Posted on 2022-12-02 by வாசிப்பு திட்டங்கள் – டிசம்பர் 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (டிசெம்பர்) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 12 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய பகுதியை ஒவ்வொரு மாதமும் துவங்கும்போதும் பிறரையும் இணையும்படி அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 12ம் பகுதியானது ஏசாயா, மீகா, முதலாம் இரண்டாம் பேதுரு, முதலாம் இரண்டாம் மூன்றாம் யோவான் மற்றும் யூதா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. லூக்கா 12 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை லூக்கா நற்செய்தி நூல் துவக்கத்திலிருந்து இறுதி வரை நடத்தி செல்லும். காணாமல் போன சமாதானம் 7 நாட்கள் வாழ்க்கை வேதனையாக இருக்கும்போது அமைதியை அனுபவிப்பது உண்மையில் சாத்தியமா? குறுகிய பதில்: ஆம், ஆனால் நம்முடைய சொந்த சக்தியில் இல்லை. நம்மை வியப்பில் ஆழ்த்திய ஒரு வருடத்தில், நம்மில் பலருக்கு கேள்விகள் எழுகின்றன. இந்த 7-நாள் வேதாகம திட்டத்தில், பாஸ்டர் கிரேக் க்ரோஷலின் செய்தித் தொடருடன், நாம் அனைவரும் விரும்பும் காணாமல் போன அமைதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதைக் கண்டுபிடிப்போம். துக்கம் வலியைக் கொடுக்கக்கூடியது: விடுமுறைக்கான நம்பிக்கை 5 நாட்கள் பலருக்கு, விடுமுறைகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன… ஆனால் ஆழ்ந்த துக்கம் அல்லது இழப்பின் காரணமாக விடுமுறைகள் பிரகாசத்தை இழந்து சவாலாக மாறும்போது என்ன நடக்கும்? இந்த சிறப்பு வாசிப்புத் திட்டம், துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலையும் விடுமுறை நாட்களுக்கான நம்பிக்கையையும் பெற உதவும், மேலும் ஆழ்ந்த துக்கத்தின் மத்தியிலும் ஒரு அர்த்தமுள்ள விடுமுறை காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பகிர்ந்து கொள்கிறது.