Posted on 2023-04-28 by வாசிப்பு திட்டங்கள் – மே 2023 வாழ்க்கை மாற்றப்பட்டது: அடையாளத்தைத் தழுவுதல் 6 நாட்கள் நாம் யாராக இருக்க வேண்டும் என பல குரல்கள் சொல்கையில், நமது அடையாளத்தை குறித்து நாம் போராடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவன் நமது வேலையை வைத்தோ, திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கொண்டோ, நமது தவறுகளைக் கொண்டோ நம்மை வரையறுக்க விரும்பவில்லை. நம் வாழ்வில் அவருடைய கருத்தே உயரிய அதிகாரம் இருக்க வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார். இந்த ஆறு நாள் திட்டம் வேதம் நீங்கள் யார் என்று சொல்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் அதை தழுவிக் கொள்ளவும் உதவும். விட்டுவிடாதீர்கள் 7 நாட்கள் நீங்கள் எப்போதாவது மிகவும் சோர்வாக அல்லது தோல்வியடைந்தது போல் உணர்ந்திருக்கிறீர்களா? விடாமுயற்சியுடன் இருப்பதற்கும் தொடர்ந்து முன்னேறுவதற்கும் வேதாகமம் ஊக்கமளிக்கிறது! இந்த 7 நாள் வாசிப்புத் திட்டம் முன்னோக்கிய பயணத்திற்கு உங்களைப் புதுப்பிக்கும். அடிமைத்தனத்திலிருந்து ஒரு முழுத்திருப்பம் 3 நாட்கள் உங்கள் வாழ்க்கை கடவுளுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகவில்லை என்றால், நீங்கள் நிச்சயமாக வேதனையான விளைவுகளை அனுபவிப்பீர்கள். பலர் தங்கள் உடல்நலத்துடன் போராடி, வேலைகளை இழந்துள்ளனர், உறவுகளை இழந்துள்ளனர், மேலும் போதைக்கு அடிமையானதால் கடவுளிடமிருந்து தொலைவில் இருப்பதாக உணர்கின்றனர். போதைப்பொருள் அல்லது ஆபாசப் படங்கள் போன்ற தீவிர அடிமைத்தனம் அல்லது உணவு அல்லது பொழுதுபோக்கு போன்ற குறைவான அடிமைத்தனம் போன்றவையாக இருந்தாலும், போதை பழக்கம் நம் வாழ்க்கையை சீர்குலைக்கிறது. அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் டோனி எவன்ஸ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வழியைக் காட்டட்டும். விற்பனையாகும் எழுத்தாளர் டோனி எவன்ஸ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வழியைக் காட்டட்டும். கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்? 5 நாட்கள் கேள்விகள்: கர்த்தரைப் பொறுத்தவரையில் நம் எல்லோருக்குமே இவை உண்டு. நமது ‘ஒப்பிட்டுப் பார்க்கும் கலாச்சாரம்’, நம்மை மிக அந்தரங்கமான கேள்விகளை நம்மையே கேட்க வைக்கிறது: “கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?” அல்லது “எப்படி அவர் என்னை நேசிக்க முடியும்?” என்று கூட கேட்கலாம். இந்த திட்டத்தில் 26 வேத பகுதிகளுடன் நீங்கள் ஈடுபடுத்தப்படுவீர்கள்- அவை உங்கள் மீதான கர்த்தரின் அன்பு நிபந்தனையற்றது என்ற உண்மையை எடுத்துக்கூறும்.