Posted on 2022-09-26 by வாசிப்பு திட்டங்கள் – அக்டோபர் 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (அக்டோபர்) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 10 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய திட்டத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும். ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 10ம் பகுதியானது பிரசங்கி, யோவான், எரேமியா, மற்றும் புலம்பல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. சங்கீதம் 31 நாட்கள் சங்கீத புத்தகத்தை வாசிப்பது எளிமையாக உற்சாகமூட்டக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு கஷ்டமான நேரத்தின் ஊடாக சென்றுக்கொண்டிருக்கும் போது, சங்கீத புத்தகம் ஒரு ஆறுதலாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கும். உண்மையாகவே என்னால் பாவ சோதனைகளை மேற்கொள்ள முடியுமா? 5 நாட்கள் “நான் ஏன் அந்த பாவத்தோடு கூட போராடி கொண்டிருக்கிறேன்” என்று என்றைக்காவது உங்களை பார்த்து நீங்களே கேட்டிருக்கிறீர்களா? ரோமர் 7:15 -ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் பாருங்கள்: “நான் விரும்புகிறதை செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்”. நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றத்தை தடை செய்யும் இந்த பாவங்களை நாம் செய்யாமல் இருப்பது எப்படி? பாவம் செய்யாத வாழ்க்கை உண்மையில் சாத்தியமா? இந்த தியான திட்டத்தில் பாவத்தை குறித்தும் சோதனைகளை குறித்தும், பிசாசை குறித்தும், மிக முக்கியமாக தேவனுடைய அன்பை குறித்தும் நாம் தியானித்து கற்றுக்கொள்ள இருக்கிறோம். உங்கள் மகிழ்ச்சியை மீட்டெடுத்தல் 5 நாட்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நீங்கள் விரும்பினால், உங்கள் அட்டவணையில் சமநிலையைக் கண்டறிய வேண்டும். உங்கள் உள்ளீட்டையும் உங்கள் வெளியீட்டையும் எவ்வாறு மறுசீரமைக்கலாம் என்பதை பாஸ்டர் ரிக் பகிர்ந்து கொள்கிறார், இதனால் நீங்கள் கொடுப்பதும் பெறுவதும் உங்கள் மகிழ்ச்சியை மீட்டெடுக்க உதவுகிறது, அதை இழக்காமல் இருக்க உதவுகிறது.