Posted on 2021-01-012021-10-14 by வாசிப்பு திட்டங்கள் – ஜனவரி 2021 தேவன் + இலக்குகள்: ஒரு கிறிஸ்தவராக இலக்குகளை எவ்வாறு அமைப்பது 5 நாட்கள் ஒரு கிறிஸ்தவராக நமக்காக ஒரு இலக்கை வைத்துக்கொள்வது சரியா? நமக்கு எப்படி தெரியும் அந்த இலக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது நமது ஆசையா என்று? சரி, கிறிஸ்தவ இலக்கு எப்படி இருக்கும்? இந்த 5 நாள் வாசிப்பு திட்டத்தில், வேதத்தை முற்றும் குடைந்து இந்த இலக்கை குறித்ததான பகுதியில் ஒரு தெளிவைப் பெற போகிறோம். அது மட்டுமல்லாது நமது திசையையும் அந்த கிருபையால் இயங்கும் இலக்கை நோக்கி திருப்ப போகிறோம்! ஜீவனைப் பேசுதல் 6 நாட்கள் வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள், சக்தி நிறைந்த வார்த்தைகள்! கட்டியெழுப்பும் வார்தைகள் அல்லது மனதை கிழிக்கும் வார்த்தைகள். உயிரைக் கொடுக்கும் வார்தைகள் அல்லது மரணத்தைக் கொண்டுவரும் வார்த்தைகள். தேர்வு நம்முடையது. நமது வார்த்தைகளில் உள்ள குறிப்பிடத்தக்க சக்தியை மதிப்பீடு செய்வோம். திருமணத்திற்கு-முன் பாடநெறி 5 நாட்கள் வலுவான திருமணங்கள் தானாகவே உருவாகாது. வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஆரோக்கியமான மற்றும் வலுவான திருமணத்தை உருவாக்க தேவையான அணுகுமுறைகள், மதிப்புகள் மற்றும் பழக்கங்களை நீங்கள் கண்டுபிடிக்கப் வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இந்த 5 நாள் திட்டமானது The Marriage புத்தகத்தின் ஆசிரியர்களான நிக்கி மற்றும் சிலா லீ ஆகியோரால் உருவாக்கப்பட்ட The Pre-Marriage பாடத்திட்டத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கனவுகள் மீட்கப்பட்டன 7 நாட்கள் நம்முடைய கனவுகள் எட்டாத தூரத்தில் இருப்பதுபோலவோ அல்லது தகர்க்கப்பட்டது போலவோ தோன்றும்போது நாம் என்ன செய்வோம்? அதிர்ச்சியையும் தூஷணங்களையும் மேற்கொண்டதோடு, விவாகரத்தின் மணமுறிவையும் சந்தித்தவளாக, இந்த கேள்வியை நான் அதிகதிகமாக சந்தித்திருக்கிறேன். நீ சோகத்தையோ அல்லது இழப்பையோ அனுபவித்துக்கொண்டிருக்கலாம், அல்லது நீண்ட காலமாக காத்துக்கொண்டிருப்பதால் விரக்தியில் இருக்கலாம், ஆனாலும் உன் வாழ்விற்குரிய தேவ-சித்தம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது! நண்பரே, மீண்டும் கனவுகாணும் நேரமிது.