Posted on 2021-10-012021-09-22வாசிப்பு திட்டங்கள் – அக்டோபர் 2021 யாக்கோபு 3 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை யாக்கோபு புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (அக்டோபர்) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 10 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய திட்டத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும். ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 10ம் பகுதியானது பிரசங்கி, யோவான், எரேமியா, மற்றும் புலம்பல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல் 5 நாட்கள் தேவனின் தயவைப் பற்றிய உண்மையை இன்று திருச்சபைக்குள்ளும் திருச்சபைக்கு வெளியேயும் அநேக செய்திகள் கறைப்படுத்தியுள்ளன. உண்மை என்னவென்றால், தேவன் நமக்கு நல்ல காரியங்களை கொடுக்க கடமைப்பட்டவரல்ல, ஆனால் அவர் அப்படி செய்ய விரும்புகிறார்! அடுத்த 5 நாட்கள் தேவனின் மறுக்கமுடியாத நற்குணத்தை, இவ்வுலக நெறி பிறழ்வுகளினூடும் கூட ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க உங்களுக்கு உதவ முடியும்.
Posted on 2021-09-052021-09-20வாசிப்பு திட்டங்கள் – செப்டம்பர் 2021 கலாத்தியர் 3 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை கலாத்தியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. நாம் சேர்ந்து பைபிளை வாசிப்போம் (செப்டம்பர்) 30 நாட்கள் 12 பாகம் கொண்ட தொடரின் 9வது பாகம், இந்த திட்டம் 365 நாட்களில் முழு பைபிள் மூலம் ஒன்றாக தொடர்புபடுத்த வழிவகுக்கிறது. நீங்கள் எப்போதும் ஒரு புதிய பகுதியை ஒவ்வொரு மாதத்திலும் தொடங்கும் போது பிறரையும் சேர அழைக்கவும். இந்த தொடர் ஒலி பைபிளில் நன்றாக இயங்கும் – ஒரு நாளைக்கு 20-க்கும் குறைவான நிமிடங்களில் கேளுங்கள்! ஒவ்வொரு பிரிவிலும், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அத்தியாயங்களோடு சங்கீதங்களும் முழுவதும் சிதறி இருக்கும். நெகேமியா, எஸ்தர், முதல் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு, யோவேல், ஆமோஸ், ஒபதியா நாகூம், ஆபகூக், செப்பனியா, தீத்து, பிலேமோன், யாக்கோபு, ஆகாய், சகரியா, மல்கியா புத்தகங்களை பகுதி 9 கொண்டுள்ளது. உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது 4 நாட்கள் உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது பற்றி ஆர்.சி. ஸ்ப்ரௌலின் நான்கு நாள் தியானம். ஒவ்வொரு தியானமும் நீங்கள் தேவனின் பிரசனத்தில் வாழ, தேவனின் அதிகாரத்தின் கீழ் வாழ, தேவனின் மகிமைக்காக வாழ உங்களை அழைக்கிறது.
Posted on 2021-08-05வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2021 எபேசியர் 3 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை எபேசியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஆகஸ்டு) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 8வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 8ம் பகுதியானது முதலாம் இரண்டாம் நாளாகமம், முதலாம் இரண்டாம் தெசலோனியர் மற்றும் எஸ்றா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. தேவனோடு உரையாடல் 12 நாட்கள் ‘தேவனோடு உரையாடல்’ என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவரோடு கொண்டிருக்க விரும்புகிறார் – ஒரு திசையை மாற்றும், உறவுகளை மாற்றும், தீர்மானத்தை மாற்றும் உரையாடல். இந்த திட்டம் தெளிவான, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய இருதயத்தை எட்ட உதவும் காரியங்களை கொண்டுள்ளது. அவர் நம்மை நேசிக்கிறார்! ஆவிக்குரிய யுத்தத்திற்கான திட்டம் 5 நாட்கள் இந்த சக்திவாய்ந்த போதனைகள் மூலம், எதிரிகளை முந்திக்கொண்டு தோற்கடிப்பதற்கான ஒரு தந்திரத்தினை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய ஆழமான புரிதலை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள், மேலும் உங்கள் வாழ்க்கையை அழிப்பதற்கான அவனது திட்டத்தை முறியடிப்பீர்கள்.
Posted on 2021-07-102021-07-26வாசிப்பு திட்டங்கள் – ஜூலை 2021 1 கொரிந்தியர் 8 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை 1 கொரிந்தியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஜூலை) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 7 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் -தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 7ம் பகுதியானது இரண்டாம் சாமுவேல், முதலாம் இரண்டாம் இராஜாக்கள் மற்றும் மாற்கு புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்? 5 நாட்கள் கேள்விகள்: கர்த்தரைப் பொறுத்தவரையில் நம் எல்லோருக்குமே இவை உண்டு. நமது ‘ஒப்பிட்டுப் பார்க்கும் கலாச்சாரம்’, நம்மை மிக அந்தரங்கமான கேள்விகளை நம்மையே கேட்க வைக்கிறது: “கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?” அல்லது “எப்படி அவர் என்னை நேசிக்க முடியும்?” என்று கூட கேட்கலாம். இந்த திட்டத்தில் 26 வேத பகுதிகளுடன் நீங்கள் ஈடுபடுத்தப்படுவீர்கள்- அவை உங்கள் மீதான கர்த்தரின் அன்பு நிபந்தனையற்றது என்ற உண்மையை எடுத்துக்கூறும். இளைப்பாற நேரம் ஒதுக்குவது 5 நாட்கள் பணியில் மும்முரமாய் இருப்பதும் தொடர்ந்து பரபரப்பாய் இருப்பதும் நாம் வாழும் உலகத்தில் பெரிதும் மெச்சிக்கொள்ளப்படுகின்றது, அது மற்றவர்களுக்கு ஒரு சவாலாகவும் இருக்கக்கூடும். நம்முடைய பங்கையும் திட்டத்தையும் சரிவர செய்ய, நாம் இளைப்பாற கற்றுக்கொள்ளவேண்டும், அல்லது நாம் நேசிக்கும் நபர்களுக்கும் நம்முடைய இலக்குகளும் ஒன்றும் பங்களிப்புக்கு கொடுக்க முடியாமல்போகும். நாம் அடுத்த ஐந்து நாட்களை இளைப்பாறுதல் குறித்தும் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களை நம்முடைய வாழ்வில் எப்படி பொருத்திக்கொள்வது என்றும் கற்றுக்கொள்வோம்.
Posted on 2021-06-302021-07-05வாசிப்பு திட்டங்கள் – ஜூன் 2021 கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல் 4 நாட்கள் கவலை என்பது அதன் எல்லா வடிவங்களிலும் நம்மை பலகீனமாக்கிவிடக் கூடியது. அது நம்மைத் தடுமாறச் செய்து பயத்திலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடக்கூடியது. ஆனாலும் இதுவே கதையின் முடிவு அல்ல. இயேசுவில் நாம் சுதந்தரத்தையும், கிருபையையும் பெற்றுக் கொண்டு போராட்டங்களை மேற்கொள்ள முடியும். நாம் அதை வெற்றி கொள்வது மட்டுமல்ல, அதன் மூலமாக இன்னும் சிறப்பானவர்களாக மாற முடியும். இயேசுவின் ஜெபங்கள் 5 நாட்கள் நம் உறவுகளில் தொடர்பு எனபது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம், கர்த்தருடனான தொடர்பும் அதற்கு விதிவிலக்கல்ல. நாம் கர்த்தருடன் ஜெபத்தின் மூலம் தொடர்பு கொள்ளவேண்டுமென்று ஆசிக்கிறார் – அவரது குமாரனான இயேசு கூட அதே ஒழுங்குமுறையைத் தான் கடைப்பிடித்தார். இந்தத் திட்டத்தில் இயேசுவின் முன்மாதிரியிலிருந்து கற்றுக் கொண்டு உலக வாழ்வின் போக்கிலிருந்து விடுபட்டு ஜெபம் தரும் வல்லமை மற்றும் வழிநடத்தலை நீங்களே அனுபவிக்கலாம். நம்மை பெலவீனப்படுத்தும் ஆயுதத்தை முறியடித்தல் – ஜான் பெவரேயுடன் 7 நாட்கள் ஒரு சூப்பர்மேன் எப்படி ஒவ்வொரு எதிரயையும் வீழ்த்துகிரானோ, கிறிஸ்துவை பின்பற்றுகிற உங்களுக்கும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றல் உள்ளது. ஆனால் சூப்பரமேனுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு பிரச்சனை, கிரிப்டோனைட் (கதையினுள் உள்ள கற்பனை பொருள்)உங்களுடைய பெலனை திருடுவது தான். இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையில் உள்ள அந்த ஆவிக்குரிய கற்பனை கதாபாத்திரத்தை வேரோடு பிடுங்கி எரிந்து, தேவன் உங்களுக்கு அளித்த அசாதரமான ஆற்றலை வரம்புகளின்றி வாழ்க்கையில் பூர்த்தி செய்திட உதவிடும் தீர்க்கமான பிராத்தனைகள் 7 நாட்கள் உங்கள் விசுவாசத்துடன் பாதுகாப்பாக விளையாடி களைப்படைந்து விட்டீர்களா? உங்கள் அச்சங்களை எதிர் கொள்ளவும், உங்கள் விசுவாசத்தை பேணிவளர்க்கவும், உங்கள் ஆற்றலை கட்டவிழ்த்து விடவும் நீங்கள் தயாரா? Life.Churchஇன் நல்லாயர் கிரேக் க்ரோஷெலின் புத்தகமான, அபாயகரமான பிராத்தனைகள், என்பதிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஏழு நாள் பைபிள் திட்டம் உங்களை துணிகரமாக பிரார்த்திக்க ஊக்குவிக்கும்- ஏனெனில் இயேசுவை பின்பற்றுவது ஒரு போதும் பாதுகாப்புடையதாக இருக்க உத்தேசப்படவில்லை. வேதாகமத்தை எப்படி வாசிக்க துவங்குவது 4 நாட்கள் உண்மையை ஏற்றுக்கொள்வோம்.: நாம் வேதாகமத்தை வாசிப்பது நல்லது என்று உணருகிறோம், ஆனால் எங்கு வாசிக்க துவங்குவது என்று தெரியாமல் இருக்கிறோம். இனி வரும் நான்கு நாட்களில், வேதாகமம் ஏன் முக்கியமானது என்றும், எவ்வாறு தினந்தோறும் வேதத்தை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவது என்றும், நம் வாழ்வில் அது எவ்வாறு உதவும் என்றும் நாம் கற்றுக்கொள்வோம். சிலுவையும் கிரீடமும் 7 நாட்கள் இயேசு கிறிஸ்து, அவர் தன் சிலுவை மரணத்தின் மூலம் பெற்றுத் தந்த இரட்சிப்பு, மற்றும் உயிர்த்தெழுதலின் வாக்குத்தத்தம் ஆகியவற்றை நாம் அறிந்துக் கொள்ளவே புதிய ஏற்பாட்டின் அதிகப்பட்சமான பகுதி எழுதப்பட்டுள்ளது. இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தம், உயிர்த்தெழுதல், மற்றும் உங்களுக்காக பெற்று தந்த நித்திய வாழ்க்கையாகிய பரிசு ஆகியவற்றை இந்த தியானத்தில் டாக்டர். சார்ல்ஸ் ஸ்டான்லி அவர்கள் பகிர்ந்துள்ளார். அவருடன் இணைந்து, இயேசு செலுத்திய விலையை நினைவுக்கூறுவோம், தந்தையின் மகத்தான அன்பின் ஆழத்தை கொண்டாடுவோம்.