வாசிப்பு திட்டங்கள் – ஜூலை 2020

5 நாட்கள்

நமது வாகனங்கள் ஆபத்தான அல்லது வரம்புக்கு மீறிய பகுதிகளுக்குச் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு அதன் தேவை ஏற்படும் வரை நாம் அவைகளை கண்டுகொள்வது இல்லை – ஆனால் பின்னர் அவைகள் அங்கு இருந்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். நமது உறவுகள், நிதிகள் மற்றும் தொழில்கள் ஆகியவற்றிலும் தடுப்புகள் இருந்திருந்தால் என்ன? அவை எப்படி இருக்கும்? எதிர்கால பின்வருத்தங்களிலிருந்து நம்மை எவ்வாறு அது தடுக்கும்? அடுத்த ஐந்து நாட்களுக்கு, சுய தடுப்பு வேலிகளை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பதை ஆராய்வோம்.

5 நாட்கள்

பணியில் மும்முரமாய் இருப்பதும் தொடர்ந்து பரபரப்பாய் இருப்பதும் நாம் வாழும் உலகத்தில் பெரிதும் மெச்சிக்கொள்ளப்படுகின்றது, அது மற்றவர்களுக்கு ஒரு சவாலாகவும் இருக்கக்கூடும். நம்முடைய பங்கையும் திட்டத்தையும் சரிவர செய்ய, நாம் இளைப்பாற கற்றுக்கொள்ளவேண்டும், அல்லது நாம் நேசிக்கும் நபர்களுக்கும் நம்முடைய இலக்குகளும் ஒன்றும் பங்களிப்புக்கு கொடுக்க முடியாமல்போகும். நாம் அடுத்த ஐந்து நாட்களை இளைப்பாறுதல் குறித்தும் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களை நம்முடைய வாழ்வில் எப்படி பொருத்திக்கொள்வது என்றும் கற்றுக்கொள்வோம்.

5 நாட்கள்

2 கொரிந்தியர் நிரூபத்தின் வழியாக இந்த பயணத்தில், எல்லாம் புதிதாயின என்பது தேவன் இந்த உலகத்தில் நம் சாகசமிக்க விசுவாசத்தையும் நம்மை தைரியமாய் இருக்க தேவனுடைய அழைப்பையும் கூறும் இறையியலை ஆராய்கிறது. கெல்லி மிண்டெர் நம்முடைய கிறிஸ்துவ நடக்கை நம்முடைய இயர்கையான சுபாவங்களுக்கு வேற்றுமையானவை என்றும், ஆனால் அது நித்தியமாகவும், எண்ணிலடங்காதமுறையிலும் சிறந்தது என்றும் நாம் புரிந்துகொள்ள உதவுகிறார். இந்த 5-நாள் வாசிப்பு திட்டத்தில், நீங்கள்: எவ்வாறு கடினமான உறவுகளை கையாளுவது, உங்கள் நற்பெயரை எவ்வாறு தேவனிலே நம்புவது, உங்கள் அடையாளத்தை கிறிஸ்துவிலே நங்கூரமிடுவது, வேதனைகளின் காரணத்தையும் அவற்றில் தேவனுடைய ஏற்ப்பாடுகளையும் புரிந்துகொள்வது, மற்றும் எப்படி நாம் இந்த உலகத்திற்கு ஒரு சுவிசேஷ வெளிச்சமாக இருப்பது என்பதைக்குறித்து ஆராய்வீர்கள்.