Posted on 2021-01-312021-06-07வாசிப்பு திட்டங்கள் – ஜனவரி 2021 Walk With Jesus – வாழ்க்கையில் மகிழ்ச்சி 6 நாட்கள் தேவனின் கிருபைகள் காலைதோறும் புதியவைகள். இந்த திட்டம் உங்களை ஒவ்வொரு நாளும் வாழ்கை பாதையில் தேவனோடு நடத்தி ஜெப வாழ்க்கையில் உறுதிப்பட வாழ்க்கையில் மகிழ்ச்சிப்பெற தேவ வார்த்தையால் பெலப்படுத்தும். இயேசு உங்களோடு தினமும் பேசி மகிழ்ச்சியோடு வழிநடத்த வாஞ்சிக்கிறார். உங்கள் இருதயங்களை அவருக்கு கொடுப்பீர்களா ? Walk with Jesus – பயப்படாதே ! 4 நாட்கள் இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எதிர்காலம், வியாதி, கடன் பிரட்சனை போன்ற காரியங்களினால் பயத்தோடு காணப்படலாம். ஆனால் எல்லா பயத்தையும் நீக்கி, ” பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன் ” என்று சொல்லும் கர்த்தராகிய இயேசு உங்களோடு உண்டு ! இயேசுவே, நீர் எனக்கு தேவை 2 நாட்கள் இயேசு உங்களுக்குத் தேவை என்பதை நீங்கள் ஆழமாக உணருகிறீர்களா? ஜெபத்திற்கான இந்த இரண்டு நாள் திட்டம் நீங்கள் அவருடன் தனியாக செலவிடும் நேரத்தை மேம்படுத்தவும் நீங்கள் அவரிடம் அழுவதற்கு உதவவுமே வடிவமைக்கப் பட்டுள்ளது. திசில்பென்ட் மினிஸ்ட்ரீஸின் “இயேசுவே நீர் எனக்கு வேண்டும்” என்ற எட்டு பாகம் கொண்ட தொடருக்கு ஜெபத்துணையாகவும் இது செயல்படுகிறது. ஜெபம் 21 நாட்கள் எப்படி ஜெபிப்பது என்று பக்தர்களின் ஜெபங்களிலிருந்தும் இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கைகளை தேவனிடம் தினமும், தொடர்ந்து பொறுமையாக எடுத்து செல்வதில் உற்சாகம் கண்டடையுங்கள். காலியான சுய நீதி நிறைந்த ஜெபங்களுக்கும், சுத்த இருதயத்திலிருந்து வரும் தூய்மையான ஜெபங்களுக்கும் மாதிரிகளை காணுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள். கவலை பற்றி வேதம் சொல்லும் 7 விஷயங்கள் 7 நாட்கள் ஒவ்வொரு நாளுக்கும் நம் வாழ்க்கையில் சிக்கலான புதிய சவால்களை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு அற்புதமான புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்த ஏழு நாள் தியானத்தில், YouVersion-இல் உள்ள ஊழியர்கள், இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லாவற்றிற்கும் கடவுளின் வார்த்தையிலிருந்து உண்மைகளைப் பயன்படுத்த உதவுகிறார்கள். ஒவ்வொரு நாளின் தியானத்திலும், கடவுள் உங்களிடம் பேசுவதைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் வசன படம் இணைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் குரல் 7 நாட்கள் ‘நம்பிக்கையின் குரல்’ – என்னும் நிகழ் ச்சியினை தொடர் ந்து கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். ‘Voice of hope’ an audio series of encouragement and hope for a time such as this. Listen and be blessed! உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள் 14 நாட்கள் ஜாய்ஸ் மேயரின் நடைமுறை வேதபாட போதனையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான வேத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், உங்கள் மனதைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் என்பதைக் கண்டறிய உதவுகிறது!
Posted on 2021-01-012021-10-14வாசிப்பு திட்டங்கள் – ஜனவரி 2021 தேவன் + இலக்குகள்: ஒரு கிறிஸ்தவராக இலக்குகளை எவ்வாறு அமைப்பது 5 நாட்கள் ஒரு கிறிஸ்தவராக நமக்காக ஒரு இலக்கை வைத்துக்கொள்வது சரியா? நமக்கு எப்படி தெரியும் அந்த இலக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது நமது ஆசையா என்று? சரி, கிறிஸ்தவ இலக்கு எப்படி இருக்கும்? இந்த 5 நாள் வாசிப்பு திட்டத்தில், வேதத்தை முற்றும் குடைந்து இந்த இலக்கை குறித்ததான பகுதியில் ஒரு தெளிவைப் பெற போகிறோம். அது மட்டுமல்லாது நமது திசையையும் அந்த கிருபையால் இயங்கும் இலக்கை நோக்கி திருப்ப போகிறோம்! ஜீவனைப் பேசுதல் 6 நாட்கள் வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள், சக்தி நிறைந்த வார்த்தைகள்! கட்டியெழுப்பும் வார்தைகள் அல்லது மனதை கிழிக்கும் வார்த்தைகள். உயிரைக் கொடுக்கும் வார்தைகள் அல்லது மரணத்தைக் கொண்டுவரும் வார்த்தைகள். தேர்வு நம்முடையது. நமது வார்த்தைகளில் உள்ள குறிப்பிடத்தக்க சக்தியை மதிப்பீடு செய்வோம். திருமணத்திற்கு-முன் பாடநெறி 5 நாட்கள் வலுவான திருமணங்கள் தானாகவே உருவாகாது. வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஆரோக்கியமான மற்றும் வலுவான திருமணத்தை உருவாக்க தேவையான அணுகுமுறைகள், மதிப்புகள் மற்றும் பழக்கங்களை நீங்கள் கண்டுபிடிக்கப் வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இந்த 5 நாள் திட்டமானது The Marriage புத்தகத்தின் ஆசிரியர்களான நிக்கி மற்றும் சிலா லீ ஆகியோரால் உருவாக்கப்பட்ட The Pre-Marriage பாடத்திட்டத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கனவுகள் மீட்கப்பட்டன 7 நாட்கள் நம்முடைய கனவுகள் எட்டாத தூரத்தில் இருப்பதுபோலவோ அல்லது தகர்க்கப்பட்டது போலவோ தோன்றும்போது நாம் என்ன செய்வோம்? அதிர்ச்சியையும் தூஷணங்களையும் மேற்கொண்டதோடு, விவாகரத்தின் மணமுறிவையும் சந்தித்தவளாக, இந்த கேள்வியை நான் அதிகதிகமாக சந்தித்திருக்கிறேன். நீ சோகத்தையோ அல்லது இழப்பையோ அனுபவித்துக்கொண்டிருக்கலாம், அல்லது நீண்ட காலமாக காத்துக்கொண்டிருப்பதால் விரக்தியில் இருக்கலாம், ஆனாலும் உன் வாழ்விற்குரிய தேவ-சித்தம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது! நண்பரே, மீண்டும் கனவுகாணும் நேரமிது.
Posted on 2020-12-202021-10-22கிறிஸ்து பிறப்பு பண்டிகை நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ் 12 நாட்கள் அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்! வருகை: கிறிஸ்துமஸ் பயணம் 25 நாட்கள் உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம். மாட்டுத்தொழுவத்திற்கான பயணம் 25 நாட்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமைதியான இரவில், தேவதூதர்கள் தங்கள் மந்தைகளை மேய்க்கும் மேய்ப்பர்கள் கூட்டத்திற்கு இரட்சகரின் பிறப்பு செய்தியைக் கொண்டு வந்தனர். செய்தியைக் கேட்டபின், அந்த மேய்ப்பர்கள் பெத்லகேமில் ஒரு மாட்டுக்கொட்டையில் ஒரு குழந்தையைத் தேடுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும், அந்த அழைப்பு மாறவில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லியுடன் இணையுங்கள், அவர் இரட்சகரை நெருங்க உங்களுக்கு உதவுவதோடு, இந்த காலத்தில் தகப்பனின் அன்பில் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க ஊக்குவிக்கிறார் எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம் 5 நாட்கள் இது சந்தோஷமாக இருக்கவேண்டிய காலம், கூடவே மிகவும் மும்முரமாக இருக்கக்கூடிய காலமும்கூட. இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க கொஞ்சம் நேரம் அமைதி மற்றும் ஆராதனைக்காக உங்கள் மும்முரமான வாழ்க்கையை விட்டு வெளியே வாருங்கள். இயேசுவின் பெயரை புரிந்துகொள்ள, என்ற புத்தகத்தை சார்ந்து, இந்த 5 நாள் தியானம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உங்களுக்கு இயேசுவின் நன்மையை அறிந்து, உங்கள் தேவையை புரிந்துகொண்டு, அவருடைய அமைதி மற்றும் உண்மைத்தன்மையை நாட உதவும். எதைக்குறித்தும் கவலையில்லை 7 நாட்கள் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கவலைகளைத்துரத்த ஒரு வழி இருந்தால்? மெய்யான இளைப்பாறுதல் நீங்கள் எண்ணுவதைவிட மிக அருகிலேயே இருக்கிறது. பாஸ்டர் கிரேக் கிரோஸ்செளின் “எதைக்குறித்தும் பதற்றமில்லை” என்ற பிரசங்கத்துடன் Life.Churchன் இந்த 7 நாள் திட்டத்தின் மூலமாக, பயத்திற்கு பதிலாக சமாதானத்தைக்கொள்ளுங்கள்.
Posted on 2020-11-012021-10-11வாசிப்பு திட்டங்கள் – நவம்பர் 2020 சங்கீதம் 31 நாட்கள் சங்கீத புத்தகத்தை வாசிப்பது எளிமையாக உற்சாகமூட்டக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு கஷ்டமான நேரத்தின் ஊடாக சென்றுக்கொண்டிருக்கும் போது, சங்கீத புத்தகம் ஒரு ஆறுதலாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கும். இயேசுவைபோல நேசியுங்கள் 13 நாட்கள் நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங்களையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வீர்கள். நவீன யுகத்தில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது 7 நாட்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்றவுடன் சிலருக்கு மனதில் பதட்டமும் மிக பெரிய எதிர்பார்ப்பும் ஏற்படும். தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்த இந்த காலகட்டத்திலும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு தனிப்பட்ட மனிதர் திருமணத்திற்கு தயாராகி, வாழ்க்கை துணையை சரியாய் தேர்வு செய்து, திருமண வாழ்க்கைக்குள் நுழைவதை குறித்து இந்த 7 நாள் தியான திட்டம் அமைந்திருக்கும். வாழ்வின் இந்த கட்டத்தில், தேவனுடைய வழிநடத்தலில் பிரயாணிப்பது பற்றி போதகர் பென் ஸ்டூவர்ட் அவர்கள் நமக்கு கற்று தர இருக்கிறார்கள். வாழ்க்கை துணையை முடிவு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன, அதை எவ்விதத்தில் கையாளுவது போன்ற வழிமுறைகளையும் யுக்திகளையும் அவர்கள் நமக்கு போதிக்க இருக்கிறார்கள். Breakaway ஊழியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான போதகர் பென் அவர்கள், தற்போது வாஷிங்டன் பட்டணத்தில் உள்ள Passion சிட்டி சபையின் போதகராக பணியாற்றி வருகிறார்கள். Texas A&M campus மூலமாக ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களுக்கு வாராந்திர வேதபாட வகுப்புகளையும் நடத்தி வருகிறார்கள். பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம் 12 நாட்கள் நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.
Posted on 2020-10-012021-10-11வாசிப்பு திட்டங்கள் – அக்டோபர் 2020 1 மற்றும் 2 பேதுரு 4 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை 1 மற்றும் 2 பேதுரு வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழுங்கள்: ஜான் பைப்பருடன் தியானங்கள் 7 நாட்கள் பரிசுத்த ஆவியானவரை குறித்து ஜான் பைப்பரின் 7 வேதாகம தியானங்கள் எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறு 13 நாட்கள் எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்தைக் கொண்டு வாழ தீர்மானித்தால் வாழ்க்கை எவ்வாறாக அமையுமென்று கற்றுக் கொள்வீர்கள்.