Posted on 2020-08-012021-10-11 by வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2020 சமாதானத்தை கண்டுக்கொள்வோம் 10 நாட்கள் உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். டாக்டர். ஜான் ஸ்டான்லியுடன் இணைந்து வாழ்க்கையை மாற்றக்கூடிய மன அமைதிக்கான வழிகளை கண்டடையுங்கள், கடந்த கால வருத்தங்களை சரிசெய்ய உதவும் கருவிகளை பெற்றுக்கொள்ளுங்கள், தற்போதைய கவலைகளை சந்திக்கவும் எதிர் காலத்தைக் குறித்த பயங்களை நீக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல் 7 நாட்கள் நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் ‘அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்’ என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம். நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் ஓய்வு 4 நாட்கள் கடினமாக உழைக்க நம்முடைய வேதாகமம் கற்றுக் கொடுக்கிறது, இருப்பினும் கர்த்தர் சொல்லுகிறார் -நாம் அல்ல- கிரியைகளின் பலனைத் தருபவர் கர்த்தர் ஒருவரே என்பதாக. இந்த நான்காவது நாளின் திட்டத்தில், ஒரு கிறிஸ்தவராக, நம்பிக்கைக்கும் தடுமாற்றத்துக்கும் நடுவிலிருக்கும் பதற்றத்தை விளக்கி உண்மையான ஓய்வு நாட்களை ஆசரிக்க நாம் கற்றுக் கொள்ளபோகிறோம். எபேசியர் 3 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை எபேசியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது.