Posted on 2023-04-28வாசிப்பு திட்டங்கள் – மே 2023 வாழ்க்கை மாற்றப்பட்டது: அடையாளத்தைத் தழுவுதல் 6 நாட்கள் நாம் யாராக இருக்க வேண்டும் என பல குரல்கள் சொல்கையில், நமது அடையாளத்தை குறித்து நாம் போராடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவன் நமது வேலையை வைத்தோ, திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கொண்டோ, நமது தவறுகளைக் கொண்டோ நம்மை வரையறுக்க விரும்பவில்லை. நம் வாழ்வில் அவருடைய கருத்தே உயரிய அதிகாரம் இருக்க வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார். இந்த ஆறு நாள் திட்டம் வேதம் நீங்கள் யார் என்று சொல்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் அதை தழுவிக் கொள்ளவும் உதவும். விட்டுவிடாதீர்கள் 7 நாட்கள் நீங்கள் எப்போதாவது மிகவும் சோர்வாக அல்லது தோல்வியடைந்தது போல் உணர்ந்திருக்கிறீர்களா? விடாமுயற்சியுடன் இருப்பதற்கும் தொடர்ந்து முன்னேறுவதற்கும் வேதாகமம் ஊக்கமளிக்கிறது! இந்த 7 நாள் வாசிப்புத் திட்டம் முன்னோக்கிய பயணத்திற்கு உங்களைப் புதுப்பிக்கும். அடிமைத்தனத்திலிருந்து ஒரு முழுத்திருப்பம் 3 நாட்கள் உங்கள் வாழ்க்கை கடவுளுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகவில்லை என்றால், நீங்கள் நிச்சயமாக வேதனையான விளைவுகளை அனுபவிப்பீர்கள். பலர் தங்கள் உடல்நலத்துடன் போராடி, வேலைகளை இழந்துள்ளனர், உறவுகளை இழந்துள்ளனர், மேலும் போதைக்கு அடிமையானதால் கடவுளிடமிருந்து தொலைவில் இருப்பதாக உணர்கின்றனர். போதைப்பொருள் அல்லது ஆபாசப் படங்கள் போன்ற தீவிர அடிமைத்தனம் அல்லது உணவு அல்லது பொழுதுபோக்கு போன்ற குறைவான அடிமைத்தனம் போன்றவையாக இருந்தாலும், போதை பழக்கம் நம் வாழ்க்கையை சீர்குலைக்கிறது. அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் டோனி எவன்ஸ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வழியைக் காட்டட்டும். விற்பனையாகும் எழுத்தாளர் டோனி எவன்ஸ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வழியைக் காட்டட்டும். கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்? 5 நாட்கள் கேள்விகள்: கர்த்தரைப் பொறுத்தவரையில் நம் எல்லோருக்குமே இவை உண்டு. நமது ‘ஒப்பிட்டுப் பார்க்கும் கலாச்சாரம்’, நம்மை மிக அந்தரங்கமான கேள்விகளை நம்மையே கேட்க வைக்கிறது: “கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?” அல்லது “எப்படி அவர் என்னை நேசிக்க முடியும்?” என்று கூட கேட்கலாம். இந்த திட்டத்தில் 26 வேத பகுதிகளுடன் நீங்கள் ஈடுபடுத்தப்படுவீர்கள்- அவை உங்கள் மீதான கர்த்தரின் அன்பு நிபந்தனையற்றது என்ற உண்மையை எடுத்துக்கூறும்.
Posted on 2023-03-30வாசிப்பு திட்டங்கள் – ஏப்ரல் 2023 ஏன் ஈஸ்டர்? 5 நாட்கள் ஈஸ்டரைக் குறித்த மிகவும் முக்கியமானது என்ன? ஏன் 2000 வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு மனிதர் மீது இவ்வளவு அதிகமான ஆர்வம்? ஏன் பல மக்கள் இயேசுவைக்குறித்து உற்சாகமாக உள்ளனர்? ஏன் நமக்கு அவர் தேவை? எதற்காக அவர் வந்தார்? எதற்காக அவர் மரித்தார்? எதற்காக இவற்றை கண்டுபிடிக்க யாரும் முயல வேண்டும்? இந்த 5-நாள் திட்டத்தில், நிக்கி கும்பெல் அவர்கள் இதே கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை பகிர்கிறார். 1 & 2 தீமோத்தேயு 5 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை 1 மற்றும் 2 தீமோத்தேயு வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. சமூக மாற்றம் பற்றிய ஒரு வேதகாமப் பார்வை 5 நாட்கள் பல கிறிஸ்தவ குழுக்கள் ஆவிக்குரிய தேவைகள் அல்லது உடல் தேவைகளை பூர்த்தி செய்வதில் அக்கறை கொண்டுள்ளனர். கிறிஸ்தவர்களாகிய நமது முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும்? இந்த விஷயத்தில் வேதகமத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
Posted on 2023-03-02வாசிப்பு திட்டங்கள் – மார்ச் 2023 ஆறு நாட்களிள் கர்த்தரின் பெயர்கள் 6 நாட்கள் தேவனின் பல நாமங்களில் இருந்து, அவருடைய குணாதிசயங்கள் மற்றும் அவரது இயல்புகளின் அம்சங்களை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்குப்புறமே, தேவனின் 80 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாமங்களை வேதாகமம் காண்பிக்கிறது. ஒரே உண்மையான தேவனிடம் நெருங்கி வர விசுவாசிக்கு உதவும் ஆறு பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளன. டாக்டர். டோனி எவன்ஸ் எழுதிய கடவுளின் நாமங்களின் வல்லமையை அனுபவிப்பது: ஜீவன் கொடுக்கும் பக்திக்குரியன. ஹார்வெஸ்ட் ஹவுஸ் பப்ளிஷர்ஸ், யூஜின், ஓரிகான் 2017. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள் 7 நாட்கள் ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். உங்கள் வேலைக்கு அர்த்தம் கொடுங்கள் 4 நாட்கள் நம்மில் அநேகர் ஐம்பது சதவிகித நேரத்தை நம் வேலைகளை செய்வதில்தான் செலவிடுகிறோம். நமது வேலைக்கு அர்த்தம் உள்ளதா என்பதையும், நாம் செய்யும் வேலை முக்கியமானதுதானா, என்பதையும் நாம் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், மன உளைச்சலும், தேவைகளும், துன்பங்களும் வேலையை குறித்த நமது கண்ணோட்டத்தை கடினமானதாகவும், இதை எப்படியாகிலும் முடித்தால் போதும் என்பதாகவும் மாற்றுகின்றன. உங்கள் வேலைக்கு ஒரு அர்த்தத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உங்கள் விசுவாசத்தில்தான் வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழுங்கள்: ஜான் பைப்பருடன் தியானங்கள் 7 நாட்கள் பரிசுத்த ஆவியானவரை குறித்து ஜான் பைப்பரின் 7 வேதாகம தியானங்கள்
Posted on 2023-02-02வாசிப்பு திட்டங்கள் – பிப்ரவரி 2023 இயேசு என்னை நேசிக்கிறார் 7 நாட்கள் யாரோ ஒருவர், “நான் கிறிஸ்தவனாயிருப்பதற்கு எதை விசுவாசிக்க வேண்டும்?” என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? “இயேசு என்னை நேசிக்கிறார், இதை நான் அறிவேன், ஏனெனில் வேதாகமம் அவ்வாறு சொல்லுகிறது”, என்ற நேசிக்கப்படுகிற பாடலின் வரிகளைக் கொண்டு எதை விசுவாசிக்க வேண்டும் ஏன் என்று பத்திரிக்கையாளராய் இருந்து போதகரானவர் விளக்குகிறார். சிறந்த ஆசிரியர் ஜான் எஸ், டிக்கர்சன் அவசியமான கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் அவை எதனால் முக்கியம் என்பதை உண்மையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். நோக்கத்திற்கு இணங்க நிற்பது 5 நாட்கள் என்னுடைய நோக்கம் என்ன? நான் என் ஜீவனை கொண்டு என்ன செய்ய எதிர்பார்க்கப்படுகிறது? எனக்காக தேவனுடைய திட்டம் என்ன? இவைகளெல்லாம் நாம் நம் ஜீவியத்தில் எதோ ஒரு வேளையில் கேட்கும் கேள்விகள். உங்கள் நோக்கத்தை குறித்து இந்த திட்டத்தில் சில கேள்விகளை நாம் பதிலளிக்க போகிறோம். இந்த தலைப்பில் சில காரியங்களை பதிலளிக்க முயலும் எங்கள் C3 கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து வாசியுங்கள். கனவுகள் மீட்கப்பட்டன 7 நாட்கள் நம்முடைய கனவுகள் எட்டாத தூரத்தில் இருப்பதுபோலவோ அல்லது தகர்க்கப்பட்டது போலவோ தோன்றும்போது நாம் என்ன செய்வோம்? அதிர்ச்சியையும் தூஷணங்களையும் மேற்கொண்டதோடு, விவாகரத்தின் மணமுறிவையும் சந்தித்தவளாக, இந்த கேள்வியை நான் அதிகதிகமாக சந்தித்திருக்கிறேன். நீ சோகத்தையோ அல்லது இழப்பையோ அனுபவித்துக்கொண்டிருக்கலாம், அல்லது நீண்ட காலமாக காத்துக்கொண்டிருப்பதால் விரக்தியில் இருக்கலாம், ஆனாலும் உன் வாழ்விற்குரிய தேவ-சித்தம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது! நண்பரே, மீண்டும் கனவுகாணும் நேரமிது.
Posted on 2023-01-02வாசிப்பு திட்டங்கள் – ஜனவரி 2023 தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள் 6 நாட்கள் ஒரு நாளில் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக இல்லை என்று நீங்கள் விரக்தியடைகிறீர்களா? உங்கள் டூ-டூ பட்டியலில் உள்ள திட்டங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது? சோர்வில் சோர்வடைந்து தேவனுடைய வார்த்தையை உங்கள் நண்பர்களிடமும் குடும்பத்துடனும் செலவழிக்க போதுமான நேரம் இல்லாததா? இவை உலகில் மிகவும் பொதுவான போராட்டங்களாக இருக்கலாம். நல்ல செய்தி என்னவென்றால் நம் காலத்தை நிர்வகிப்பதற்கு தெளிவான நியமங்களை வேதாகம் நமக்கு அளிக்கிறது. இந்தத் திட்டம் அந்த வேதவாக்கியங்களின் முலம் வெளிப்படுத்தி, இந்த வாழ்க்கையின் மிதமுள்ள நேரத்தை எப்படி செலவழிப்பது என்பதற்கான தரமான நடைமுறை ஆலோசனையை உங்களுக்குக் கொடுக்கும்! உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வார்த்தை 4 நாட்கள் ஆண்டு முழுவதும் ஒரு வார்த்தையில் மட்டும் கவனம் செலுத்துவதனால் உங்கள வாழ்க்கையை எளிமையாக்க ‘ஒரு வார்த்தை’ உதவுகிறது. தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் ஒரு வார்த்தையை கண்டறிவதன் எளிமை வாழ்க்கை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. குழப்பமும் சிக்கலும் தள்ளிப்போடுவதற்கும் முடக்குவதற்கும் நேராக நடத்துகின்றன, ஆனால் எளிமையும் ஒருமுகமும் வெற்றி மற்றும் தெளிவுக்கு நேராக நடத்துகின்றன. இந்த ஆண்டிற்கான ஒரு வார்த்தை தரிசனத்திற்கான மையத்தை அடைவது எப்படி என்று இந்த நான்கு நாள் தியானம் காட்டுகிறது.