Posted on 2021-11-012021-10-28 by வாசிப்பு திட்டங்கள் – நவம்பர் 2021 1 மற்றும் 2 பேதுரு 4 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை 1 மற்றும் 2 பேதுரு வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (நவம்பர்) 30 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 11 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 11ம் பகுதியானது உன்னதப்பாட்டு, எசேக்கியேல், ஓசியா, மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. மனந்திரும்புதலின் செயல்கள் 5 நாட்கள் கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நமது ஒரு முக்கியமான செயல் மனதிரும்புதல் ஆகும். மனந்திரும்புதல் நம் செயல்; அதற்கு மன்னித்தல் கர்த்தரின் மகத்தான அன்பின் நிமித்தமாக அவரது பிரதிச்செயல் ஆகும். இந்த ஐந்து நாள் திட்டத்தில் ஒரு தினவேத வாசிப்பு பகுதியும் சுருக்கமான தியானமும் பெறுவீர்கள், இவை கிறிஸ்துவுடனான வாழ்விற்கு மனந்திரும்புதலின் அவசியத்தை உங்களுக்கு நன்கு விளக்கிக் காட்டும். உறுதிமொழி 6 நாட்கள் இந்த லயிஃப் சபையின் வேதாகம திட்டத்தில், ஆறு தம்பதியினர் சபையில் அதிகாரப்பூர்வமாக சொல்லாத ஆறு திருமண உறுதிமொழிகளைப் பற்றி எழுதுகிறார்கள். ஆயத்தம், முன்னுரிமை, பின்தொடர்தல், ஒற்றுமை, தூய்மை மற்றும் பிரார்த்தனை ஆகிய இந்த உறுதிமொழிகளே திருமணத்திற்கு முன்பே திருமணங்களை நிலைக்க செய்கின்றன. நீங்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி அல்லது அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும் சரி, உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் இது