Posted on 2021-12-072021-12-08 by வாசிப்பு திட்டங்கள் – டிசம்பர் 2021 வருகை: கிறிஸ்துமஸ் பயணம் 25 நாட்கள் உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம். மிகுந்த சந்தோஷம்: கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு விழிப்புடன் ஒரு காத்திருப்பு 7 நாட்கள் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் நிகழ்வாக இருக்க வேண்டும் – ஆனால் மகிழ்ச்சி என்றால் என்ன, உலகம் வேதனையுடனும் கஷ்டத்துடனும் நிறைந்திருக்கும் போது அதை எவ்வாறு தேர்வு செய்வது? இந்த சிறப்பு, 7 நாள் கிறிஸ்துமஸ் திட்டத்துடன் கிறிஸ்துமஸ் கதையில் மூழ்குவதன் மூலம் “உலகிற்கு மகிழ்ச்சி” உண்மையில் என்ன அர்த்தம் என்பதைக் கண்டறியவும். எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம் 5 நாட்கள் இது சந்தோஷமாக இருக்கவேண்டிய காலம், கூடவே மிகவும் மும்முரமாக இருக்கக்கூடிய காலமும்கூட. இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க கொஞ்சம் நேரம் அமைதி மற்றும் ஆராதனைக்காக உங்கள் மும்முரமான வாழ்க்கையை விட்டு வெளியே வாருங்கள். இயேசுவின் பெயரை புரிந்துகொள்ள, என்ற புத்தகத்தை சார்ந்து, இந்த 5 நாள் தியானம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உங்களுக்கு இயேசுவின் நன்மையை அறிந்து, உங்கள் தேவையை புரிந்துகொண்டு, அவருடைய அமைதி மற்றும் உண்மைத்தன்மையை நாட உதவும். கிறிஸ்துமஸ் கதையின் 7 நாட்கள்: ஒரு கிறிஸ்து பிறப்பு பண்டிகை குடும்ப தியானம் 7 நாட்கள் நாம் அனைவருக்கும் ஒரு நல்ல அரவணைப்பு, உண்மையான இணைப்பு மற்றும் இப்போது கொண்டாட மகிழ்ச்சிகரமான ஒன்று தேவை என்று தெரிகிறது. இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை தியானம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இணைவதற்கும், உண்மையான கிறிஸ்துமஸ் கதையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், புதிய மரபுகள், இரவு உணவு கதைகள், படுக்கை நேர உரையாடல்கள் மற்றும் குடும்ப நடவடிக்கைகளுடன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கும் ஒரு வழியை வழங்கும் என்பதே எங்கள் பிரார்த்தனை. இந்த கிறிஸ்துமஸ் “அரவணைப்பு” இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை காலத்தில்உங்கள் வீட்டிற்கு அழகான நினைவுகளைத் தருகிறது என்று நாங்கள் நம்புகிறோம்! கிறிஸ்துமஸ் நம்பிக்கை 10 நாட்கள் பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை கொண்டாட வேண்டியதின் காரணத்தை நினைவுகூற உதவுகிறார். மேலும், அது விடுமறையைக் கொண்டாட வேண்டிய விதத்தை மட்டும் மாற்றாமல், மீதமிருக்கும் வாழ்க்கையையும் மாற்றவேண்டும் என்றும் நினைவூட்டுகிறார்.