Posted on 2020-09-012021-10-11வாசிப்பு திட்டங்கள் – செப்டம்பர் 2020 உங்கள் வேலைக்கு அர்த்தம் கொடுங்கள் 4 நாட்கள் நம்மில் அநேகர் ஐம்பது சதவிகித நேரத்தை நம் வேலைகளை செய்வதில்தான் செலவிடுகிறோம். நமது வேலைக்கு அர்த்தம் உள்ளதா என்பதையும், நாம் செய்யும் வேலை முக்கியமானதுதானா, என்பதையும் நாம் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், மன உளைச்சலும், தேவைகளும், துன்பங்களும் வேலையை குறித்த நமது கண்ணோட்டத்தை கடினமானதாகவும், இதை எப்படியாகிலும் முடித்தால் போதும் என்பதாகவும் மாற்றுகின்றன. உங்கள் வேலைக்கு ஒரு அர்த்தத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உங்கள் விசுவாசத்தில்தான் வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு உதவும். சிறந்த தலைமைத்துவத்திற்கு ஆறு படிகள் 7 நாட்கள் ஒரு தலைவனாக வளருவதற்கு தயாரா? பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்கள் ஒரு சிறந்த தலைவனாக மாறுவதற்கு தேவையான ஆறு வேதாகம படிகளை கற்றுத்தருகிறார். ஆரம்பிக்க தேவையான ஒழுங்கு, நிறுத்த தேவையான தைரியம், வளர்ச்சி அடைய தேவையான ஆள்தத்துவம், உருவாக்க ஒரு அமைப்பு, துவங்க வேண்டிய உறவு மற்றும் துணிந்து எடுக்க வேண்டிய அபாயங்கள். இருதயத்தின் எதிரிகள் 5 நாட்கள் எப்படி ஒரு ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களுடைய சரீரத்தைப் பாதிக்க முடியுமோ, அப்படியே உணர்வு மற்றும் ஆவிக்குரிய ரீதியாக ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களையும், உங்கள் உறவுகளையும் பாதிக்க முடியும். அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு, ஆண்டி ஸ்டான்ட்லி அவர்கள் உங்களுக்குள் காணப்படுகிற இருதயத்தின் நான்கு பொதுவான எதிரிகளான குற்றவுணர்ச்சி, கோபம், பேராசை, மற்றும் பொறாமை போன்றவைகளை உற்றுநோக்க உதவிசெய்து, அவைகளை எவ்வாறு அகற்றுவது என்பதைப் போதிக்கட்டும். நம்மை பெலவீனப்படுத்தும் ஆயுதத்தை முறியடித்தல் – ஜான் பெவரேயுடன் 7 நாட்கள் ஒரு சூப்பர்மேன் எப்படி ஒவ்வொரு எதிரயையும் வீழ்த்துகிரானோ, கிறிஸ்துவை பின்பற்றுகிற உங்களுக்கும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றல் உள்ளது. ஆனால் சூப்பரமேனுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு பிரச்சனை, கிரிப்டோனைட் (கதையினுள் உள்ள கற்பனை பொருள்)உங்களுடைய பெலனை திருடுவது தான். இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையில் உள்ள அந்த ஆவிக்குரிய கற்பனை கதாபாத்திரத்தை வேரோடு பிடுங்கி எரிந்து, தேவன் உங்களுக்கு அளித்த அசாதரமான ஆற்றலை வரம்புகளின்றி வாழ்க்கையில் பூர்த்தி செய்திட உதவிடும்
Posted on 2020-08-012021-10-11வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2020 சமாதானத்தை கண்டுக்கொள்வோம் 10 நாட்கள் உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். டாக்டர். ஜான் ஸ்டான்லியுடன் இணைந்து வாழ்க்கையை மாற்றக்கூடிய மன அமைதிக்கான வழிகளை கண்டடையுங்கள், கடந்த கால வருத்தங்களை சரிசெய்ய உதவும் கருவிகளை பெற்றுக்கொள்ளுங்கள், தற்போதைய கவலைகளை சந்திக்கவும் எதிர் காலத்தைக் குறித்த பயங்களை நீக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல் 7 நாட்கள் நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் ‘அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்’ என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம். நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் ஓய்வு 4 நாட்கள் கடினமாக உழைக்க நம்முடைய வேதாகமம் கற்றுக் கொடுக்கிறது, இருப்பினும் கர்த்தர் சொல்லுகிறார் -நாம் அல்ல- கிரியைகளின் பலனைத் தருபவர் கர்த்தர் ஒருவரே என்பதாக. இந்த நான்காவது நாளின் திட்டத்தில், ஒரு கிறிஸ்தவராக, நம்பிக்கைக்கும் தடுமாற்றத்துக்கும் நடுவிலிருக்கும் பதற்றத்தை விளக்கி உண்மையான ஓய்வு நாட்களை ஆசரிக்க நாம் கற்றுக் கொள்ளபோகிறோம். எபேசியர் 3 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை எபேசியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது.
Posted on 2020-07-012021-10-11வாசிப்பு திட்டங்கள் – ஜூலை 2020 பாதுகாப்பு வேலிகள்: மனஸ்தாபங்களைத் தவிர்த்தல் 5 நாட்கள் நமது வாகனங்கள் ஆபத்தான அல்லது வரம்புக்கு மீறிய பகுதிகளுக்குச் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு அதன் தேவை ஏற்படும் வரை நாம் அவைகளை கண்டுகொள்வது இல்லை – ஆனால் பின்னர் அவைகள் அங்கு இருந்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். நமது உறவுகள், நிதிகள் மற்றும் தொழில்கள் ஆகியவற்றிலும் தடுப்புகள் இருந்திருந்தால் என்ன? அவை எப்படி இருக்கும்? எதிர்கால பின்வருத்தங்களிலிருந்து நம்மை எவ்வாறு அது தடுக்கும்? அடுத்த ஐந்து நாட்களுக்கு, சுய தடுப்பு வேலிகளை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பதை ஆராய்வோம். இளைப்பாற நேரம் ஒதுக்குவது 5 நாட்கள் பணியில் மும்முரமாய் இருப்பதும் தொடர்ந்து பரபரப்பாய் இருப்பதும் நாம் வாழும் உலகத்தில் பெரிதும் மெச்சிக்கொள்ளப்படுகின்றது, அது மற்றவர்களுக்கு ஒரு சவாலாகவும் இருக்கக்கூடும். நம்முடைய பங்கையும் திட்டத்தையும் சரிவர செய்ய, நாம் இளைப்பாற கற்றுக்கொள்ளவேண்டும், அல்லது நாம் நேசிக்கும் நபர்களுக்கும் நம்முடைய இலக்குகளும் ஒன்றும் பங்களிப்புக்கு கொடுக்க முடியாமல்போகும். நாம் அடுத்த ஐந்து நாட்களை இளைப்பாறுதல் குறித்தும் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களை நம்முடைய வாழ்வில் எப்படி பொருத்திக்கொள்வது என்றும் கற்றுக்கொள்வோம். எல்லாம் புதிதாயின 5 நாட்கள் 2 கொரிந்தியர் நிரூபத்தின் வழியாக இந்த பயணத்தில், எல்லாம் புதிதாயின என்பது தேவன் இந்த உலகத்தில் நம் சாகசமிக்க விசுவாசத்தையும் நம்மை தைரியமாய் இருக்க தேவனுடைய அழைப்பையும் கூறும் இறையியலை ஆராய்கிறது. கெல்லி மிண்டெர் நம்முடைய கிறிஸ்துவ நடக்கை நம்முடைய இயர்கையான சுபாவங்களுக்கு வேற்றுமையானவை என்றும், ஆனால் அது நித்தியமாகவும், எண்ணிலடங்காதமுறையிலும் சிறந்தது என்றும் நாம் புரிந்துகொள்ள உதவுகிறார். இந்த 5-நாள் வாசிப்பு திட்டத்தில், நீங்கள்: எவ்வாறு கடினமான உறவுகளை கையாளுவது, உங்கள் நற்பெயரை எவ்வாறு தேவனிலே நம்புவது, உங்கள் அடையாளத்தை கிறிஸ்துவிலே நங்கூரமிடுவது, வேதனைகளின் காரணத்தையும் அவற்றில் தேவனுடைய ஏற்ப்பாடுகளையும் புரிந்துகொள்வது, மற்றும் எப்படி நாம் இந்த உலகத்திற்கு ஒரு சுவிசேஷ வெளிச்சமாக இருப்பது என்பதைக்குறித்து ஆராய்வீர்கள். கலாத்தியர் 3 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை கலாத்தியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது.
Posted on 2020-06-012021-10-11வாசிப்பு திட்டங்கள் – ஜூன் 2020 1 கொரிந்தியர் 8 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை 1 கொரிந்தியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. தீவிர ஞானம்: தந்தைகளுக்கான 7-நாள் பயனம் 7 நாட்கள் தந்தைகள் நம்மை எவ்வளவு வடிவமைக்கின்றனர் என்பது மிகவும் வினோதமானது. உலகத்திற்குரிய தந்தையின் சக்தியையும் தாக்கத்தையும் விட்டு யாரும் தப்பிப்பதில்லை. மற்றும் பல ஆண்களும் தந்தையாக இருப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை என்று உணர்வதால் – வேதத்திலிருந்தும் பிற தந்தைளிடமிருந்தும், வழிநடத்துதல் பெறுவது அவசியம். தீவிர ஞானம் என்பது வேதத்திலுள்ள கொள்கைகளையும் ஞானத்தையும் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு வயதுமிக்க, ஞானமிக்க தந்தையின் அனுபவத்தோடு கலப்பதின் மூலம், ஞானம் மற்றும் தந்தைகளுக்கான ஆழ்ந்த அறிவு நோக்கிய ஒரு பயனமாகும். பிடிவாதம் – லிசா பெவரேவுடன் 6 நாட்கள் உண்மை என்றால் என்ன? கலாச்சாரமானது உண்மை என்பது ஒரு நதி என்றும், காலப்போக்கில் அது எல்லாவற்றையும் தாண்டி பாய்கிறது என்றும் நமக்கு ஒரு பொய்யை போதித்து வருகிறது. ஆனால் உண்மை என்பது அது நதி அல்ல-அது பாறை. பொங்கி எழும் உங்கள் மனதின் கருத்துக்களில், இந்தத் திட்டம் உங்கள் ஆத்மாவை நங்கூரமிட உதவும் – அலைந்து திரியும் இவ்வுலகில் உங்களுக்கு திசையின் தெளிவான உணர்வைத் தரும். பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள் 10 நாட்கள் சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்”கடினமாக உழையுங்கள்!” என்ற சத்தங்களின் மத்தியிலும் “இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்” என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது அல்லது இதுவாக இருந்தால் என்ன செய்வீர்கள்? பரிசுத்த யுதத்திற்குள் சேருங்கள்-கடின உழைப்பின் வாழ்க்கை மற்றும் நன்கு ஓய்வெடுக்கும் தேவனை கௌரவிக்கும் வழிகள்.
Posted on 2020-05-012021-10-11வாசிப்பு திட்டங்கள் – மே 2020 கைவிடப்படவில்லை: ஒரு சரியான தந்தையின் மகன்கள் மற்றும் மகள்களாக சுதந்திரத்தைக் கண்டறிதல் 5 நாட்கள் The Passion movement-ன் ஸ்தாபகரும் போதகருமான லூய் கிக்லியோ அவர்கள், தம் பிள்ளைகள் சுயாதீனத்தில் நடப்பதை விரும்பும் ஒரு நல்ல தகப்பனாகிய நம் தேவனுடைய குணத்தை புரிந்து கொள்வது பற்றி வாழ்வை மாற்றும் சத்தியங்களை 5 நாள் தியானமாக கொடுத்துள்ளார். பிள்ளை வளர்ப்பு பற்றி வேதாகமம் சொல்லும் 7 காரியங்கள் 7 நாட்கள் பிள்ளைகளை வளர்ப்பது என்பது எளிய காரியம் அல்ல. சிறந்த சூழலிலும் அது எளியது அல்லவே. இந்த 7 நாள் தியானத்தில், பெற்றோர்களாய் இருக்கும் எமது YouVersion ஊழியர்கள் சிலர், தங்கள் வாழ்வின் இப்பகுதியில் வேதாகம கொள்கைகளை கடைபிடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாள் தியானத்திலும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு வசனபடம் இடம் பெற்றுள்ளது. ரோமர் 8 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை ரோமர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு மிகச்சிறந்தது.