Posted on மே 1, 2020அக்டோபர் 11, 2021 by வாசிப்பு திட்டங்கள் – மே 2020 கைவிடப்படவில்லை: ஒரு சரியான தந்தையின் மகன்கள் மற்றும் மகள்களாக சுதந்திரத்தைக் கண்டறிதல் 5 நாட்கள் The Passion movement-ன் ஸ்தாபகரும் போதகருமான லூய் கிக்லியோ அவர்கள், தம் பிள்ளைகள் சுயாதீனத்தில் நடப்பதை விரும்பும் ஒரு நல்ல தகப்பனாகிய நம் தேவனுடைய குணத்தை புரிந்து கொள்வது பற்றி வாழ்வை மாற்றும் சத்தியங்களை 5 நாள் தியானமாக கொடுத்துள்ளார். பிள்ளை வளர்ப்பு பற்றி வேதாகமம் சொல்லும் 7 காரியங்கள் 7 நாட்கள் பிள்ளைகளை வளர்ப்பது என்பது எளிய காரியம் அல்ல. சிறந்த சூழலிலும் அது எளியது அல்லவே. இந்த 7 நாள் தியானத்தில், பெற்றோர்களாய் இருக்கும் எமது YouVersion ஊழியர்கள் சிலர், தங்கள் வாழ்வின் இப்பகுதியில் வேதாகம கொள்கைகளை கடைபிடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாள் தியானத்திலும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு வசனபடம் இடம் பெற்றுள்ளது. ரோமர் 8 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை ரோமர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு மிகச்சிறந்தது. Share this post: