயிருக்கிறவர், அற்புதங்களை நடப்பிக்கிறவர், உயிர்த்தெழுந்த கர்த்தர். வழிபாடு: சங்கீதத்தில் ஒரு ஆய்வு 106 நாட்கள் சங்கீதங்கள் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட கவிதைகள் மற்றும் பாடல்களின் தொகுப்பாகும். சங்கீதம் மகிழ்ச்சியான துதிகளையும் சோகமான புலம்பல்களையும் உள்ளடக்கியிருந்தாலும், முழு புத்தகமும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தம்முடைய மக்கள் மீது கடவுளின் விசுவாசமான அன்பிற்கு சாட்சியமளிக்கிறது. பழைய ஏற்பாட்டு வழிபாட்டின் மையமாக, ஒவ்வொரு சங்கீதமும் இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் கடவுளின் புகழின் உச்சக்கட்டத்தை எதிர்பார்க்கிறது. வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (நவம்பர்) 30 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 11 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 11ம் பகுதியானது உன்னதப்பாட்டு, எசேக்கியேல், ஓசியா, மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. கலாத்தியர் 3 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை கலாத்தியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது.
Posted on 2023-10-01வாசிப்பு திட்டங்கள் – அக்டோபர் 2023 நான் சரணடைகிறேன்: கைதிகளால் எழுதப்பட்ட ஊக்கமளிக்கும் திட்டம் 4 நாட்கள் பைபிள் மீட்பு, சுதந்திரம் மற்றும் நம்பிக்கையின் புத்தகம். அதன் பக்கங்களுக்குள் ஆற்றல் மிக்க கதாபாத்திரங்கள் உள்ளன. உடைந்த ஆண்களும் பெண்களும் பதில்களைத் தேடுகிறார்கள். ஒருவகையில், அவர்கள் நீங்கள் படிக்கவிருக்கும் பக்திப்பாடல்களை எழுதிய தற்போதைய மற்றும் முன்னாள் கைதிகளைப் போன்றவர்கள். கம்பிகளுக்குப் பின்னால் உள்ள தேவாலயத்தின் குரல்களால் நீங்கள் ஊக்குவிக்கப்படுவீர்கள் என்று நம்புகிறோம். அவர்களின் சாட்சி நம் அனைவரையும் விடுவிக்கட்டும். அமைதியில் அமர்ந்திருத்தல்: ஏழு நாட்கள் தேவனுடைய வாக்குத்தத்திற்குள் காத்திருத்தல் 7 நாட்கள் சில நேரங்களில் தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தம் இருக்கும், ஆனால் நம்முடைய வாழ்க்கைக்கும் அந்த வாக்குத்தத்துக்கும் சம்பந்தமே இராது. அல்லது நம் வாழ்வில் முச்சந்தியில் வந்து நின்றிருப்போம், எந்தப்பக்கம் செல்வது என்ற கேள்விக்கான பதிலை தேவன் பேச காத்துக்கொண்டிருப்போம், ஆனால் நமக்கு கேட்பது அவரது மௌனம் மாத்திரம். இந்த 7 நாள் தியானம் தேவன் மௌனமாய் இருக்கும்போது நாம் எப்படி அவரது சித்தப்படி செயல்படுவது என்று போதிக்கிறது. நிரம்பி வழிய 21 நாட்கள் 21 நாட்கள் நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்! வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (அக்டோபர்) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 10 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய திட்டத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும். ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 10ம் பகுதியானது பிரசங்கி, யோவான், எரேமியா, மற்றும் புலம்பல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.
Posted on 2023-09-02வாசிப்பு திட்டங்கள் – செப்டம்பர் 2023 எனக்குத் தேவையான அனைத்தும் 3 நாட்கள் தேவன் நமக்கு முன்பு சென்று நம்மை பின்னிருந்து பாதுகாத்திருக்கிறார். அவர் நம்முடைய யுத்தங்கள் அனைத்தையும் ஏற்கனவே கையாழ்ந்திருக்கிறார். நாம் காணக்கூடாதவைகளை சரிசெய்து இருக்கிறார். திடீர் திருப்பங்களை கண்டு அவர் அஞ்சுவதில்லை. இந்த 3 நாள் தியான பகுதி உன்னை உற்சாகப்படுத்தி தேவன் சரியான பங்கு மற்றும் சரியான அளவை உன் ஜீவியத்திற்கு கொடுக்கிறார் என்று உணர வைக்கும். ஜீவனைப் பேசுதல் 6 நாட்கள் வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள், சக்தி நிறைந்த வார்த்தைகள்! கட்டியெழுப்பும் வார்தைகள் அல்லது மனதை கிழிக்கும் வார்த்தைகள். உயிரைக் கொடுக்கும் வார்தைகள் அல்லது மரணத்தைக் கொண்டுவரும் வார்த்தைகள். தேர்வு நம்முடையது. நமது வார்த்தைகளில் உள்ள குறிப்பிடத்தக்க சக்தியை மதிப்பீடு செய்வோம். நாம் சேர்ந்து பைபிளை வாசிப்போம் (செப்டம்பர்) 30 நாட்கள் 12 பாகம் கொண்ட தொடரின் 9வது பாகம், இந்த திட்டம் 365 நாட்களில் முழு பைபிள் மூலம் ஒன்றாக தொடர்புபடுத்த வழிவகுக்கிறது. நீங்கள் எப்போதும் ஒரு புதிய பகுதியை ஒவ்வொரு மாதத்திலும் தொடங்கும் போது பிறரையும் சேர அழைக்கவும். இந்த தொடர் ஒலி பைபிளில் நன்றாக இயங்கும் – ஒரு நாளைக்கு 20-க்கும் குறைவான நிமிடங்களில் கேளுங்கள்! ஒவ்வொரு பிரிவிலும், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அத்தியாயங்களோடு சங்கீதங்களும் முழுவதும் சிதறி இருக்கும். நெகேமியா, எஸ்தர், முதல் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு, யோவேல், ஆமோஸ், ஒபதியா நாகூம், ஆபகூக், செப்பனியா, தீத்து, பிலேமோன், யாக்கோபு, ஆகாய், சகரியா, மல்கியா புத்தகங்களை பகுதி 9 கொண்டுள்ளது.
Posted on 2023-08-01வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2023 ஒய்வு நாள் – தேவனின் தாளத்தின்படி வாழ்வது 8 நாட்கள் இவாஞ்சலிகல் அலையன்ஸ் வீக் ஆஃப் பிரேயர் (WOP) என்பது ஐரோப்பிய சுவிசேஷக் கூட்டணியால் வழங்கப்பட்ட உள்ளடக்கத்துடன் உலகளாவிய ஆனால் பெரும்பாலும் ஐரோப்பா முழுவதும் அனுசரிக்கப்படும் முயற்சியாகும். WOP 2022 “ஒய்வு” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. எட்டு நாட்கள் முழுவதும் வாசகர்கள் ஓய்வின் ஒரு அம்சத்தில் கவனம் செலுத்த அழைக்கப்படுகிறார்கள்: அடையாளம், ஏற்பாடு, ஓய்வு, இரக்கம், நினைவு, மகிழ்ச்சி, பெருந்தன்மை மற்றும் நம்பிக்கை. தேவனின் தாளத்தின்படி ஒரு வாழ்க்கையை (மீண்டும்) கண்டறிய இந்த பொருள் உங்களுக்கு உதவும் என்று நாங்கள் ஜெபம் செய்கிறோம்! ராஜ்ஜியம் வருவதாக 15 நாட்கள் இயேசு “முழுமையான வாழ்க்கையை” வழங்குகிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், அந்த அனுபவத்தை நாங்கள் விரும்புகிறோம். மாற்றத்தின் மறுபக்கத்தில் இருக்கும் அந்த வாழ்க்கையை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நமக்கு என்ன மாதிரியான மாற்றம் தேவை? மற்றும் நாம் மாற்றும் செயல்முறை பற்றி எப்படி செல்ல வேண்டும்? கிங்டம் கம்வில், தேவன் நம்மை அழைக்கும் தலைகீழான மற்றும் உள்-வெளி வாழ்க்கையை வாழ்வதற்கான புதிய வழியை நீங்கள் ஆராய்வீர்கள். வெற்றிக்கான தேவ பாதை 3 நாட்கள் எல்லோரும் வெற்றி அடைய விரும்புகிறார்கள், ஆனால் எல்லோரும் வெற்றி அடைவதில்லை ஏனெனில் அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தவறான அர்த்தம் கொடுத்து அதை பின் தொடர்கிறார்கள். உண்மையான வெற்றியை அடைய உங்களை பார்வை தேவன் எதை வெற்றி என்று நிர்ணயிக்கிறாரோ அதின்மேல் இருக்க வேண்டும். மிகச்சிறந்த எழுத்தாளரான டோனி இவான்ஸ் அவர்கள் இத்திட்டத்தில் உண்மையான இராஜ்யத்தின் வெற்றி எது என்பதையும் அதை எப்படி அடைவது என்பதையும் விளக்குகிறார். நம் மத்தியஸ்தராகிய இயேசுவை பின்பற்றுதல் 7 நாட்கள் சாலை ஓரத்திலிருந்து நம்பிக்கையின்றி கதறும் கண்பார்வையற்ற பிச்சைக்காரன், அசிங்கம் என்று சொல்லி கலாச்சாரத்தால் துச்சமாக எண்ணப்படும் ஒழுக்கமற்ற பெண், அனைவராலும் வெறுக்கப்படும் ஊழல் பேர்வழியான அரசாங்க பணியாளர் — சமுதாயத்தின் விளிம்புகளில் இருக்கும் இப்படிப்பட்ட மக்கள் ஒரு பரிசுத்தமான தேவனுடன் உறவுக்கொள்ள எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆப்பிரிக்க ஆராய்வு வேதாகமத்தில் லூக்கா புத்தகத்திலுள்ள கருத்துகளை சார்ந்த இந்த வாசிப்பு திட்டத்தில், தேவனுக்கும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியில் இயேசு பாலம் அமைப்பதை பின்தொடருங்கள். வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஆகஸ்டு) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 8வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 8ம் பகுதியானது முதலாம் இரண்டாம் நாளாகமம், முதலாம் இரண்டாம் தெசலோனியர் மற்றும் எஸ்றா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.