Posted on 2022-08-30வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2022 நாம் சேர்ந்து பைபிளை வாசிப்போம் (செப்டம்பர்) 30 நாட்கள் 12 பாகம் கொண்ட தொடரின் 9வது பாகம், இந்த திட்டம் 365 நாட்களில் முழு பைபிள் மூலம் ஒன்றாக தொடர்புபடுத்த வழிவகுக்கிறது. நீங்கள் எப்போதும் ஒரு புதிய பகுதியை ஒவ்வொரு மாதத்திலும் தொடங்கும் போது பிறரையும் சேர அழைக்கவும். இந்த தொடர் ஒலி பைபிளில் நன்றாக இயங்கும் – ஒரு நாளைக்கு 20-க்கும் குறைவான நிமிடங்களில் கேளுங்கள்! ஒவ்வொரு பிரிவிலும், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அத்தியாயங்களோடு சங்கீதங்களும் முழுவதும் சிதறி இருக்கும். நெகேமியா, எஸ்தர், முதல் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு, யோவேல், ஆமோஸ், ஒபதியா நாகூம், ஆபகூக், செப்பனியா, தீத்து, பிலேமோன், யாக்கோபு, ஆகாய், சகரியா, மல்கியா புத்தகங்களை பகுதி 9 கொண்டுள்ளது. ரூத், மீட்பின் கதை 5 நாட்கள் வேதாகமத்தின் மற்ற நபர்களைவிட ரூத்தோடு உணர்வுப் பூர்வமாக நம்மைத் தொடர்புபடுத்தி பார்க்க முடியும்; எளிமையானவள், அந்நிய தேசத்திலிருந்து வந்த விதவை, ஆனால் தேவனை முதன்மைபடுத்தி அவர் தன் வாழ்வை மாற்றுவதை பார்த்தவள். உங்கள் சூழலின் மத்தியில் ஊக்கம் தேவைப்படுமெனில், இந்த வாசிப்பு திட்டத்தை தவற விடாதேயுங்கள்! ஒவ்வொரு அடியும் ஒரு ஆகமனம் 5 நாட்கள் யூஜீன் பீட்டர்சன் மூலம் வந்த இந்த ஐந்து பக்தி வழிபாடுகள் உங்கள் மனதையும் இருதயத்தையும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் என நம்புகிறோம், ஏனெனில் புனித ஆவி ஊக்கமளிக்கவோ, சவாலிடவோ அல்லது ஆறுதல் அளிக்கவோ எதை பயன்படுத்தும் என அறிய முடியாது. ஒவ்வொரு பக்தி வழிபாட்டின் இறுதியில் உள்ள பிரதிபலிக்கும் வினாக்களை உங்கள் சொந்த பிரார்த்தனைக்கு அந்த நாளுக்கு தேர்வு செய்யலாம்-நிச்சயமாக கடைப்புள்ளியாக அல்ல ஆனால் உங்களுக்கு வர இருக்கும் ஆகமனங்களுக்கு ஒரு தொடக்கமாக.
Posted on 2022-07-26வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஆகஸ்டு) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 8வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 8ம் பகுதியானது முதலாம் இரண்டாம் நாளாகமம், முதலாம் இரண்டாம் தெசலோனியர் மற்றும் எஸ்றா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. மரணத்தின் மீது வெற்றி 7 நாட்கள் “இது வாழ்க்கையின் மற்றொரு பகுதி” என்று நாம் எப்போதும் கூறப்படுகிறோம், ஆனால் சாதாரணமான வார்த்தைகள் நேசிப்பவரை இழக்கும் வேதனையை குறைக்காது. வாழ்க்கையின் கடினமான சவால்களில் ஒன்றை எதிர்கொள்ளும்போது தேவனிடம் ஓட கற்றுக்கொள்ளுங்கள். தைரியம் 1 வாரம் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்று கற்றுக்கொள்ளுங்கள். “தைரியம்” வாசிப்புத்திட்டம் விசுவாசிகளை அவர்கள் கிறிஸ்துவுக்குள் யார் என்றும் தேவனுடைய ராஜ்யத்தில் யார் என்றும் நினைவூட்டுவதன் மூலம் உற்சாகப்படுத்திகிறது. நாம் தேவனுடையவர்களாக இருக்கும் போது, நாம் அவரை நேரடியாக அணுக முடியும். தேவனுடைய குடும்பத்தில் உங்கள் இடம் பத்திரமாக இருக்கிறது என்று உறுதி பெற – மீண்டும் அல்லது முதல் முறையாக – படியுங்கள். நிச்சயமற்ற காலங்களில் உறுதி 5 நாட்கள் நிச்சயமற்ற நிலைமைகளிலும், நிச்சயமானவராய் இருக்கும் தேவன்! நாம் சகோதரர் டேவிட் வில்லா அவர்களுடன் இணைந்து இந்த சமீபத்திய திட்டத்தை நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர் மறையைக் கடந்து மிகவும் பெரிய சிறப்பான ஒன்றை அடைவதற்காக தியானிக்க இருக்கிறோம்.
Posted on 2022-07-02வாசிப்பு திட்டங்கள் – ஜூலை 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஜூலை) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 7 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் -தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 7ம் பகுதியானது இரண்டாம் சாமுவேல், முதலாம் இரண்டாம் இராஜாக்கள் மற்றும் மாற்கு புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் வணிகம் 6 நாட்கள் நான் பல ஆண்டுகளாக ஒரு பொய்யை நம்பி வாழ்ந்து வந்தேன். இந்த பொய்யானது கிறிஸ்தவ வட்டாரங்களில் மிகவும் பொதுவானது. நான் மதச்சார்பற்ற-புனிதமான ஒரு கருத்தில் நம்பிக்கை வைத்திருந்தேன். அது என்னைத் தடுத்து நிறுத்தியது. பரத்தை பூமிக்குக் கொண்டு வரவும், வணிகம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெறவும் தேவன் எவ்வாறு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை அளிக்க விரும்புகிறார் என்பதை ஆராய என்னுடன் இத்திட்டத்தில் சேரவும். பெரும்பாலான “முழுநேர ஊழியர்களை” விட இந்த உலகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர உங்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன, இந்த வேதாகம திட்டம் அது எப்படி என்பதை உங்களுக்குக் காண்பிக்கும்! மீண்டும் தொடங்கவும் 7 நாட்கள் புத்தாண்டு. ஒரு புதிய நாள். புதிய தொடக்கங்களின் தேவன் தாம் என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காகவே தேவன் இந்த மாற்றங்களைப் படைத்தார். தேவன் தன்னுடைய வார்த்தையினால் உலகத்தை கொண்டு வரமுடியும் என்றால், அவர் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையின் இருளில் பேச முடியும், உங்களுக்கு ஒரு புதிய தொடக்கம் உருவாகும். நீங்கள் புதிய தொடக்கங்களை நேசிக்கவில்லையா! இந்த வாசிப்பு திட்டத்தைப் போலவே. துய்த்து மகிழ்! பழைய ஏற்பாடு – சிறிய தீர்க்கதரிசிகள் 25 நாட்கள் எளிமையான திட்டம் உங்களை பழைய ஏற்பாட்டிலுள்ள சிறிய தீர்க்கதரிசிகள் வழியாக உங்களை நடத்திச் செல்லும். ஒரு சில அதிகாரங்களாக ஒவ்வொரு நாளும் படிப்பதற்கு ஏதுவாக, இந்த திட்டம் தனியாக அல்லது குழுவாக படிப்பதற்கு மிகவும் ஏற்றது.
Posted on 2022-06-02வாசிப்பு திட்டங்கள் – ஜூன் 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஜூன்) 30 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 6 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் -தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 6ம் பகுதியானது எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், யோனா, நியாயாதிபதிகள், ரூத் மற்றும் முதலாம் சாமுவேல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. தேவன் _______ 6 நாட்கள் தேவன் யார்? எப்படிபட்டவர்? என்று கேட்டால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில்களை சொல்லுவோம். நமக்கே ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பதில்கள் நம்முடைய எண்ணங்களில் தோன்றும். ஆனால், இவைகளில் எவை உண்மை, எவை உண்மை அல்லவென்று எப்படி அறிந்துகொள்ளுவோம்? நீங்கள் யாராய் இருந்தாலும், எப்படிப்பட்ட அனுபவத்தை உடையவராய் இருந்தாலும், எந்த திருச்சபையை சேர்ந்தவராக இருந்தாலும், தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் உங்கள் அருகில் இருக்கிறார், அவர் உங்களை சந்திக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதல்படியாக போதகர் கிரேக் க்ரோஷல் அவர்களுடைய ‘தேவன் _______’ என்கிறதான இந்த 6 நாள் வேத தியான திட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 11 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை வெளிப்படுத்தின விசேஷம் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது.
Posted on 2022-05-02வாசிப்பு திட்டங்கள் – மே 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (மே) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 5 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 5ம் பகுதியானது முதலாம் இரண்டாம் கொரிந்தியர், உபாகமம் மற்றும் யோசுவா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. 1, 2 மற்றும் 3 யோவான் 4 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை 1, 2 மற்றும் 3 யோவான் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. மாற்றமடைந்து வாழுதல்: நோக்கம் 5 நாட்கள் தேவன் உங்களை எதற்காக படைத்தார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா அல்லது சில அனுபவங்களின் ஊடக நீங்கள் ஏன் போக நேரிடுகிறது என்று அவரிடம் கேட்டிருக்கிறீர்களா? உங்களால் மட்டுமே நிரப்பக்கூடிய அல்லது செய்யக்கூடிய ஒரு வேலைக்காக நீங்கள் தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தொலைந்து போனதாக உணர்ந்தாலும், அல்லது நீங்கள் நகரத் தயங்கினாலும், இந்த 5 நாள் திட்டமானது நீங்கள் தேவனை நம்ப உதவும், எனவே அவரால் உங்களை உங்களது நோக்கத்திற்கு நேராக அழைத்துச் செல்ல முடியும்.