வாசிப்பு திட்டங்கள் – மே 2021

31 நாட்கள்

12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 5 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 5ம் பகுதியானது முதலாம் இரண்டாம் கொரிந்தியர், உபாகமம் மற்றும் யோசுவா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.

5 நாட்கள்

வாழ்க்கையில் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறீர்களா? தேவனுடன் உள்ள உங்கள் உறவு எங்கு இருந்தாலும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற உணர்வு தேவனிடம் திரும்புவதற்கான ஏக்கம் தான். நாம் தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிகையில், நாம் அனைவரும் மைல் கற்கள் அல்லது விழிப்புணர்வுகளை சந்திக்கிறோம். இந்த விழிப்புணர்வுகள் ஒவ்வொன்றன் வழியாகவும் பயணம் செய்து, நீங்கள் இப்போது இருப்பதற்கும் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்புங்கள். நாம் தேவனை கண்டடைய விரும்புகிறோம், அவர் கண்டடையப்பட இன்னும் அதிகமாக விரும்புகிறார்.