Posted on 2020-02-012021-10-11 by வாசிப்பு திட்டங்கள் – பிப்ரவரி 2020 அமைதியின்மை 3 நாட்கள் “உம்மிடத்திலே அமைதியை கண்டறியும் வரை எங்களுடைய இருதயம் ஓய்வடையாது” இந்த பிரபலமான வாக்கியத்தின் மூலம் நம்மில் அநேகர் உணரும் அமைதியின்மையை அகஸ்டின் வருணித்திருக்கிறார். ஆனால் உண்மையான அமைதியின்மைக்கு தீர்வு என்ன? இந்த மூன்று நாள் திட்டம், பண்டைய காலத்து ஓய்வுநாளை வேறு கோணத்தில் காண்பதன் மூலம் ஓரளவு தீர்வை காணலாம் – “அவர்” மூலமாக – இயேசு – நம்முடைய சமாதான காரணர். தெய்வீக திசை 7 நாட்கள் தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ.சர்ச் தலைமை போதகரான க்ரைக் குரோவ்ஷெல் எழுதின தெய்வீக திசை வேதாகம திட்டம், அவருடைய தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஏழு அடிப்படை கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, அது நாம் தினந்தோறும் தேவ ஞானத்துடன் முடிவுகளை எடுக்க நமக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துகிறது. தேவன் மகிமைப் படும்படியான, மற்றும் மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதான ஒரு வாழ்க்கைக் கதை நீங்கள் வாழத் தேவையான ஆவியின் வழிகாட்டுதலை இத்திட்டத்தில் கண்டறிக. ஜெபம் 21 நாட்கள் எப்படி ஜெபிப்பது என்று பக்தர்களின் ஜெபங்களிலிருந்தும் இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கைகளை தேவனிடம் தினமும், தொடர்ந்து பொறுமையாக எடுத்து செல்வதில் உற்சாகம் கண்டடையுங்கள். காலியான சுய நீதி நிறைந்த ஜெபங்களுக்கும், சுத்த இருதயத்திலிருந்து வரும் தூய்மையான ஜெபங்களுக்கும் மாதிரிகளை காணுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள். 40 நாட்கள் தவக்காலம் 47 நாட்கள் தவக்காலம் எப்பொழுதும் கிறிஸ்து நமக்காக சிலுவையில் செய்த காரியங்களில் கவனத்தை திருப்பும் நாட்களாக உள்ளன. இந்த பகட்டான பரிசை ஒவ்வொரு வருடமும் தியானிக்க முடியும், மற்றும் அது நம்மை வியப்பிக்க செய்யும். இந்த வாசிப்பு திட்டத்தின் மூலம், நீங்கள் சுவிசேஷ வரலாற்றை காலக்கிரமமாக கடந்து சென்று, இயேசுவின் பூலோக ஊழியத்தின் கடைசி வார அடிச்சுவடுகளை தொடரலாம். இந்த திட்டம் 47 நாட்கள் நீடித்தாலும், பாரம்பரியத்தின்படி ஏழு ஞாயிற்றுக்கிழமைகளும் ஓய்வு நாட்கள்.