BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள்: புதிய ஏற்பாடு: மத்தேயு – யோவான்

BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள் - புதிய ஏற்பாடு

பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் வடிவம் மற்றும் முக்கிய கருப்பொருள்களை ஒரு விளக்கப்படம் மூலம் மனக்கண்ணால் பாருங்கள்.

கண்ணோட்டம்: மத்தேயு 1-13

கண்ணோட்டம்: மத்தேயு 14- 28

கண்ணோட்டம்: மாற்கு

கண்ணோட்டம்: யோவான் 1-12

கண்ணோட்டம்: யோவான் 13-21

நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்

நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.


யோவான் 8:12

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.


ஏசாயா 9:2

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் அரணானவர், யாருக்கு அஞ்சுவேன்?


சங்கீதம் 27:1

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.


2 கொரிந்தியர் 4:6

மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.


ரோமர் 8:10-11

முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.


எபேசியர் 5:8

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.


1 யோவான் 1:7-9

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.


மத்தேயு 5:14-16

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.


யோவான் 1:5

வேதாகம பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்க

இலவச வேதாகமத்தை பெறுங்கள்.

உங்கள் கைபேசி,
டாப்லெட் மற்றும் கணினிக்கு


வேதாகம பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்க

கடவுள் மற்றும் அவருடைய வார்த்தையை மையமாகக் கொண்டு வாழ்வது கடினம். அதனால்தான் இலவச YouVersion வேதாகம செயலி தினமும் தேவனின் இருதயத்தைத் தேடுவதற்கான உபகரணங்களை உங்களுக்கு வழங்குகிறது:  ஒலி வேதாகமங்களைக் கேளுங்கள், ஜெபங்களை உருவாக்குங்கள், நண்பர்களுடன் சேர்ந்து படியுங்கள், 2,000த்திற்க்கும் அதிகமான வேதாகம பதிப்புகளை ஆராயுங்கள், மேலும் பல. இப்போது உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்களில்!

வேதாகம பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்க

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

வேதாகம திட்ட சின்னம்

விசுவாசிகள் அனைவரும் இருதயத்திலும் மனதிலும் ஒன்றுபட்டார்கள்… கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு அப்போஸ்தலர்கள் வல்லமை வாய்ந்த சாட்சியம் அளித்தனர், மேலும் அவர்கள் அனைவருக்கும் தேவனின் பெரிய ஆசீர்வாதம் இருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 32-33

இயேசுவும் திருச்சபையும் முழு வேதாகமமும் எவ்வாறு இணைக்கின்றன.

புதிய ஏற்பாட்டை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றாலும், மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் (சுவிசேஷங்கள்) இயேசுவின் வாழ்க்கைக சரிதையை அவருடைய சீஷர்களின் கண்ணோட்டத்தில் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். லூக்காவின் ஆசிரியரும் அப்போஸ்தலருடைய நடபடிகளை எழுதினார், அவற்றை ஒரு தொடர்ச்சியான கதையாகக் கட்டமைத்தார். லூக்கா இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் உள்ளடக்கியது, பின்னர் அப்போஸ்தலருடைய நடபடிகளில் ஆரம்பகால திருச்சபையின் ஸ்தாபனத்தில் நேரடியாக பாய்கிறது.

இன்று, யூவெர்ஸின் மற்றும் வேதாகம திட்டம் இடையே நெருங்கிய கூட்டாளி, நாம் அறிவித்த வருகிறோம் லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம், நீங்கள் ஒன்றாக இந்த புத்தகங்கள் அனுபவிக்க உதவும் ஒரு அனைத்து புதிய காணொளி தியானம். திட்டம் முழுவதும், வேதாகமத்தின் திட்டத்தின் குறுகிய கதை காணொளிக்கள், இயேசுவின் வாழ்க்கையும் போதனைகளும் இரட்சகரைப் பற்றிய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை எவ்வாறு நிறைவேற்றுகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன – இறுதியில் முழு வேதாகமத்தின் ஒட்டுமொத்த விவரிப்புகளையும் ஒன்றாகக் கொண்டுவருகின்றன.

இன்னும் சிறப்பாக, லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது, எனவே நீங்கள் உலகம் முழுவதிலுமுள்ள மற்றவர்களுடன் சேர்ந்து அதை அனுபவிப்பீர்கள். லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் வழியாக ஒரு பயணத்தைத் தொடங்கவும், வேதாகம திட்டம் மற்றும் யூவர்ஷனிலிருந்து இந்த அற்புதமான புதிய திட்டத்தைப் பற்றி உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பரப்புங்கள்!

இந்த திட்டத்தை ஆரம்பியுங்கள்

சங்கீதம் 91 – நீர் என் அடைக்கலம், என் கோட்டை

1  
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

2  
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

3  
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.

4  
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

5  
இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்

6  
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.

7  
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.

8  
உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.

9  
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.

10  
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

11  
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.

12  
உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.

13  
சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.

14  
அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.

15  
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

16  
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

சங்கீதம் 91

Psalm 91 in English