Posted on 2022-04-02வாசிப்பு திட்டங்கள் – ஏப்ரல் 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஏப்ரல்) 30 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 4 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 4ம் பகுதியானது மத்தேயு மற்றும் யோபு புத்தகங்களை சிறப்பிக்கிறது. அப்போஸ்தலர் 14 நாட்கள் இந்த எளிய திட்டம் நீங்கள் அபோஸ்தலர்கள் பற்றியும் ஆதித்திருச்சபை பற்றியும் கற்றுக் கொள்ள உங்களுக்கு உதவும். நோக்கத்திற்கு இணங்க நிற்பது 5 நாட்கள் என்னுடைய நோக்கம் என்ன? நான் என் ஜீவனை கொண்டு என்ன செய்ய எதிர்பார்க்கப்படுகிறது? எனக்காக தேவனுடைய திட்டம் என்ன? இவைகளெல்லாம் நாம் நம் ஜீவியத்தில் எதோ ஒரு வேளையில் கேட்கும் கேள்விகள். உங்கள் நோக்கத்தை குறித்து இந்த திட்டத்தில் சில கேள்விகளை நாம் பதிலளிக்க போகிறோம். இந்த தலைப்பில் சில காரியங்களை பதிலளிக்க முயலும் எங்கள் C3 கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து வாசியுங்கள். எனக்குத் தேவையான அனைத்தும் 3 நாட்கள் தேவன் நமக்கு முன்பு சென்று நம்மை பின்னிருந்து பாதுகாத்திருக்கிறார். அவர் நம்முடைய யுத்தங்கள் அனைத்தையும் ஏற்கனவே கையாழ்ந்திருக்கிறார். நாம் காணக்கூடாதவைகளை சரிசெய்து இருக்கிறார். திடீர் திருப்பங்களை கண்டு அவர் அஞ்சுவதில்லை. இந்த 3 நாள் தியான பகுதி உன்னை உற்சாகப்படுத்தி தேவன் சரியான பங்கு மற்றும் சரியான அளவை உன் ஜீவியத்திற்கு கொடுக்கிறார் என்று உணர வைக்கும்.
Posted on 2022-02-25வாசிப்பு திட்டங்கள் – மார்ச் 2022 பயத்தை நீக்குங்கள் 3 நாட்கள் நீங்கள் பயத்தை மேற்கொள்ளலாம். மரு. டோனி இவான்ஸ் அவர்கள் இந்த ஆழமான புரிந்துகொள்ளல் உடைய வாசிப்புத் திட்டத்தின் மூலம் விடுதலையின் பாதைக்கு வழிகாட்டுகிறார். இதில் சொல்லப்படுகிற கருத்துகளை வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தும் போது நீங்கள் விரும்பிய மகிழ்ச்சி நிறைந்த சமாதானம் நிறைந்த வாழ்வைக் கண்டடையலாம் முக்கியமான விஷயங்களுக்கு இடத்தை உருவாக்குங்கள்: தவக்காலத்திற்கான 5 ஆன்மீகப் பழக்கங்கள் 7 நாட்கள் தவக்காலம்: சிந்தனை மற்றும் மனந்திரும்புதல் இவற்றிக்கான 40 நாட்காலம். இது ஒரு நல்ல சிந்தனை, ஆனால் தவக்காலத்தை கடைபிடிப்பது உண்மையில் எப்படி இருக்கும்? அடுத்த ஏழு நாட்கள் உங்கள் இதயத்தைத் உயிர்த்தெழுதல் ஞாயிறு மற்றும் அதன் பிறகும் தயார்படுத்த உதவும் ஐந்து ஆன்மீகப் பழக்கவழக்கங்களை கண்டறியலாம். 2 கொரிந்தியர் 1 வாரம் இந்த எளிய திட்டம் உங்களை 2 கொரிந்தியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (மார்ச்) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 3 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் -தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 3ம் பகுதியானது எண்ணாகமம், நீதிமொழிகள், ரோமர் மற்றும் எபிரேயர் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.
Posted on 2022-01-27வாசிப்பு திட்டங்கள் – பிப்ரவரி 2022 வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (பிப்ரவரி) 28 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 2 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் -தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 2ம் பகுதியானது ஆதியாகமம், யாத்திராகமம, லேவியராகமம் மற்றும் கலாத்தியர் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. மாற்கு 8 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை மாற்கு நற்செய்தி நூல் துவக்கத்திலிருந்து இறுதி வரை நடத்தி செல்லும். எதைக்குறித்தும் கவலையில்லை 7 நாட்கள் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கவலைகளைத்துரத்த ஒரு வழி இருந்தால்? மெய்யான இளைப்பாறுதல் நீங்கள் எண்ணுவதைவிட மிக அருகிலேயே இருக்கிறது. பாஸ்டர் கிரேக் கிரோஸ்செளின் “எதைக்குறித்தும் பதற்றமில்லை” என்ற பிரசங்கத்துடன் Life.Churchன் இந்த 7 நாள் திட்டத்தின் மூலமாக, பயத்திற்கு பதிலாக சமாதானத்தைக்கொள்ளுங்கள். தேவனுடைய சர்வாயுதவர்க்கம் 5 நாட்கள் தினந்தோறும், முழுநேரமும் உங்களை சூழ்ந்தபடி – கண்ணுக்கு புலனாகாத, கேள்விப்படாத, ஆனாலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உணரக்கூடிய ஒரு போர் சீற்றமடைகிறது. மிக அர்பணிப்புமிக்க, அந்தகாரமான சத்துரு ஒருவன் உங்களுக்கு முக்கியமென்று இருக்கும்: உங்கள் இருதயம், உங்கள் சிந்தனை, உங்கள் மணவாழ்க்கை, உங்கள் குழந்தைகள், உங்கள் உறவுகள், உங்கள் எதிர்ப்புத்திறன், உங்கள் கனவுகள், உங்கள் விதி போன்ற எல்லாவற்றிலும் அழிவை ஏற்படுத்த வகைதேடுகிறான். இருப்பினும் அவனுடைய போர்த்திட்டம் உங்களை நிராயுதபாணியாக எதிர்பாராதநிலையில் பிடிப்பதை சார்ந்துள்ளது. நீங்கள் அங்குமிங்குமாக தள்ளப்படுவதால் சோர்ந்தும் உங்கள் பாதுகாப்பு இல்லாமலும் பிடிபடுகிறீர்களென்றால், இந்த தியானம் உங்களுக்கானது. சத்துருவானவன் தருணத்திற்கேற்றபடி உடையணிந்த ஒரு பெண்ணை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் பரிதாபமாக தோற்றுப்போகிறான். தேவனுடைய சர்வாயுதவர்க்கம், ஒரு விசுவாசியின் இருப்புகளின் வேதவிளக்கம் என்பதிலும் மேலாக, அதை உடுத்திக்கொண்டு தனித்த்துவமான போர்த் தந்திரங்களை உருவாக்கி ஜெயத்தை சுதந்தரித்துக்கொள்ள உதவும் ஒரு செயல் திட்டமாகும்.
Posted on 2022-01-02வாசிப்பு திட்டங்கள் – ஜனவரி 2022 உறுதிமொழி 6 நாட்கள் இந்த லயிஃப் சபையின் வேதாகம திட்டத்தில், ஆறு தம்பதியினர் சபையில் அதிகாரப்பூர்வமாக சொல்லாத ஆறு திருமண உறுதிமொழிகளைப் பற்றி எழுதுகிறார்கள். ஆயத்தம், முன்னுரிமை, பின்தொடர்தல், ஒற்றுமை, தூய்மை மற்றும் பிரார்த்தனை ஆகிய இந்த உறுதிமொழிகளே திருமணத்திற்கு முன்பே திருமணங்களை நிலைக்க செய்கின்றன. நீங்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி அல்லது அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும் சரி, உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் இது வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஜனவரி) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 1 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போது பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 1ம் பகுதியானது லூக்கா, அப்போஸ்தல நடபடிகள், தானியேல், மற்றும் ஆதியாகமம் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. யோவான் 10 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை யோவான் சுவிசேஷத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை நடத்தி செல்லும்.
Posted on 2021-12-072021-12-08வாசிப்பு திட்டங்கள் – டிசம்பர் 2021 வருகை: கிறிஸ்துமஸ் பயணம் 25 நாட்கள் உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம். மிகுந்த சந்தோஷம்: கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு விழிப்புடன் ஒரு காத்திருப்பு 7 நாட்கள் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் நிகழ்வாக இருக்க வேண்டும் – ஆனால் மகிழ்ச்சி என்றால் என்ன, உலகம் வேதனையுடனும் கஷ்டத்துடனும் நிறைந்திருக்கும் போது அதை எவ்வாறு தேர்வு செய்வது? இந்த சிறப்பு, 7 நாள் கிறிஸ்துமஸ் திட்டத்துடன் கிறிஸ்துமஸ் கதையில் மூழ்குவதன் மூலம் “உலகிற்கு மகிழ்ச்சி” உண்மையில் என்ன அர்த்தம் என்பதைக் கண்டறியவும். எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம் 5 நாட்கள் இது சந்தோஷமாக இருக்கவேண்டிய காலம், கூடவே மிகவும் மும்முரமாக இருக்கக்கூடிய காலமும்கூட. இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க கொஞ்சம் நேரம் அமைதி மற்றும் ஆராதனைக்காக உங்கள் மும்முரமான வாழ்க்கையை விட்டு வெளியே வாருங்கள். இயேசுவின் பெயரை புரிந்துகொள்ள, என்ற புத்தகத்தை சார்ந்து, இந்த 5 நாள் தியானம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உங்களுக்கு இயேசுவின் நன்மையை அறிந்து, உங்கள் தேவையை புரிந்துகொண்டு, அவருடைய அமைதி மற்றும் உண்மைத்தன்மையை நாட உதவும். கிறிஸ்துமஸ் கதையின் 7 நாட்கள்: ஒரு கிறிஸ்து பிறப்பு பண்டிகை குடும்ப தியானம் 7 நாட்கள் நாம் அனைவருக்கும் ஒரு நல்ல அரவணைப்பு, உண்மையான இணைப்பு மற்றும் இப்போது கொண்டாட மகிழ்ச்சிகரமான ஒன்று தேவை என்று தெரிகிறது. இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை தியானம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இணைவதற்கும், உண்மையான கிறிஸ்துமஸ் கதையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், புதிய மரபுகள், இரவு உணவு கதைகள், படுக்கை நேர உரையாடல்கள் மற்றும் குடும்ப நடவடிக்கைகளுடன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கும் ஒரு வழியை வழங்கும் என்பதே எங்கள் பிரார்த்தனை. இந்த கிறிஸ்துமஸ் “அரவணைப்பு” இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை காலத்தில்உங்கள் வீட்டிற்கு அழகான நினைவுகளைத் தருகிறது என்று நாங்கள் நம்புகிறோம்! கிறிஸ்துமஸ் நம்பிக்கை 10 நாட்கள் பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை கொண்டாட வேண்டியதின் காரணத்தை நினைவுகூற உதவுகிறார். மேலும், அது விடுமறையைக் கொண்டாட வேண்டிய விதத்தை மட்டும் மாற்றாமல், மீதமிருக்கும் வாழ்க்கையையும் மாற்றவேண்டும் என்றும் நினைவூட்டுகிறார்.