Posted on 2022-04-02 by வாசிப்பு திட்டங்கள் – ஏப்ரல் 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஏப்ரல்) 30 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 4 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 4ம் பகுதியானது மத்தேயு மற்றும் யோபு புத்தகங்களை சிறப்பிக்கிறது. அப்போஸ்தலர் 14 நாட்கள் இந்த எளிய திட்டம் நீங்கள் அபோஸ்தலர்கள் பற்றியும் ஆதித்திருச்சபை பற்றியும் கற்றுக் கொள்ள உங்களுக்கு உதவும். நோக்கத்திற்கு இணங்க நிற்பது 5 நாட்கள் என்னுடைய நோக்கம் என்ன? நான் என் ஜீவனை கொண்டு என்ன செய்ய எதிர்பார்க்கப்படுகிறது? எனக்காக தேவனுடைய திட்டம் என்ன? இவைகளெல்லாம் நாம் நம் ஜீவியத்தில் எதோ ஒரு வேளையில் கேட்கும் கேள்விகள். உங்கள் நோக்கத்தை குறித்து இந்த திட்டத்தில் சில கேள்விகளை நாம் பதிலளிக்க போகிறோம். இந்த தலைப்பில் சில காரியங்களை பதிலளிக்க முயலும் எங்கள் C3 கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து வாசியுங்கள். எனக்குத் தேவையான அனைத்தும் 3 நாட்கள் தேவன் நமக்கு முன்பு சென்று நம்மை பின்னிருந்து பாதுகாத்திருக்கிறார். அவர் நம்முடைய யுத்தங்கள் அனைத்தையும் ஏற்கனவே கையாழ்ந்திருக்கிறார். நாம் காணக்கூடாதவைகளை சரிசெய்து இருக்கிறார். திடீர் திருப்பங்களை கண்டு அவர் அஞ்சுவதில்லை. இந்த 3 நாள் தியான பகுதி உன்னை உற்சாகப்படுத்தி தேவன் சரியான பங்கு மற்றும் சரியான அளவை உன் ஜீவியத்திற்கு கொடுக்கிறார் என்று உணர வைக்கும்.