ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்

ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்

இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.

மாற்கு 10:21-22

பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

மாற்கு 8:34-35

தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல

மத்தேயு 10:38

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

கலாத்தியர் 2:20

பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

லூக்கா 9:23-25

பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

லூக்கா 22:42-43

கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

கலாத்தியர் 5:24

அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

மத்தேயு 16:24-27

ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.

ரோமர் 8:18

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

யாக்கோபு 1:12

வாசிப்பு திட்டங்கள் – ஜூலை 2021

31 நாட்கள்

12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 7 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் -தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 7ம் பகுதியானது இரண்டாம் சாமுவேல், முதலாம் இரண்டாம் இராஜாக்கள் மற்றும் மாற்கு புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.

5 நாட்கள்

பணியில் மும்முரமாய் இருப்பதும் தொடர்ந்து பரபரப்பாய் இருப்பதும் நாம் வாழும் உலகத்தில் பெரிதும் மெச்சிக்கொள்ளப்படுகின்றது, அது மற்றவர்களுக்கு ஒரு சவாலாகவும் இருக்கக்கூடும். நம்முடைய பங்கையும் திட்டத்தையும் சரிவர செய்ய, நாம் இளைப்பாற கற்றுக்கொள்ளவேண்டும், அல்லது நாம் நேசிக்கும் நபர்களுக்கும் நம்முடைய இலக்குகளும் ஒன்றும் பங்களிப்புக்கு கொடுக்க முடியாமல்போகும். நாம் அடுத்த ஐந்து நாட்களை இளைப்பாறுதல் குறித்தும் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களை நம்முடைய வாழ்வில் எப்படி பொருத்திக்கொள்வது என்றும் கற்றுக்கொள்வோம்.

BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள்: புதிய ஏற்பாடு: லூக்கா – அப்போஸ்தலர் புத்தகம்

BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள் - புதிய ஏற்பாடு

பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் வடிவம் மற்றும் முக்கிய கருப்பொருள்களை ஒரு விளக்கப்படம் மூலம் மனக்கண்ணால் பாருங்கள்.

கண்ணோட்டம்: லூக்கா 1-9

கண்ணோட்டம்: லூக்கா 10-24

கண்ணோட்டம்: அப்போஸ்தலர் புத்தகம் 1-12

கண்ணோட்டம்: அப்போஸ்தலர் புத்தகம் 13-28

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

28  
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

29  
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்.

30  
எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

31  
இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

32  
தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

33  
தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.

34  
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.

35  
உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்

36  
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?

37  
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

38  
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்

39  
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்

Romans 8 in Tamil

Romans 8 in English

வாசிப்பு திட்டங்கள் – ஜூன் 2021

7 நாட்கள்

ஒரு சூப்பர்மேன் எப்படி ஒவ்வொரு எதிரயையும் வீழ்த்துகிரானோ, கிறிஸ்துவை பின்பற்றுகிற உங்களுக்கும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றல் உள்ளது. ஆனால் சூப்பரமேனுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு பிரச்சனை, கிரிப்டோனைட் (கதையினுள் உள்ள கற்பனை பொருள்)உங்களுடைய பெலனை திருடுவது தான். இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையில் உள்ள அந்த ஆவிக்குரிய கற்பனை கதாபாத்திரத்தை வேரோடு பிடுங்கி எரிந்து, தேவன் உங்களுக்கு அளித்த அசாதரமான ஆற்றலை வரம்புகளின்றி வாழ்க்கையில் பூர்த்தி செய்திட உதவிடும்