வாசிப்பு திட்டங்கள் – ஜூன் 2020

7 நாட்கள்

தந்தைகள் நம்மை எவ்வளவு வடிவமைக்கின்றனர் என்பது மிகவும் வினோதமானது. உலகத்திற்குரிய தந்தையின் சக்தியையும் தாக்கத்தையும் விட்டு யாரும் தப்பிப்பதில்லை. மற்றும் பல ஆண்களும் தந்தையாக இருப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை என்று உணர்வதால் – வேதத்திலிருந்தும் பிற தந்தைளிடமிருந்தும், வழிநடத்துதல் பெறுவது அவசியம். தீவிர ஞானம் என்பது வேதத்திலுள்ள கொள்கைகளையும் ஞானத்தையும் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு வயதுமிக்க, ஞானமிக்க தந்தையின் அனுபவத்தோடு கலப்பதின் மூலம், ஞானம் மற்றும் தந்தைகளுக்கான ஆழ்ந்த அறிவு நோக்கிய ஒரு பயனமாகும்.

வாசிப்பு திட்டங்கள் – மே 2020

வாசிப்பு திட்டங்கள் – ஏப்ரல் 2020

வாசிப்பு திட்டங்கள் – மார்ச் 2020

7 நாட்கள்

இந்த 7- நாள் வாசிப்பு திட்டத்தின் மூலம், பெத் மோர் என்பவர் வேதத்தின் கேள்விகள் வாயிலாக நம்மை நன்கு அறிந்த நமது ஆண்டவரிடம் நெருங்க செய்வார். ஒரு வாக்கியத்தின் முடிவில் வளைந்த கேள்விக் குறியீடு ஆர்வம் மற்றும் சந்தேகத்தைக் கூட சிலசமயம் குறிக்கும். ஒரு கேள்வி என்பது பலவீனத்தில் அல்லது பாதிப்பில் இருந்து நெருக்கத்தை குறித்த அழைப்பாகும். அத்தகைய அழைப்பிலிருந்து வேதாகமும் விலகவில்லை. தேவனுடைய மக்கள் தங்கள் படைப்பாளரைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதை மீண்டும் மீண்டும் காண்கிறோம். அண்டசராசரத்தின் கர்த்தரும் தம்முடைய படைப்பைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதையும் நாம் காண்கிறோம். அழைப்பை ஏற்றுக்கொள்வது தேடலின் ஒரு சவால். வார்த்தைக்குள் தோண்டி எடுக்கவும், கர்த்தரின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், உங்கள் கேள்விகளை அவர் முன் கொண்டு வரவும் கற்றுக்கொள்ளுங்கள். வளைந்த நிறுத்தற் குறியீடு உங்களை தந்தையுடனான நெருக்கமான உறவுக்கு சுட்டிக்காட்டும் வரைபடமாக இருக்கட்டும்.

வாசிப்பு திட்டங்கள் – பிப்ரவரி 2020

7 நாட்கள்

தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ.சர்ச் தலைமை போதகரான க்ரைக் குரோவ்ஷெல் எழுதின தெய்வீக திசை வேதாகம திட்டம், அவருடைய தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஏழு அடிப்படை கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, அது நாம் தினந்தோறும் தேவ ஞானத்துடன் முடிவுகளை எடுக்க நமக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துகிறது. தேவன் மகிமைப் படும்படியான, மற்றும் மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதான ஒரு வாழ்க்கைக் கதை நீங்கள் வாழத் தேவையான ஆவியின் வழிகாட்டுதலை இத்திட்டத்தில் கண்டறிக.