Posted on 2022-01-27 by வாசிப்பு திட்டங்கள் – பிப்ரவரி 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (பிப்ரவரி) 28 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 2 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் -தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 2ம் பகுதியானது ஆதியாகமம், யாத்திராகமம, லேவியராகமம் மற்றும் கலாத்தியர் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. மாற்கு 8 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை மாற்கு நற்செய்தி நூல் துவக்கத்திலிருந்து இறுதி வரை நடத்தி செல்லும். எதைக்குறித்தும் கவலையில்லை 7 நாட்கள் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கவலைகளைத்துரத்த ஒரு வழி இருந்தால்? மெய்யான இளைப்பாறுதல் நீங்கள் எண்ணுவதைவிட மிக அருகிலேயே இருக்கிறது. பாஸ்டர் கிரேக் கிரோஸ்செளின் “எதைக்குறித்தும் பதற்றமில்லை” என்ற பிரசங்கத்துடன் Life.Churchன் இந்த 7 நாள் திட்டத்தின் மூலமாக, பயத்திற்கு பதிலாக சமாதானத்தைக்கொள்ளுங்கள். தேவனுடைய சர்வாயுதவர்க்கம் 5 நாட்கள் தினந்தோறும், முழுநேரமும் உங்களை சூழ்ந்தபடி – கண்ணுக்கு புலனாகாத, கேள்விப்படாத, ஆனாலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உணரக்கூடிய ஒரு போர் சீற்றமடைகிறது. மிக அர்பணிப்புமிக்க, அந்தகாரமான சத்துரு ஒருவன் உங்களுக்கு முக்கியமென்று இருக்கும்: உங்கள் இருதயம், உங்கள் சிந்தனை, உங்கள் மணவாழ்க்கை, உங்கள் குழந்தைகள், உங்கள் உறவுகள், உங்கள் எதிர்ப்புத்திறன், உங்கள் கனவுகள், உங்கள் விதி போன்ற எல்லாவற்றிலும் அழிவை ஏற்படுத்த வகைதேடுகிறான். இருப்பினும் அவனுடைய போர்த்திட்டம் உங்களை நிராயுதபாணியாக எதிர்பாராதநிலையில் பிடிப்பதை சார்ந்துள்ளது. நீங்கள் அங்குமிங்குமாக தள்ளப்படுவதால் சோர்ந்தும் உங்கள் பாதுகாப்பு இல்லாமலும் பிடிபடுகிறீர்களென்றால், இந்த தியானம் உங்களுக்கானது. சத்துருவானவன் தருணத்திற்கேற்றபடி உடையணிந்த ஒரு பெண்ணை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் பரிதாபமாக தோற்றுப்போகிறான். தேவனுடைய சர்வாயுதவர்க்கம், ஒரு விசுவாசியின் இருப்புகளின் வேதவிளக்கம் என்பதிலும் மேலாக, அதை உடுத்திக்கொண்டு தனித்த்துவமான போர்த் தந்திரங்களை உருவாக்கி ஜெயத்தை சுதந்தரித்துக்கொள்ள உதவும் ஒரு செயல் திட்டமாகும்.