Posted on 2020-09-012021-10-11 by வாசிப்பு திட்டங்கள் – செப்டம்பர் 2020 உங்கள் வேலைக்கு அர்த்தம் கொடுங்கள் 4 நாட்கள் நம்மில் அநேகர் ஐம்பது சதவிகித நேரத்தை நம் வேலைகளை செய்வதில்தான் செலவிடுகிறோம். நமது வேலைக்கு அர்த்தம் உள்ளதா என்பதையும், நாம் செய்யும் வேலை முக்கியமானதுதானா, என்பதையும் நாம் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், மன உளைச்சலும், தேவைகளும், துன்பங்களும் வேலையை குறித்த நமது கண்ணோட்டத்தை கடினமானதாகவும், இதை எப்படியாகிலும் முடித்தால் போதும் என்பதாகவும் மாற்றுகின்றன. உங்கள் வேலைக்கு ஒரு அர்த்தத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உங்கள் விசுவாசத்தில்தான் வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு உதவும். சிறந்த தலைமைத்துவத்திற்கு ஆறு படிகள் 7 நாட்கள் ஒரு தலைவனாக வளருவதற்கு தயாரா? பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்கள் ஒரு சிறந்த தலைவனாக மாறுவதற்கு தேவையான ஆறு வேதாகம படிகளை கற்றுத்தருகிறார். ஆரம்பிக்க தேவையான ஒழுங்கு, நிறுத்த தேவையான தைரியம், வளர்ச்சி அடைய தேவையான ஆள்தத்துவம், உருவாக்க ஒரு அமைப்பு, துவங்க வேண்டிய உறவு மற்றும் துணிந்து எடுக்க வேண்டிய அபாயங்கள். இருதயத்தின் எதிரிகள் 5 நாட்கள் எப்படி ஒரு ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களுடைய சரீரத்தைப் பாதிக்க முடியுமோ, அப்படியே உணர்வு மற்றும் ஆவிக்குரிய ரீதியாக ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களையும், உங்கள் உறவுகளையும் பாதிக்க முடியும். அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு, ஆண்டி ஸ்டான்ட்லி அவர்கள் உங்களுக்குள் காணப்படுகிற இருதயத்தின் நான்கு பொதுவான எதிரிகளான குற்றவுணர்ச்சி, கோபம், பேராசை, மற்றும் பொறாமை போன்றவைகளை உற்றுநோக்க உதவிசெய்து, அவைகளை எவ்வாறு அகற்றுவது என்பதைப் போதிக்கட்டும். நம்மை பெலவீனப்படுத்தும் ஆயுதத்தை முறியடித்தல் – ஜான் பெவரேயுடன் 7 நாட்கள் ஒரு சூப்பர்மேன் எப்படி ஒவ்வொரு எதிரயையும் வீழ்த்துகிரானோ, கிறிஸ்துவை பின்பற்றுகிற உங்களுக்கும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றல் உள்ளது. ஆனால் சூப்பரமேனுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு பிரச்சனை, கிரிப்டோனைட் (கதையினுள் உள்ள கற்பனை பொருள்)உங்களுடைய பெலனை திருடுவது தான். இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையில் உள்ள அந்த ஆவிக்குரிய கற்பனை கதாபாத்திரத்தை வேரோடு பிடுங்கி எரிந்து, தேவன் உங்களுக்கு அளித்த அசாதரமான ஆற்றலை வரம்புகளின்றி வாழ்க்கையில் பூர்த்தி செய்திட உதவிடும்