Posted on 2024-08-01 by வாசிப்பு திட்டங்கள் – ஆகஸ்ட் 2024 நிரம்பி வழிய 21 நாட்கள் 21 நாட்கள் நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்! அன்பில் வளருதல் 5 நாட்கள் தேவனை நேசிப்பதும் மற்றவர்களை நேசிப்பதும் உண்மையில் முக்கியமானது, ஆனால் அதை எவ்வாறு திறம்பட செய்வது? உண்மை என்னவென்றால், நம் சொந்த முயற்சியில் நாம் மக்களை நன்றாக நேசிக்க முடியாது. ஆனால் நாம் தேவனைப் பார்த்து, மனத்தாழ்மையில் நம்மைக் கிடக்கப்பண்ணும் போது, தேவனின் உண்மையான மற்றும் வல்லமை வாய்ந்த அன்பிலிருந்து நாம் வாழ முடியும். இந்த 5 நாள் வேதாகமத் திட்டத்தில் அன்பில் வளர்வது பற்றி பாஸ்டர் ஏமி க்ரோஷெல் மூலம் மேலும் அறிக. தேவனை வணங்குதல் 6 நாட்கள் இந்த தினசரி தியானம், வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தேவனை எவ்வாறு வழிபடுவது என்பதற்கான நுண்ணறிவையும், கிறிஸ்துவுடனான முழு இதய உறவையும் ஊக்குவிக்கும். இந்த தியானம் ஆர். டி. கெண்டலின் தேவனை ஆராதிப்பது என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டது. (ஆர். டி. கெண்டல் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சிற்றாலயத்தில் போதகராக இருபத்தைந்து ஆண்டுகள் இருந்தார்.) வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஆகஸ்டு) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 8வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 8ம் பகுதியானது முதலாம் இரண்டாம் நாளாகமம், முதலாம் இரண்டாம் தெசலோனியர் மற்றும் எஸ்றா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.