Posted on 2023-06-25வாசிப்பு திட்டங்கள் – ஜூலை 2023 ஒப்பீட்டிலிருந்து விடுபடுங்கள் அன்னா லைட்டின் 7 நாள் வாசிப்பு திட்டம் 7 நாட்கள் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை விட அபரிமிதமான ஒரு வாழ்வை ஆண்டவர் உங்களுக்கு தருகிறார் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் சோகமான உண்மை என்னவென்றால், ஒப்பீடு உங்களை அடுத்த நிலைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது. இந்த வாசிப்புத் திட்டத்தில், அன்னா லைட் வெளிப்படுத்துகிற ஆழ்ந்த அறிவு, ஒப்பிடுதல் உங்கள் செயல்திறன்களின் மீது இடுகின்ற தடைகளை உடைத்து, ஆண்டவர் உங்களுக்காக அமைத்திருக்கிற சுதந்திரமும் அபரிமிதமுமான வாழ்க்கையை வாழ உதவும் பிடிவாதம் – லிசா பெவரேவுடன் 6 நாட்கள் உண்மை என்றால் என்ன? கலாச்சாரமானது உண்மை என்பது ஒரு நதி என்றும், காலப்போக்கில் அது எல்லாவற்றையும் தாண்டி பாய்கிறது என்றும் நமக்கு ஒரு பொய்யை போதித்து வருகிறது. ஆனால் உண்மை என்பது அது நதி அல்ல-அது பாறை. பொங்கி எழும் உங்கள் மனதின் கருத்துக்களில், இந்தத் திட்டம் உங்கள் ஆத்மாவை நங்கூரமிட உதவும் – அலைந்து திரியும் இவ்வுலகில் உங்களுக்கு திசையின் தெளிவான உணர்வைத் தரும். தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் – ஞானம் 5 நாட்கள் நாம் கடந்து செல்லும் அன்றாட வாழ்க்கைப் பாதையில் நம்மை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி நமக்கு உதவி செய்வதே தேவனின் இருதயத்தைத் தினமும் தேடுதல் என்ற 5-நாள் வாசிப்பு திட்டத்தின் நோக்கமாகும். பாய்டு பெய்லி அவர்கள் சொல்கிறார்கள், “உங்களுக்கு தேவனைத் தேட வேண்டும் என்ற விருப்பம் இல்லாதிருக்கும் நேரங்களிலும் அல்லது அதிக ஓய்வே இல்லாதிருக்கும் நேரங்களிலும் கூட அவரைத் தேடுங்கள், அப்பொழுது அவர் உங்கள் உண்மைக்குப் பலன் அளிப்பார்”. வேதம் சொல்லுகிறது, “அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்”. சங்கீதம் 119:2 இருதயத்தின் எதிரிகள் 5 நாட்கள் எப்படி ஒரு ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களுடைய சரீரத்தைப் பாதிக்க முடியுமோ, அப்படியே உணர்வு மற்றும் ஆவிக்குரிய ரீதியாக ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களையும், உங்கள் உறவுகளையும் பாதிக்க முடியும். அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு, ஆண்டி ஸ்டான்ட்லி அவர்கள் உங்களுக்குள் காணப்படுகிற இருதயத்தின் நான்கு பொதுவான எதிரிகளான குற்றவுணர்ச்சி, கோபம், பேராசை, மற்றும் பொறாமை போன்றவைகளை உற்றுநோக்க உதவிசெய்து, அவைகளை எவ்வாறு அகற்றுவது என்பதைப் போதிக்கட்டும்.
Posted on 2023-06-01வாசிப்பு திட்டங்கள் – ஜூன் 2023 தெய்வீக கால நிர்வாகம் 6 நாட்கள் உலகப்பிரகாரமாக நேரத்தை நன்மையாக கடைபிடிக்கும் பொது நம்முடைய சொந்த பெலத்தாலும் சுய ஒழுங்கினாலும் வாழ்க்கையை அடக்க முயலுவது மன அழுத்தத்தை உண்டாக்கும். வேதாகமம் சொல்கிறது நம்முடைய நேரத்தை தேவனிடம் விசுவாசித்து கொடுக்கும்போது நாம் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்வோம் என்று. இந்த 6 நாள் திட்டத்தில், நேரத்தை தேவனோடு கால நிர்வாகம் செய்யும்பொழுது தேவன் கொண்டிருக்கும் எல்லா நன்மைகளையும், அவருடைய சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்று கற்றுக்கொள்வோம். தேவனே, என்னைப் பற்றி என்ன? 5 நாட்கள் நாம் வாழ்க்கையில் பின்தங்கிவிட்டதாக உணரும்போது, நாட்கள் செல்ல செல்ல ஒப்பிடும் குரல் சத்தமாகும்போது, தேவன் நம் நடுவில் நடமாடுவதை நாம் அடிக்கடி பார்க்கத் தவறிவிடுகிறோம். இந்த தருணங்களில் தான் நமது விசுவாசம் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த பக்திப்பாடலைப் படித்து, தேவனுக்கான உங்கள் காத்திருப்பில் உற்சாகமடையுங்கள். பாதுகாப்பாக இருப்பது போதும் என்ற மனம் வேண்டாம் 3 நாட்கள் பாதுகாப்பின்மை, சந்தேகம் மற்றும் பயம் ஆகியவற்றின் குரல்கள் எதிர்கொள்ளப்படாவிட்டால், அவை உங்கள் வாழ்க்கையை ஆணையிடும். இந்த குரல்களை நீங்கள் மௌனமாக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது. இந்த 3-நாள் வாசிப்புத் திட்டத்தில், சாரா ஜேக்ஸ் ராபர்ட்ஸ் உங்கள் கடந்த கால வரம்புகளை எவ்வாறு மீறுவது மற்றும் தடுக்க முடியாததாக மாறுவதற்கு சங்கடமானவற்றை எவ்வாறு தழுவுவது என்பதைக் காட்டுகிறது. நீங்கள் பிரியத்திற்குரியவர்கள் 4 நாட்கள் தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் யாராயிருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்களை எங்கேயிருந்தாலும், கர்த்தர் உங்களை நேசிக்கிறார்! இந்த மாதம், அன்பைக் கொண்டாடும் தருணத்தில், எந்த அன்பைக் காட்டிலும் தேவ அன்பே சிறந்தது என்பதை மறந்து விடாதிருங்கள். இந்த நான்கு நாள் திட்டத்தில், தேவ அன்பில் உங்களை அமிழ்த்திக் கொள்ளுங்கள்.
Posted on 2023-04-28வாசிப்பு திட்டங்கள் – மே 2023 வாழ்க்கை மாற்றப்பட்டது: அடையாளத்தைத் தழுவுதல் 6 நாட்கள் நாம் யாராக இருக்க வேண்டும் என பல குரல்கள் சொல்கையில், நமது அடையாளத்தை குறித்து நாம் போராடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவன் நமது வேலையை வைத்தோ, திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கொண்டோ, நமது தவறுகளைக் கொண்டோ நம்மை வரையறுக்க விரும்பவில்லை. நம் வாழ்வில் அவருடைய கருத்தே உயரிய அதிகாரம் இருக்க வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார். இந்த ஆறு நாள் திட்டம் வேதம் நீங்கள் யார் என்று சொல்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் அதை தழுவிக் கொள்ளவும் உதவும். விட்டுவிடாதீர்கள் 7 நாட்கள் நீங்கள் எப்போதாவது மிகவும் சோர்வாக அல்லது தோல்வியடைந்தது போல் உணர்ந்திருக்கிறீர்களா? விடாமுயற்சியுடன் இருப்பதற்கும் தொடர்ந்து முன்னேறுவதற்கும் வேதாகமம் ஊக்கமளிக்கிறது! இந்த 7 நாள் வாசிப்புத் திட்டம் முன்னோக்கிய பயணத்திற்கு உங்களைப் புதுப்பிக்கும். அடிமைத்தனத்திலிருந்து ஒரு முழுத்திருப்பம் 3 நாட்கள் உங்கள் வாழ்க்கை கடவுளுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகவில்லை என்றால், நீங்கள் நிச்சயமாக வேதனையான விளைவுகளை அனுபவிப்பீர்கள். பலர் தங்கள் உடல்நலத்துடன் போராடி, வேலைகளை இழந்துள்ளனர், உறவுகளை இழந்துள்ளனர், மேலும் போதைக்கு அடிமையானதால் கடவுளிடமிருந்து தொலைவில் இருப்பதாக உணர்கின்றனர். போதைப்பொருள் அல்லது ஆபாசப் படங்கள் போன்ற தீவிர அடிமைத்தனம் அல்லது உணவு அல்லது பொழுதுபோக்கு போன்ற குறைவான அடிமைத்தனம் போன்றவையாக இருந்தாலும், போதை பழக்கம் நம் வாழ்க்கையை சீர்குலைக்கிறது. அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் டோனி எவன்ஸ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வழியைக் காட்டட்டும். விற்பனையாகும் எழுத்தாளர் டோனி எவன்ஸ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வழியைக் காட்டட்டும். கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்? 5 நாட்கள் கேள்விகள்: கர்த்தரைப் பொறுத்தவரையில் நம் எல்லோருக்குமே இவை உண்டு. நமது ‘ஒப்பிட்டுப் பார்க்கும் கலாச்சாரம்’, நம்மை மிக அந்தரங்கமான கேள்விகளை நம்மையே கேட்க வைக்கிறது: “கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?” அல்லது “எப்படி அவர் என்னை நேசிக்க முடியும்?” என்று கூட கேட்கலாம். இந்த திட்டத்தில் 26 வேத பகுதிகளுடன் நீங்கள் ஈடுபடுத்தப்படுவீர்கள்- அவை உங்கள் மீதான கர்த்தரின் அன்பு நிபந்தனையற்றது என்ற உண்மையை எடுத்துக்கூறும்.
Posted on 2023-03-30வாசிப்பு திட்டங்கள் – ஏப்ரல் 2023 ஏன் ஈஸ்டர்? 5 நாட்கள் ஈஸ்டரைக் குறித்த மிகவும் முக்கியமானது என்ன? ஏன் 2000 வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு மனிதர் மீது இவ்வளவு அதிகமான ஆர்வம்? ஏன் பல மக்கள் இயேசுவைக்குறித்து உற்சாகமாக உள்ளனர்? ஏன் நமக்கு அவர் தேவை? எதற்காக அவர் வந்தார்? எதற்காக அவர் மரித்தார்? எதற்காக இவற்றை கண்டுபிடிக்க யாரும் முயல வேண்டும்? இந்த 5-நாள் திட்டத்தில், நிக்கி கும்பெல் அவர்கள் இதே கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை பகிர்கிறார். 1 & 2 தீமோத்தேயு 5 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை 1 மற்றும் 2 தீமோத்தேயு வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. சமூக மாற்றம் பற்றிய ஒரு வேதகாமப் பார்வை 5 நாட்கள் பல கிறிஸ்தவ குழுக்கள் ஆவிக்குரிய தேவைகள் அல்லது உடல் தேவைகளை பூர்த்தி செய்வதில் அக்கறை கொண்டுள்ளனர். கிறிஸ்தவர்களாகிய நமது முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும்? இந்த விஷயத்தில் வேதகமத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
Posted on 2023-03-02வாசிப்பு திட்டங்கள் – மார்ச் 2023 ஆறு நாட்களிள் கர்த்தரின் பெயர்கள் 6 நாட்கள் தேவனின் பல நாமங்களில் இருந்து, அவருடைய குணாதிசயங்கள் மற்றும் அவரது இயல்புகளின் அம்சங்களை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்குப்புறமே, தேவனின் 80 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாமங்களை வேதாகமம் காண்பிக்கிறது. ஒரே உண்மையான தேவனிடம் நெருங்கி வர விசுவாசிக்கு உதவும் ஆறு பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளன. டாக்டர். டோனி எவன்ஸ் எழுதிய கடவுளின் நாமங்களின் வல்லமையை அனுபவிப்பது: ஜீவன் கொடுக்கும் பக்திக்குரியன. ஹார்வெஸ்ட் ஹவுஸ் பப்ளிஷர்ஸ், யூஜின், ஓரிகான் 2017. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள் 7 நாட்கள் ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். உங்கள் வேலைக்கு அர்த்தம் கொடுங்கள் 4 நாட்கள் நம்மில் அநேகர் ஐம்பது சதவிகித நேரத்தை நம் வேலைகளை செய்வதில்தான் செலவிடுகிறோம். நமது வேலைக்கு அர்த்தம் உள்ளதா என்பதையும், நாம் செய்யும் வேலை முக்கியமானதுதானா, என்பதையும் நாம் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், மன உளைச்சலும், தேவைகளும், துன்பங்களும் வேலையை குறித்த நமது கண்ணோட்டத்தை கடினமானதாகவும், இதை எப்படியாகிலும் முடித்தால் போதும் என்பதாகவும் மாற்றுகின்றன. உங்கள் வேலைக்கு ஒரு அர்த்தத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உங்கள் விசுவாசத்தில்தான் வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழுங்கள்: ஜான் பைப்பருடன் தியானங்கள் 7 நாட்கள் பரிசுத்த ஆவியானவரை குறித்து ஜான் பைப்பரின் 7 வேதாகம தியானங்கள்