Posted on 2023-10-01 by வாசிப்பு திட்டங்கள் – அக்டோபர் 2023 நான் சரணடைகிறேன்: கைதிகளால் எழுதப்பட்ட ஊக்கமளிக்கும் திட்டம் 4 நாட்கள் பைபிள் மீட்பு, சுதந்திரம் மற்றும் நம்பிக்கையின் புத்தகம். அதன் பக்கங்களுக்குள் ஆற்றல் மிக்க கதாபாத்திரங்கள் உள்ளன. உடைந்த ஆண்களும் பெண்களும் பதில்களைத் தேடுகிறார்கள். ஒருவகையில், அவர்கள் நீங்கள் படிக்கவிருக்கும் பக்திப்பாடல்களை எழுதிய தற்போதைய மற்றும் முன்னாள் கைதிகளைப் போன்றவர்கள். கம்பிகளுக்குப் பின்னால் உள்ள தேவாலயத்தின் குரல்களால் நீங்கள் ஊக்குவிக்கப்படுவீர்கள் என்று நம்புகிறோம். அவர்களின் சாட்சி நம் அனைவரையும் விடுவிக்கட்டும். அமைதியில் அமர்ந்திருத்தல்: ஏழு நாட்கள் தேவனுடைய வாக்குத்தத்திற்குள் காத்திருத்தல் 7 நாட்கள் சில நேரங்களில் தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தம் இருக்கும், ஆனால் நம்முடைய வாழ்க்கைக்கும் அந்த வாக்குத்தத்துக்கும் சம்பந்தமே இராது. அல்லது நம் வாழ்வில் முச்சந்தியில் வந்து நின்றிருப்போம், எந்தப்பக்கம் செல்வது என்ற கேள்விக்கான பதிலை தேவன் பேச காத்துக்கொண்டிருப்போம், ஆனால் நமக்கு கேட்பது அவரது மௌனம் மாத்திரம். இந்த 7 நாள் தியானம் தேவன் மௌனமாய் இருக்கும்போது நாம் எப்படி அவரது சித்தப்படி செயல்படுவது என்று போதிக்கிறது. நிரம்பி வழிய 21 நாட்கள் 21 நாட்கள் நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்! வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (அக்டோபர்) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 10 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய திட்டத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும். ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 10ம் பகுதியானது பிரசங்கி, யோவான், எரேமியா, மற்றும் புலம்பல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.