Posted on 2021-06-302021-07-05 by வாசிப்பு திட்டங்கள் – ஜூன் 2021 கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல் 4 நாட்கள் கவலை என்பது அதன் எல்லா வடிவங்களிலும் நம்மை பலகீனமாக்கிவிடக் கூடியது. அது நம்மைத் தடுமாறச் செய்து பயத்திலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடக்கூடியது. ஆனாலும் இதுவே கதையின் முடிவு அல்ல. இயேசுவில் நாம் சுதந்தரத்தையும், கிருபையையும் பெற்றுக் கொண்டு போராட்டங்களை மேற்கொள்ள முடியும். நாம் அதை வெற்றி கொள்வது மட்டுமல்ல, அதன் மூலமாக இன்னும் சிறப்பானவர்களாக மாற முடியும். இயேசுவின் ஜெபங்கள் 5 நாட்கள் நம் உறவுகளில் தொடர்பு எனபது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம், கர்த்தருடனான தொடர்பும் அதற்கு விதிவிலக்கல்ல. நாம் கர்த்தருடன் ஜெபத்தின் மூலம் தொடர்பு கொள்ளவேண்டுமென்று ஆசிக்கிறார் – அவரது குமாரனான இயேசு கூட அதே ஒழுங்குமுறையைத் தான் கடைப்பிடித்தார். இந்தத் திட்டத்தில் இயேசுவின் முன்மாதிரியிலிருந்து கற்றுக் கொண்டு உலக வாழ்வின் போக்கிலிருந்து விடுபட்டு ஜெபம் தரும் வல்லமை மற்றும் வழிநடத்தலை நீங்களே அனுபவிக்கலாம். நம்மை பெலவீனப்படுத்தும் ஆயுதத்தை முறியடித்தல் – ஜான் பெவரேயுடன் 7 நாட்கள் ஒரு சூப்பர்மேன் எப்படி ஒவ்வொரு எதிரயையும் வீழ்த்துகிரானோ, கிறிஸ்துவை பின்பற்றுகிற உங்களுக்கும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றல் உள்ளது. ஆனால் சூப்பரமேனுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு பிரச்சனை, கிரிப்டோனைட் (கதையினுள் உள்ள கற்பனை பொருள்)உங்களுடைய பெலனை திருடுவது தான். இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையில் உள்ள அந்த ஆவிக்குரிய கற்பனை கதாபாத்திரத்தை வேரோடு பிடுங்கி எரிந்து, தேவன் உங்களுக்கு அளித்த அசாதரமான ஆற்றலை வரம்புகளின்றி வாழ்க்கையில் பூர்த்தி செய்திட உதவிடும் தீர்க்கமான பிராத்தனைகள் 7 நாட்கள் உங்கள் விசுவாசத்துடன் பாதுகாப்பாக விளையாடி களைப்படைந்து விட்டீர்களா? உங்கள் அச்சங்களை எதிர் கொள்ளவும், உங்கள் விசுவாசத்தை பேணிவளர்க்கவும், உங்கள் ஆற்றலை கட்டவிழ்த்து விடவும் நீங்கள் தயாரா? Life.Churchஇன் நல்லாயர் கிரேக் க்ரோஷெலின் புத்தகமான, அபாயகரமான பிராத்தனைகள், என்பதிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஏழு நாள் பைபிள் திட்டம் உங்களை துணிகரமாக பிரார்த்திக்க ஊக்குவிக்கும்- ஏனெனில் இயேசுவை பின்பற்றுவது ஒரு போதும் பாதுகாப்புடையதாக இருக்க உத்தேசப்படவில்லை. வேதாகமத்தை எப்படி வாசிக்க துவங்குவது 4 நாட்கள் உண்மையை ஏற்றுக்கொள்வோம்.: நாம் வேதாகமத்தை வாசிப்பது நல்லது என்று உணருகிறோம், ஆனால் எங்கு வாசிக்க துவங்குவது என்று தெரியாமல் இருக்கிறோம். இனி வரும் நான்கு நாட்களில், வேதாகமம் ஏன் முக்கியமானது என்றும், எவ்வாறு தினந்தோறும் வேதத்தை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவது என்றும், நம் வாழ்வில் அது எவ்வாறு உதவும் என்றும் நாம் கற்றுக்கொள்வோம். சிலுவையும் கிரீடமும் 7 நாட்கள் இயேசு கிறிஸ்து, அவர் தன் சிலுவை மரணத்தின் மூலம் பெற்றுத் தந்த இரட்சிப்பு, மற்றும் உயிர்த்தெழுதலின் வாக்குத்தத்தம் ஆகியவற்றை நாம் அறிந்துக் கொள்ளவே புதிய ஏற்பாட்டின் அதிகப்பட்சமான பகுதி எழுதப்பட்டுள்ளது. இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தம், உயிர்த்தெழுதல், மற்றும் உங்களுக்காக பெற்று தந்த நித்திய வாழ்க்கையாகிய பரிசு ஆகியவற்றை இந்த தியானத்தில் டாக்டர். சார்ல்ஸ் ஸ்டான்லி அவர்கள் பகிர்ந்துள்ளார். அவருடன் இணைந்து, இயேசு செலுத்திய விலையை நினைவுக்கூறுவோம், தந்தையின் மகத்தான அன்பின் ஆழத்தை கொண்டாடுவோம்.