Posted on 2022-12-02வாசிப்பு திட்டங்கள் – டிசம்பர் 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (டிசெம்பர்) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 12 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய பகுதியை ஒவ்வொரு மாதமும் துவங்கும்போதும் பிறரையும் இணையும்படி அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 12ம் பகுதியானது ஏசாயா, மீகா, முதலாம் இரண்டாம் பேதுரு, முதலாம் இரண்டாம் மூன்றாம் யோவான் மற்றும் யூதா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. லூக்கா 12 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை லூக்கா நற்செய்தி நூல் துவக்கத்திலிருந்து இறுதி வரை நடத்தி செல்லும். காணாமல் போன சமாதானம் 7 நாட்கள் வாழ்க்கை வேதனையாக இருக்கும்போது அமைதியை அனுபவிப்பது உண்மையில் சாத்தியமா? குறுகிய பதில்: ஆம், ஆனால் நம்முடைய சொந்த சக்தியில் இல்லை. நம்மை வியப்பில் ஆழ்த்திய ஒரு வருடத்தில், நம்மில் பலருக்கு கேள்விகள் எழுகின்றன. இந்த 7-நாள் வேதாகம திட்டத்தில், பாஸ்டர் கிரேக் க்ரோஷலின் செய்தித் தொடருடன், நாம் அனைவரும் விரும்பும் காணாமல் போன அமைதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதைக் கண்டுபிடிப்போம். துக்கம் வலியைக் கொடுக்கக்கூடியது: விடுமுறைக்கான நம்பிக்கை 5 நாட்கள் பலருக்கு, விடுமுறைகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன… ஆனால் ஆழ்ந்த துக்கம் அல்லது இழப்பின் காரணமாக விடுமுறைகள் பிரகாசத்தை இழந்து சவாலாக மாறும்போது என்ன நடக்கும்? இந்த சிறப்பு வாசிப்புத் திட்டம், துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலையும் விடுமுறை நாட்களுக்கான நம்பிக்கையையும் பெற உதவும், மேலும் ஆழ்ந்த துக்கத்தின் மத்தியிலும் ஒரு அர்த்தமுள்ள விடுமுறை காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பகிர்ந்து கொள்கிறது.
Posted on 2022-10-27வாசிப்பு திட்டங்கள் – நவம்பர் 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (நவம்பர்) 30 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 11 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 11ம் பகுதியானது உன்னதப்பாட்டு, எசேக்கியேல், ஓசியா, மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. ஆபகூக்கின் பயணம் 6 நாட்கள் கடினமான காலங்களில் ஆபகூக்குடன் ஒரு பயணம் பற்றிய திட்டம். பரிசுத்த உணர்ச்சிகள் – ஒவ்வொரு சவாலுக்கும் வேதாகம பதில்கள் 30 நாட்கள் தேவன் உங்களைப் படைத்து, இந்த நேரத்தில் உங்களை உருவாக்கினார், அன்பில்லாதவர்களை நேசிக்கவும், கொந்தளிப்பில் அமைதியைப் பிரதிபலிக்கவும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் எதிர்மறையான மகிழ்ச்சியைக் காட்டவும். இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் இயல்பான மனித உணர்ச்சிகளைப் பற்றியும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்றும் வேதாகமம் என்ன சொல்கிறது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சாதாரண மற்றும் சில சமயங்களில் அசாதாரணமான சவால்களை இந்த தியானம் உள்ளடக்கியது, மேலும் உங்கள் உணர்ச்சிகளை தெய்வீக வழியில் எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றிய வேதகமாக் குறிப்புகளை வழங்குகிறது.
Posted on 2022-09-26வாசிப்பு திட்டங்கள் – அக்டோபர் 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (அக்டோபர்) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 10 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய திட்டத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும். ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 10ம் பகுதியானது பிரசங்கி, யோவான், எரேமியா, மற்றும் புலம்பல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. சங்கீதம் 31 நாட்கள் சங்கீத புத்தகத்தை வாசிப்பது எளிமையாக உற்சாகமூட்டக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு கஷ்டமான நேரத்தின் ஊடாக சென்றுக்கொண்டிருக்கும் போது, சங்கீத புத்தகம் ஒரு ஆறுதலாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கும். உண்மையாகவே என்னால் பாவ சோதனைகளை மேற்கொள்ள முடியுமா? 5 நாட்கள் “நான் ஏன் அந்த பாவத்தோடு கூட போராடி கொண்டிருக்கிறேன்” என்று என்றைக்காவது உங்களை பார்த்து நீங்களே கேட்டிருக்கிறீர்களா? ரோமர் 7:15 -ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் பாருங்கள்: “நான் விரும்புகிறதை செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்”. நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றத்தை தடை செய்யும் இந்த பாவங்களை நாம் செய்யாமல் இருப்பது எப்படி? பாவம் செய்யாத வாழ்க்கை உண்மையில் சாத்தியமா? இந்த தியான திட்டத்தில் பாவத்தை குறித்தும் சோதனைகளை குறித்தும், பிசாசை குறித்தும், மிக முக்கியமாக தேவனுடைய அன்பை குறித்தும் நாம் தியானித்து கற்றுக்கொள்ள இருக்கிறோம். உங்கள் மகிழ்ச்சியை மீட்டெடுத்தல் 5 நாட்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நீங்கள் விரும்பினால், உங்கள் அட்டவணையில் சமநிலையைக் கண்டறிய வேண்டும். உங்கள் உள்ளீட்டையும் உங்கள் வெளியீட்டையும் எவ்வாறு மறுசீரமைக்கலாம் என்பதை பாஸ்டர் ரிக் பகிர்ந்து கொள்கிறார், இதனால் நீங்கள் கொடுப்பதும் பெறுவதும் உங்கள் மகிழ்ச்சியை மீட்டெடுக்க உதவுகிறது, அதை இழக்காமல் இருக்க உதவுகிறது.
Posted on 2022-08-30வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2022 நாம் சேர்ந்து பைபிளை வாசிப்போம் (செப்டம்பர்) 30 நாட்கள் 12 பாகம் கொண்ட தொடரின் 9வது பாகம், இந்த திட்டம் 365 நாட்களில் முழு பைபிள் மூலம் ஒன்றாக தொடர்புபடுத்த வழிவகுக்கிறது. நீங்கள் எப்போதும் ஒரு புதிய பகுதியை ஒவ்வொரு மாதத்திலும் தொடங்கும் போது பிறரையும் சேர அழைக்கவும். இந்த தொடர் ஒலி பைபிளில் நன்றாக இயங்கும் – ஒரு நாளைக்கு 20-க்கும் குறைவான நிமிடங்களில் கேளுங்கள்! ஒவ்வொரு பிரிவிலும், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அத்தியாயங்களோடு சங்கீதங்களும் முழுவதும் சிதறி இருக்கும். நெகேமியா, எஸ்தர், முதல் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு, யோவேல், ஆமோஸ், ஒபதியா நாகூம், ஆபகூக், செப்பனியா, தீத்து, பிலேமோன், யாக்கோபு, ஆகாய், சகரியா, மல்கியா புத்தகங்களை பகுதி 9 கொண்டுள்ளது. ரூத், மீட்பின் கதை 5 நாட்கள் வேதாகமத்தின் மற்ற நபர்களைவிட ரூத்தோடு உணர்வுப் பூர்வமாக நம்மைத் தொடர்புபடுத்தி பார்க்க முடியும்; எளிமையானவள், அந்நிய தேசத்திலிருந்து வந்த விதவை, ஆனால் தேவனை முதன்மைபடுத்தி அவர் தன் வாழ்வை மாற்றுவதை பார்த்தவள். உங்கள் சூழலின் மத்தியில் ஊக்கம் தேவைப்படுமெனில், இந்த வாசிப்பு திட்டத்தை தவற விடாதேயுங்கள்! ஒவ்வொரு அடியும் ஒரு ஆகமனம் 5 நாட்கள் யூஜீன் பீட்டர்சன் மூலம் வந்த இந்த ஐந்து பக்தி வழிபாடுகள் உங்கள் மனதையும் இருதயத்தையும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் என நம்புகிறோம், ஏனெனில் புனித ஆவி ஊக்கமளிக்கவோ, சவாலிடவோ அல்லது ஆறுதல் அளிக்கவோ எதை பயன்படுத்தும் என அறிய முடியாது. ஒவ்வொரு பக்தி வழிபாட்டின் இறுதியில் உள்ள பிரதிபலிக்கும் வினாக்களை உங்கள் சொந்த பிரார்த்தனைக்கு அந்த நாளுக்கு தேர்வு செய்யலாம்-நிச்சயமாக கடைப்புள்ளியாக அல்ல ஆனால் உங்களுக்கு வர இருக்கும் ஆகமனங்களுக்கு ஒரு தொடக்கமாக.
Posted on 2022-07-26வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஆகஸ்டு) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 8வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 8ம் பகுதியானது முதலாம் இரண்டாம் நாளாகமம், முதலாம் இரண்டாம் தெசலோனியர் மற்றும் எஸ்றா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. மரணத்தின் மீது வெற்றி 7 நாட்கள் “இது வாழ்க்கையின் மற்றொரு பகுதி” என்று நாம் எப்போதும் கூறப்படுகிறோம், ஆனால் சாதாரணமான வார்த்தைகள் நேசிப்பவரை இழக்கும் வேதனையை குறைக்காது. வாழ்க்கையின் கடினமான சவால்களில் ஒன்றை எதிர்கொள்ளும்போது தேவனிடம் ஓட கற்றுக்கொள்ளுங்கள். தைரியம் 1 வாரம் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்று கற்றுக்கொள்ளுங்கள். “தைரியம்” வாசிப்புத்திட்டம் விசுவாசிகளை அவர்கள் கிறிஸ்துவுக்குள் யார் என்றும் தேவனுடைய ராஜ்யத்தில் யார் என்றும் நினைவூட்டுவதன் மூலம் உற்சாகப்படுத்திகிறது. நாம் தேவனுடையவர்களாக இருக்கும் போது, நாம் அவரை நேரடியாக அணுக முடியும். தேவனுடைய குடும்பத்தில் உங்கள் இடம் பத்திரமாக இருக்கிறது என்று உறுதி பெற – மீண்டும் அல்லது முதல் முறையாக – படியுங்கள். நிச்சயமற்ற காலங்களில் உறுதி 5 நாட்கள் நிச்சயமற்ற நிலைமைகளிலும், நிச்சயமானவராய் இருக்கும் தேவன்! நாம் சகோதரர் டேவிட் வில்லா அவர்களுடன் இணைந்து இந்த சமீபத்திய திட்டத்தை நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர் மறையைக் கடந்து மிகவும் பெரிய சிறப்பான ஒன்றை அடைவதற்காக தியானிக்க இருக்கிறோம்.