Posted on 2024-09-01வாசிப்பு திட்டங்கள் – செப்டம்பர் 2024 இதன் மூலம் கடவுளைத் தேடு 10 நாட்கள் மனச்சோர்வு. கவலை. தூண்டுதல்கள் மற்றும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நம்மை மன, உணர்ச்சி மற்றும் ஆன்மீக ரீதியாக பாதிக்கின்றன. இப்படிப்பட்ட காலத்தில் கடவுளைத் தேடுவது கடினமானதாகவும் தேவையற்றதாகவும் தெரிகிறது. “இதன் மூலம் கடவுளைத் தேடு” என்ற திட்டம், உங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், கடவுளின் அமைதியை நீங்கள் அனுபவிப்பதற்காக, கடவுளின் முன்னிலையில் எவ்வாறு செயலூக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்கவும் கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடினமான காலங்களில் கடந்து செல்லுதல் 4 நாட்கள் நம் வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த குறுகிய 4-நாள் திட்டத்தில், நாம் தனியாக இல்லை என்பதையும், நம் வலிக்கு தேவன் ஒரு நோக்கம் வைத்து இருப்பதையும், அதை அவர் தனது பெரிய நோக்கத்திற்காக பயன்படுத்துவார் என்பதையும் அறிந்து உற்சாகமடைவோம். எல்லா தேவைகளுக்கும் தேவ வசனம் 5 நாட்கள் வாழ்க்கை கடினமாக இருக்கலாம், மேலும் நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும்போதும், ஊக்கம் தேவைப்படும்போதும் செல்ல சிறந்த இடம் தேவனின் வாசகமே. ஆனால் சில நேரங்களில் எங்கு பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது கடினம். வேதாகமம் வாழக்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளில் தேவ வசன மாணவர் அனைவருக்கும் எல்லா தேவைகளுக்கும் ஏற்ற முக்கியமான வேதவாக்கியங்களை நாடும் படிக்கு உள்ளடக்கியது. உங்கள் கஷ்ட காலங்களை கடக்க தேவரின் உதவியை சார்ந்திருங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர் – கிறிஸ்துவில் உள்ள பெண்ணின் மறைக்கப்பட்ட உண்மை 3 நாட்கள் பெண்களாகிய நாங்கள் பல்வேறு பாத்திரங்களை வாழ்க்கையில் சமன்படுத்துவதில் எப்போதும் ஆழ்ந்திருக்கிறோம். ஆனால் இந்த பிஸியான நேரத்தில், நம்முடைய ஆழமான அடையாளத்தை நினைவில் கொள்ளுவது முக்கியம்: தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் அல்லது கிறிஸ்துவின் பெண்கள். இந்த அடையாளம் நமது வாழ்க்கையின் அடித்தளம் ஆகும், அது தேவனுடனும் மற்றவர்களுடனும் நமது உறவுகளை உருவாக்குகிறது. இந்த அடையாளத்தை மேலும் விரிவாக ஆராய நாம் வரும் மூன்று நாட்களில் எங்களுடன் சேரவும்! நாம் சேர்ந்து பைபிளை வாசிப்போம் (செப்டம்பர்) 30 நாட்கள் 12 பாகம் கொண்ட தொடரின் 9வது பாகம், இந்த திட்டம் 365 நாட்களில் முழு பைபிள் மூலம் ஒன்றாக தொடர்புபடுத்த வழிவகுக்கிறது. நீங்கள் எப்போதும் ஒரு புதிய பகுதியை ஒவ்வொரு மாதத்திலும் தொடங்கும் போது பிறரையும் சேர அழைக்கவும். இந்த தொடர் ஒலி பைபிளில் நன்றாக இயங்கும் – ஒரு நாளைக்கு 20-க்கும் குறைவான நிமிடங்களில் கேளுங்கள்! ஒவ்வொரு பிரிவிலும், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அத்தியாயங்களோடு சங்கீதங்களும் முழுவதும் சிதறி இருக்கும். நெகேமியா, எஸ்தர், முதல் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு, யோவேல், ஆமோஸ், ஒபதியா நாகூம், ஆபகூக், செப்பனியா, தீத்து, பிலேமோன், யாக்கோபு, ஆகாய், சகரியா, மல்கியா புத்தகங்களை பகுதி 9 கொண்டுள்ளது.
Posted on 2024-08-01வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2024 நிரம்பி வழிய 21 நாட்கள் 21 நாட்கள் நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்! அன்பில் வளருதல் 5 நாட்கள் தேவனை நேசிப்பதும் மற்றவர்களை நேசிப்பதும் உண்மையில் முக்கியமானது, ஆனால் அதை எவ்வாறு திறம்பட செய்வது? உண்மை என்னவென்றால், நம் சொந்த முயற்சியில் நாம் மக்களை நன்றாக நேசிக்க முடியாது. ஆனால் நாம் தேவனைப் பார்த்து, மனத்தாழ்மையில் நம்மைக் கிடக்கப்பண்ணும் போது, தேவனின் உண்மையான மற்றும் வல்லமை வாய்ந்த அன்பிலிருந்து நாம் வாழ முடியும். இந்த 5 நாள் வேதாகமத் திட்டத்தில் அன்பில் வளர்வது பற்றி பாஸ்டர் ஏமி க்ரோஷெல் மூலம் மேலும் அறிக. தேவனை வணங்குதல் 6 நாட்கள் இந்த தினசரி தியானம், வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தேவனை எவ்வாறு வழிபடுவது என்பதற்கான நுண்ணறிவையும், கிறிஸ்துவுடனான முழு இதய உறவையும் ஊக்குவிக்கும். இந்த தியானம் ஆர். டி. கெண்டலின் தேவனை ஆராதிப்பது என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டது. (ஆர். டி. கெண்டல் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சிற்றாலயத்தில் போதகராக இருபத்தைந்து ஆண்டுகள் இருந்தார்.) வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஆகஸ்டு) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 8வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 8ம் பகுதியானது முதலாம் இரண்டாம் நாளாகமம், முதலாம் இரண்டாம் தெசலோனியர் மற்றும் எஸ்றா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.
Posted on 2024-04-02வாசிப்பு திட்டங்கள் – ஏப்ரல் 2024 எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள் 3 நாட்கள் கவலை என்பது நமது நேரம், ஆற்றல் மற்றும் அமைதியின் திருடன். இப்படி இருக்க நாம் ஏன் கவலைக்கொள்ள வேண்டும்? இந்த 3-நாள் தியானத்திட்டதில், கவலையை பற்றியும், நாம் ஏன் கவலைக்கொள்கிறோம் என்றும், எப்படி அதை நிறுத்த வேண்டும் என்றும் பார்ப்போம். வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஏப்ரல்) 30 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 4 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 4ம் பகுதியானது மத்தேயு மற்றும் யோபு புத்தகங்களை சிறப்பிக்கிறது.