Posted on 2023-03-02 by வாசிப்பு திட்டங்கள் – மார்ச் 2023 ஆறு நாட்களிள் கர்த்தரின் பெயர்கள் 6 நாட்கள் தேவனின் பல நாமங்களில் இருந்து, அவருடைய குணாதிசயங்கள் மற்றும் அவரது இயல்புகளின் அம்சங்களை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்குப்புறமே, தேவனின் 80 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாமங்களை வேதாகமம் காண்பிக்கிறது. ஒரே உண்மையான தேவனிடம் நெருங்கி வர விசுவாசிக்கு உதவும் ஆறு பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளன. டாக்டர். டோனி எவன்ஸ் எழுதிய கடவுளின் நாமங்களின் வல்லமையை அனுபவிப்பது: ஜீவன் கொடுக்கும் பக்திக்குரியன. ஹார்வெஸ்ட் ஹவுஸ் பப்ளிஷர்ஸ், யூஜின், ஓரிகான் 2017. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள் 7 நாட்கள் ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். உங்கள் வேலைக்கு அர்த்தம் கொடுங்கள் 4 நாட்கள் நம்மில் அநேகர் ஐம்பது சதவிகித நேரத்தை நம் வேலைகளை செய்வதில்தான் செலவிடுகிறோம். நமது வேலைக்கு அர்த்தம் உள்ளதா என்பதையும், நாம் செய்யும் வேலை முக்கியமானதுதானா, என்பதையும் நாம் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால், மன உளைச்சலும், தேவைகளும், துன்பங்களும் வேலையை குறித்த நமது கண்ணோட்டத்தை கடினமானதாகவும், இதை எப்படியாகிலும் முடித்தால் போதும் என்பதாகவும் மாற்றுகின்றன. உங்கள் வேலைக்கு ஒரு அர்த்தத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உங்கள் விசுவாசத்தில்தான் வேரூன்றி இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழுங்கள்: ஜான் பைப்பருடன் தியானங்கள் 7 நாட்கள் பரிசுத்த ஆவியானவரை குறித்து ஜான் பைப்பரின் 7 வேதாகம தியானங்கள்