Posted on 2021-09-152021-09-21 by BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள் : புதிய ஏற்பாடு : 1 தெசலோனிக்கேயர் – 2 தீமோத்தேயு பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் வடிவம் மற்றும் முக்கிய கருப்பொருள்களை ஒரு விளக்கப்படம் மூலம் மனக்கண்ணால் பாருங்கள். கண்ணோட்டம்: 1 தெசலோனிக்கேயர் 1 தெசலோனிக்கேயர் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். மீண்டும் வரப் போகும் இயேசு ராஜா எல்லாவற்றையும் சரி செய்வார் என்ற எதிர்கால நம்பிக்கைக்கு துன்புறுத்தப்பட்ட தெசலோனிக்கேய கிறிஸ்தவர்களை வழிநடத்துகிறார் பவுல். கண்ணோட்டம்: 2 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். 2 தெசலோனிக்கேயரில், இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி பவுல் தனது முந்தைய போதனைகளை தெளிவுப்படுத்தினார். மேலும் சமூகத்தை சீர்குலைக்கும் கிறிஸ்தவர்களைக் கண்டித்தார். கண்ணோட்டம்: 1 தீமோத்தேயு 1 தீமோத்தேயு புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். பொய்யான போதகர்களால் சீர்குலைந்த எபேசுவில் உள்ள தேவாலயத்திற்கு ஒழுங்கையும் நோக்கத்தையும் எவ்வாறு மீட்டெடுப்பது என்று 1 தீமோத்தேயுவில் பவுல் தீமோத்தேயுவுக்குக் காட்டுகிறார். கண்ணோட்டம்: 2 தீமோத்தேயு 2 தீமோத்தேயு புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். 2 தீமோத்தேயுவில், பவுல் மரண தண்டனையை சந்திக்கும் தருனத்தில், எப்பேர்ப்பட்ட கடினமான, ஆபத்தான சூழ்நிலையிலும் இயேசுவை பின்பற்ற வேண்டும் என்ற தனிப்பட்ட சவாலை தீமோத்தேயுவிற்கு விடுகிறார்.