Posted on 2023-02-02வாசிப்பு திட்டங்கள் – பிப்ரவரி 2023 இயேசு என்னை நேசிக்கிறார் 7 நாட்கள் யாரோ ஒருவர், “நான் கிறிஸ்தவனாயிருப்பதற்கு எதை விசுவாசிக்க வேண்டும்?” என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? “இயேசு என்னை நேசிக்கிறார், இதை நான் அறிவேன், ஏனெனில் வேதாகமம் அவ்வாறு சொல்லுகிறது”, என்ற நேசிக்கப்படுகிற பாடலின் வரிகளைக் கொண்டு எதை விசுவாசிக்க வேண்டும் ஏன் என்று பத்திரிக்கையாளராய் இருந்து போதகரானவர் விளக்குகிறார். சிறந்த ஆசிரியர் ஜான் எஸ், டிக்கர்சன் அவசியமான கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் அவை எதனால் முக்கியம் என்பதை உண்மையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். நோக்கத்திற்கு இணங்க நிற்பது 5 நாட்கள் என்னுடைய நோக்கம் என்ன? நான் என் ஜீவனை கொண்டு என்ன செய்ய எதிர்பார்க்கப்படுகிறது? எனக்காக தேவனுடைய திட்டம் என்ன? இவைகளெல்லாம் நாம் நம் ஜீவியத்தில் எதோ ஒரு வேளையில் கேட்கும் கேள்விகள். உங்கள் நோக்கத்தை குறித்து இந்த திட்டத்தில் சில கேள்விகளை நாம் பதிலளிக்க போகிறோம். இந்த தலைப்பில் சில காரியங்களை பதிலளிக்க முயலும் எங்கள் C3 கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து வாசியுங்கள். கனவுகள் மீட்கப்பட்டன 7 நாட்கள் நம்முடைய கனவுகள் எட்டாத தூரத்தில் இருப்பதுபோலவோ அல்லது தகர்க்கப்பட்டது போலவோ தோன்றும்போது நாம் என்ன செய்வோம்? அதிர்ச்சியையும் தூஷணங்களையும் மேற்கொண்டதோடு, விவாகரத்தின் மணமுறிவையும் சந்தித்தவளாக, இந்த கேள்வியை நான் அதிகதிகமாக சந்தித்திருக்கிறேன். நீ சோகத்தையோ அல்லது இழப்பையோ அனுபவித்துக்கொண்டிருக்கலாம், அல்லது நீண்ட காலமாக காத்துக்கொண்டிருப்பதால் விரக்தியில் இருக்கலாம், ஆனாலும் உன் வாழ்விற்குரிய தேவ-சித்தம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது! நண்பரே, மீண்டும் கனவுகாணும் நேரமிது.
Posted on 2023-01-02வாசிப்பு திட்டங்கள் – ஜனவரி 2023 தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள் 6 நாட்கள் ஒரு நாளில் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக இல்லை என்று நீங்கள் விரக்தியடைகிறீர்களா? உங்கள் டூ-டூ பட்டியலில் உள்ள திட்டங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது? சோர்வில் சோர்வடைந்து தேவனுடைய வார்த்தையை உங்கள் நண்பர்களிடமும் குடும்பத்துடனும் செலவழிக்க போதுமான நேரம் இல்லாததா? இவை உலகில் மிகவும் பொதுவான போராட்டங்களாக இருக்கலாம். நல்ல செய்தி என்னவென்றால் நம் காலத்தை நிர்வகிப்பதற்கு தெளிவான நியமங்களை வேதாகம் நமக்கு அளிக்கிறது. இந்தத் திட்டம் அந்த வேதவாக்கியங்களின் முலம் வெளிப்படுத்தி, இந்த வாழ்க்கையின் மிதமுள்ள நேரத்தை எப்படி செலவழிப்பது என்பதற்கான தரமான நடைமுறை ஆலோசனையை உங்களுக்குக் கொடுக்கும்! உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வார்த்தை 4 நாட்கள் ஆண்டு முழுவதும் ஒரு வார்த்தையில் மட்டும் கவனம் செலுத்துவதனால் உங்கள வாழ்க்கையை எளிமையாக்க ‘ஒரு வார்த்தை’ உதவுகிறது. தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் ஒரு வார்த்தையை கண்டறிவதன் எளிமை வாழ்க்கை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. குழப்பமும் சிக்கலும் தள்ளிப்போடுவதற்கும் முடக்குவதற்கும் நேராக நடத்துகின்றன, ஆனால் எளிமையும் ஒருமுகமும் வெற்றி மற்றும் தெளிவுக்கு நேராக நடத்துகின்றன. இந்த ஆண்டிற்கான ஒரு வார்த்தை தரிசனத்திற்கான மையத்தை அடைவது எப்படி என்று இந்த நான்கு நாள் தியானம் காட்டுகிறது.