உங்கள் பிள்ளைகள் தமிழிலும் சிறுவர் பைபிள் ஆப்பை அனுபவிக்கலாம்!

இன்றைக்கு, எங்களுடன் கூட்டமைத்திருக்கும் OneHope உடன் சேர்ந்து, சிறுவர் பைபிள் ஆப்பை தமிழில் வெளியிடுகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எப்போதும் இல்லாத அளவிற்கு, இப்போது இன்னும் அநேக பிள்ளைகள் பைபிள் அனுபவத்தை பெற இது ஒரு வாய்ப்பாக அமையும்.

பயன்பாட்டின் அமைப்புகளுக்குள்ளேயே சுலபமாய் எந்த மொழியையும் தேர்ந்தெடுக்கலாம்:

  1. பயன்பாட்டை சமீபத்திய பதிப்பிற்க்கு மேம்படுத்திக் கொண்டீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
  2. பயன்பாட்டைத் திறந்து, பற்சக்கரத்தை தட்டவும் () அது அமைப்புகளைத் திறக்கும்.
  3. மொழியை அழுத்தி, உங்களுக்கு வேண்டிய மொழியை தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியிலேயே ஒலி கேட்கும், மற்றும் வாக்கியங்களும் அம்மொழியிலேயே தோன்றும்!

இந்த நற்செய்தியை கொண்டாட எங்களுக்கு உதவுங்கள்!

பகிரவும்
ட்வீட்
மின்னஞ்சல்


சிறுவர்களுக்கான பைபிள் ஆப் பற்றி

ஒருங்கிணைவாளரான OneHope உடன் உருவாக்கப்பட்ட சிறுவர் பைபிள் ஆப், YouVersion இன் தயாரிப்பாகும், இவர்களே வேதாகம பயன்பாட்டின் தயாரிப்பாளருமாவர். பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய அனுபவத்தை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிறுவர் பைபிள் ஆப் ஏற்கெனவே 21 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்களில் ஆப்பிள், ஆண்ட்ராயிடு, கிண்டில் சாதனங்களில் நிறுவப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு எப்போதுமே முற்றிலும் இலவசம். உலகெங்கிலும் உள்ள பிள்ளைகள் இந்த சிறுவர் பைபிள் ஆப்பை அனுபவித்து வருகிறார்கள், 35 மொழிகளில் — இப்போது தமிழில் கூட!

App Store Google Play Amazon