Posted on 2023-06-25 by வாசிப்பு திட்டங்கள் – ஜூலை 2023 ஒப்பீட்டிலிருந்து விடுபடுங்கள் அன்னா லைட்டின் 7 நாள் வாசிப்பு திட்டம் 7 நாட்கள் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை விட அபரிமிதமான ஒரு வாழ்வை ஆண்டவர் உங்களுக்கு தருகிறார் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் சோகமான உண்மை என்னவென்றால், ஒப்பீடு உங்களை அடுத்த நிலைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது. இந்த வாசிப்புத் திட்டத்தில், அன்னா லைட் வெளிப்படுத்துகிற ஆழ்ந்த அறிவு, ஒப்பிடுதல் உங்கள் செயல்திறன்களின் மீது இடுகின்ற தடைகளை உடைத்து, ஆண்டவர் உங்களுக்காக அமைத்திருக்கிற சுதந்திரமும் அபரிமிதமுமான வாழ்க்கையை வாழ உதவும் பிடிவாதம் – லிசா பெவரேவுடன் 6 நாட்கள் உண்மை என்றால் என்ன? கலாச்சாரமானது உண்மை என்பது ஒரு நதி என்றும், காலப்போக்கில் அது எல்லாவற்றையும் தாண்டி பாய்கிறது என்றும் நமக்கு ஒரு பொய்யை போதித்து வருகிறது. ஆனால் உண்மை என்பது அது நதி அல்ல-அது பாறை. பொங்கி எழும் உங்கள் மனதின் கருத்துக்களில், இந்தத் திட்டம் உங்கள் ஆத்மாவை நங்கூரமிட உதவும் – அலைந்து திரியும் இவ்வுலகில் உங்களுக்கு திசையின் தெளிவான உணர்வைத் தரும். தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் – ஞானம் 5 நாட்கள் நாம் கடந்து செல்லும் அன்றாட வாழ்க்கைப் பாதையில் நம்மை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி நமக்கு உதவி செய்வதே தேவனின் இருதயத்தைத் தினமும் தேடுதல் என்ற 5-நாள் வாசிப்பு திட்டத்தின் நோக்கமாகும். பாய்டு பெய்லி அவர்கள் சொல்கிறார்கள், “உங்களுக்கு தேவனைத் தேட வேண்டும் என்ற விருப்பம் இல்லாதிருக்கும் நேரங்களிலும் அல்லது அதிக ஓய்வே இல்லாதிருக்கும் நேரங்களிலும் கூட அவரைத் தேடுங்கள், அப்பொழுது அவர் உங்கள் உண்மைக்குப் பலன் அளிப்பார்”. வேதம் சொல்லுகிறது, “அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்”. சங்கீதம் 119:2 இருதயத்தின் எதிரிகள் 5 நாட்கள் எப்படி ஒரு ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களுடைய சரீரத்தைப் பாதிக்க முடியுமோ, அப்படியே உணர்வு மற்றும் ஆவிக்குரிய ரீதியாக ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களையும், உங்கள் உறவுகளையும் பாதிக்க முடியும். அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு, ஆண்டி ஸ்டான்ட்லி அவர்கள் உங்களுக்குள் காணப்படுகிற இருதயத்தின் நான்கு பொதுவான எதிரிகளான குற்றவுணர்ச்சி, கோபம், பேராசை, மற்றும் பொறாமை போன்றவைகளை உற்றுநோக்க உதவிசெய்து, அவைகளை எவ்வாறு அகற்றுவது என்பதைப் போதிக்கட்டும்.