Posted on 2021-01-312021-06-07 by வாசிப்பு திட்டங்கள் – ஜனவரி 2021 Walk With Jesus – வாழ்க்கையில் மகிழ்ச்சி 6 நாட்கள் தேவனின் கிருபைகள் காலைதோறும் புதியவைகள். இந்த திட்டம் உங்களை ஒவ்வொரு நாளும் வாழ்கை பாதையில் தேவனோடு நடத்தி ஜெப வாழ்க்கையில் உறுதிப்பட வாழ்க்கையில் மகிழ்ச்சிப்பெற தேவ வார்த்தையால் பெலப்படுத்தும். இயேசு உங்களோடு தினமும் பேசி மகிழ்ச்சியோடு வழிநடத்த வாஞ்சிக்கிறார். உங்கள் இருதயங்களை அவருக்கு கொடுப்பீர்களா ? Walk with Jesus – பயப்படாதே ! 4 நாட்கள் இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எதிர்காலம், வியாதி, கடன் பிரட்சனை போன்ற காரியங்களினால் பயத்தோடு காணப்படலாம். ஆனால் எல்லா பயத்தையும் நீக்கி, ” பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன் ” என்று சொல்லும் கர்த்தராகிய இயேசு உங்களோடு உண்டு ! இயேசுவே, நீர் எனக்கு தேவை 2 நாட்கள் இயேசு உங்களுக்குத் தேவை என்பதை நீங்கள் ஆழமாக உணருகிறீர்களா? ஜெபத்திற்கான இந்த இரண்டு நாள் திட்டம் நீங்கள் அவருடன் தனியாக செலவிடும் நேரத்தை மேம்படுத்தவும் நீங்கள் அவரிடம் அழுவதற்கு உதவவுமே வடிவமைக்கப் பட்டுள்ளது. திசில்பென்ட் மினிஸ்ட்ரீஸின் “இயேசுவே நீர் எனக்கு வேண்டும்” என்ற எட்டு பாகம் கொண்ட தொடருக்கு ஜெபத்துணையாகவும் இது செயல்படுகிறது. ஜெபம் 21 நாட்கள் எப்படி ஜெபிப்பது என்று பக்தர்களின் ஜெபங்களிலிருந்தும் இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கைகளை தேவனிடம் தினமும், தொடர்ந்து பொறுமையாக எடுத்து செல்வதில் உற்சாகம் கண்டடையுங்கள். காலியான சுய நீதி நிறைந்த ஜெபங்களுக்கும், சுத்த இருதயத்திலிருந்து வரும் தூய்மையான ஜெபங்களுக்கும் மாதிரிகளை காணுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள். கவலை பற்றி வேதம் சொல்லும் 7 விஷயங்கள் 7 நாட்கள் ஒவ்வொரு நாளுக்கும் நம் வாழ்க்கையில் சிக்கலான புதிய சவால்களை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு அற்புதமான புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்த ஏழு நாள் தியானத்தில், YouVersion-இல் உள்ள ஊழியர்கள், இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லாவற்றிற்கும் கடவுளின் வார்த்தையிலிருந்து உண்மைகளைப் பயன்படுத்த உதவுகிறார்கள். ஒவ்வொரு நாளின் தியானத்திலும், கடவுள் உங்களிடம் பேசுவதைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் வசன படம் இணைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் குரல் 7 நாட்கள் ‘நம்பிக்கையின் குரல்’ – என்னும் நிகழ் ச்சியினை தொடர் ந்து கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். ‘Voice of hope’ an audio series of encouragement and hope for a time such as this. Listen and be blessed! உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள் 14 நாட்கள் ஜாய்ஸ் மேயரின் நடைமுறை வேதபாட போதனையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான வேத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், உங்கள் மனதைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் என்பதைக் கண்டறிய உதவுகிறது!