Posted on 2019-11-012021-10-01 by வாசிப்பு திட்டங்கள் – நவம்பர் 2019 சங்கீதம் 31 நாட்கள் சங்கீத புத்தகத்தை வாசிப்பது எளிமையாக உற்சாகமூட்டக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு கஷ்டமான நேரத்தின் ஊடாக சென்றுக்கொண்டிருக்கும் போது, சங்கீத புத்தகம் ஒரு ஆறுதலாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கும். தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் – ஞானம் 5 நாட்கள் நாம் கடந்து செல்லும் அன்றாட வாழ்க்கைப் பாதையில் நம்மை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி நமக்கு உதவி செய்வதே தேவனின் இருதயத்தைத் தினமும் தேடுதல் என்ற 5-நாள் வாசிப்பு திட்டத்தின் நோக்கமாகும். பாய்டு பெய்லி அவர்கள் சொல்கிறார்கள், “உங்களுக்கு தேவனைத் தேட வேண்டும் என்ற விருப்பம் இல்லாதிருக்கும் நேரங்களிலும் அல்லது அதிக ஓய்வே இல்லாதிருக்கும் நேரங்களிலும் கூட அவரைத் தேடுங்கள், அப்பொழுது அவர் உங்கள் உண்மைக்குப் பலன் அளிப்பார்”. வேதம் சொல்லுகிறது, “அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்”. சங்கீதம் 119:2 தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள் 7 நாட்கள் ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.