Posted on 2020-04-012021-10-11வாசிப்பு திட்டங்கள் – ஏப்ரல் 2020 ஏன் ஈஸ்டர்? 5 நாட்கள் ஈஸ்டரைக் குறித்த மிகவும் முக்கியமானது என்ன? ஏன் 2000 வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு மனிதர் மீது இவ்வளவு அதிகமான ஆர்வம்? ஏன் பல மக்கள் இயேசுவைக்குறித்து உற்சாகமாக உள்ளனர்? ஏன் நமக்கு அவர் தேவை? எதற்காக அவர் வந்தார்? எதற்காக அவர் மரித்தார்? எதற்காக இவற்றை கண்டுபிடிக்க யாரும் முயல வேண்டும்? இந்த 5-நாள் திட்டத்தில், நிக்கி கும்பெல் அவர்கள் இதே கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை பகிர்கிறார். இயேசு: நம் ஜெயக்கொடி 7 நாட்கள் நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையை கொண்டாடும்போது, நாம் வரலாற்றின் மிகவும் மேன்மையான வெற்றியையே கொண்டாடுகிறோம். இயேசுவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, அவர் பாவம் மற்றும் பாதாளத்தையும், மற்றும் அவற்றின் எல்லா பின்விளைவுகளையும் நித்தியமாக தோற்கடித்தார், மேலும் அந்த ஜெயத்தை நம்முடன் பகிரவும் முடிவுசெய்தார். இந்த ஈஸ்டர் வாரத்தில், அவர் வெற்றி சிறந்து கைப்பற்றிய அரண்களைப் பற்றி சிந்திப்பதில் மூழ்குவோம், அவர் நமக்காக செய்த யுத்தத்தை நினைவுகூறுவோம், மற்றும் அவரை நமது ஜெயக் கொடியாக ஸ்தோத்தரிப்போம். உயிர்த்தெழுதலின் கதை 7 நாட்கள் உங்கள் வாழ்க்கையின் கடைசி வாரம் அதுதான் என்று தெரிந்தால் அதை நீங்கள் எவ்வாறு செலவிடுவீர்கள்? இயேசு பூமியில் மனித வடிவத்தில் இருந்த கடைசி வாரம் மறக்கமுடியாத தருணங்கள். நிறைவான தீர்க்கதரிசனங்கள், கூடி நெருங்கிய ஜெபம், ஆழமான விவாதம், அடையாளச் செயல்கள், மற்றும் உலகையே புரட்டிப்போடும் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. உயிர்த்தெழுதலுக்கு முந்தைய திங்கட்கிழமை தொடங்கும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Life.Churchன் வேத திட்டம் இப்புனித வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஊடாக உங்களை அழைத்து செல்லும். யோவான் 10 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை யோவான் சுவிசேஷத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை நடத்தி செல்லும்.
Posted on 2020-03-012021-10-11வாசிப்பு திட்டங்கள் – மார்ச் 2020 கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவது 7 நாட்கள் நீங்கள் 18 வயதை அடைந்ததும், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. ஆனால் முடியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் எங்கே இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அங்கே இப்பொழுது நீங்கள் இல்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் தனியாக இல்லை. Life.Church இன் இளைஞர்களுக்கான ஒரு வேதபாடமாகிய “கூட்டாக” என்பது வழங்கும் இந்த 7 நாள் வேதாகமத் திட்டத்தில், வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளை நாம் ஒன்றுசேர்ந்து கண்டுபிடிப்போம். புதிய ஏற்பாட்டில் 60 நாட்கள் பயணம் 60 நாட்கள் இந்த வாசிப்பு திட்டம் புதிய ஏற்பாடு வழியாக உங்களை 60 நாட்களில் நடத்தி செல்லும். அனேக புத்தகங்கள் தகவல் அளிக்கும், ஆனால் வேதாகமம் உங்களை உருமாற்றும் ஆற்றல் கொண்டது. தினசரி பகுதிகளை வாசியுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சக்தி, நுண்ணறிவு மற்றும் உருமாற்றத்தை கண்டு வியப்படைவீர்கள். மாற்கு 8 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை மாற்கு நற்செய்தி நூல் துவக்கத்திலிருந்து இறுதி வரை நடத்தி செல்லும். தேடல் 7 நாட்கள் இந்த 7- நாள் வாசிப்பு திட்டத்தின் மூலம், பெத் மோர் என்பவர் வேதத்தின் கேள்விகள் வாயிலாக நம்மை நன்கு அறிந்த நமது ஆண்டவரிடம் நெருங்க செய்வார். ஒரு வாக்கியத்தின் முடிவில் வளைந்த கேள்விக் குறியீடு ஆர்வம் மற்றும் சந்தேகத்தைக் கூட சிலசமயம் குறிக்கும். ஒரு கேள்வி என்பது பலவீனத்தில் அல்லது பாதிப்பில் இருந்து நெருக்கத்தை குறித்த அழைப்பாகும். அத்தகைய அழைப்பிலிருந்து வேதாகமும் விலகவில்லை. தேவனுடைய மக்கள் தங்கள் படைப்பாளரைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதை மீண்டும் மீண்டும் காண்கிறோம். அண்டசராசரத்தின் கர்த்தரும் தம்முடைய படைப்பைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதையும் நாம் காண்கிறோம். அழைப்பை ஏற்றுக்கொள்வது தேடலின் ஒரு சவால். வார்த்தைக்குள் தோண்டி எடுக்கவும், கர்த்தரின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், உங்கள் கேள்விகளை அவர் முன் கொண்டு வரவும் கற்றுக்கொள்ளுங்கள். வளைந்த நிறுத்தற் குறியீடு உங்களை தந்தையுடனான நெருக்கமான உறவுக்கு சுட்டிக்காட்டும் வரைபடமாக இருக்கட்டும்.
Posted on 2020-02-012021-10-11வாசிப்பு திட்டங்கள் – பிப்ரவரி 2020 அமைதியின்மை 3 நாட்கள் “உம்மிடத்திலே அமைதியை கண்டறியும் வரை எங்களுடைய இருதயம் ஓய்வடையாது” இந்த பிரபலமான வாக்கியத்தின் மூலம் நம்மில் அநேகர் உணரும் அமைதியின்மையை அகஸ்டின் வருணித்திருக்கிறார். ஆனால் உண்மையான அமைதியின்மைக்கு தீர்வு என்ன? இந்த மூன்று நாள் திட்டம், பண்டைய காலத்து ஓய்வுநாளை வேறு கோணத்தில் காண்பதன் மூலம் ஓரளவு தீர்வை காணலாம் – “அவர்” மூலமாக – இயேசு – நம்முடைய சமாதான காரணர். தெய்வீக திசை 7 நாட்கள் தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ.சர்ச் தலைமை போதகரான க்ரைக் குரோவ்ஷெல் எழுதின தெய்வீக திசை வேதாகம திட்டம், அவருடைய தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஏழு அடிப்படை கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, அது நாம் தினந்தோறும் தேவ ஞானத்துடன் முடிவுகளை எடுக்க நமக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துகிறது. தேவன் மகிமைப் படும்படியான, மற்றும் மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதான ஒரு வாழ்க்கைக் கதை நீங்கள் வாழத் தேவையான ஆவியின் வழிகாட்டுதலை இத்திட்டத்தில் கண்டறிக. ஜெபம் 21 நாட்கள் எப்படி ஜெபிப்பது என்று பக்தர்களின் ஜெபங்களிலிருந்தும் இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கைகளை தேவனிடம் தினமும், தொடர்ந்து பொறுமையாக எடுத்து செல்வதில் உற்சாகம் கண்டடையுங்கள். காலியான சுய நீதி நிறைந்த ஜெபங்களுக்கும், சுத்த இருதயத்திலிருந்து வரும் தூய்மையான ஜெபங்களுக்கும் மாதிரிகளை காணுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள். 40 நாட்கள் தவக்காலம் 47 நாட்கள் தவக்காலம் எப்பொழுதும் கிறிஸ்து நமக்காக சிலுவையில் செய்த காரியங்களில் கவனத்தை திருப்பும் நாட்களாக உள்ளன. இந்த பகட்டான பரிசை ஒவ்வொரு வருடமும் தியானிக்க முடியும், மற்றும் அது நம்மை வியப்பிக்க செய்யும். இந்த வாசிப்பு திட்டத்தின் மூலம், நீங்கள் சுவிசேஷ வரலாற்றை காலக்கிரமமாக கடந்து சென்று, இயேசுவின் பூலோக ஊழியத்தின் கடைசி வார அடிச்சுவடுகளை தொடரலாம். இந்த திட்டம் 47 நாட்கள் நீடித்தாலும், பாரம்பரியத்தின்படி ஏழு ஞாயிற்றுக்கிழமைகளும் ஓய்வு நாட்கள்.
Posted on 2020-01-012021-10-01வாசிப்பு திட்டங்கள் – ஜனவரி 2020 போ, செய், சொல், கொடு: இயேசு கிறிஸ்துவினிடம் சரண் அடைவதில் உள்ள சுதந்திரம் 7 நாட்கள் இயேசுவிடம் அர்ப்பணிப்பது என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தருணம். ஆனால் இந்த தீர்மானம் எதை குறிக்கிறது மற்றும் நாம் தினந்தோறும் அதன்படி எப்படி வாழப் போகிறோம்? இது வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய தீர்மானங்களுக்கு மட்டும்தானா அல்லது ஆவிக்குரிய மனிதனுக்கா? பயம், பழைய தோல்விகள் மற்றும் புரிந்துகொள்ள முடியாமை போன்றவை நம்மை தடுக்கக் கூடும். “போ செய் சொல் கொடு” என்பது ஒரு உறுதிமொழி/ ஜெபம் அது உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அடுத்து என்ன அடி எடுத்து வைக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும். இயேசு உடனே கூடவரும் விடுதலையை உணருங்கள் 21 நாள் உபவாசம் 21 நாட்கள் உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.
Posted on 2019-11-012021-10-01வாசிப்பு திட்டங்கள் – நவம்பர் 2019 சங்கீதம் 31 நாட்கள் சங்கீத புத்தகத்தை வாசிப்பது எளிமையாக உற்சாகமூட்டக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு கஷ்டமான நேரத்தின் ஊடாக சென்றுக்கொண்டிருக்கும் போது, சங்கீத புத்தகம் ஒரு ஆறுதலாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கும். தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் – ஞானம் 5 நாட்கள் நாம் கடந்து செல்லும் அன்றாட வாழ்க்கைப் பாதையில் நம்மை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி நமக்கு உதவி செய்வதே தேவனின் இருதயத்தைத் தினமும் தேடுதல் என்ற 5-நாள் வாசிப்பு திட்டத்தின் நோக்கமாகும். பாய்டு பெய்லி அவர்கள் சொல்கிறார்கள், “உங்களுக்கு தேவனைத் தேட வேண்டும் என்ற விருப்பம் இல்லாதிருக்கும் நேரங்களிலும் அல்லது அதிக ஓய்வே இல்லாதிருக்கும் நேரங்களிலும் கூட அவரைத் தேடுங்கள், அப்பொழுது அவர் உங்கள் உண்மைக்குப் பலன் அளிப்பார்”. வேதம் சொல்லுகிறது, “அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்”. சங்கீதம் 119:2 தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள் 7 நாட்கள் ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.