Posted on 2020-04-012021-10-11 by வாசிப்பு திட்டங்கள் – ஏப்ரல் 2020 ஏன் ஈஸ்டர்? 5 நாட்கள் ஈஸ்டரைக் குறித்த மிகவும் முக்கியமானது என்ன? ஏன் 2000 வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு மனிதர் மீது இவ்வளவு அதிகமான ஆர்வம்? ஏன் பல மக்கள் இயேசுவைக்குறித்து உற்சாகமாக உள்ளனர்? ஏன் நமக்கு அவர் தேவை? எதற்காக அவர் வந்தார்? எதற்காக அவர் மரித்தார்? எதற்காக இவற்றை கண்டுபிடிக்க யாரும் முயல வேண்டும்? இந்த 5-நாள் திட்டத்தில், நிக்கி கும்பெல் அவர்கள் இதே கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை பகிர்கிறார். இயேசு: நம் ஜெயக்கொடி 7 நாட்கள் நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையை கொண்டாடும்போது, நாம் வரலாற்றின் மிகவும் மேன்மையான வெற்றியையே கொண்டாடுகிறோம். இயேசுவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, அவர் பாவம் மற்றும் பாதாளத்தையும், மற்றும் அவற்றின் எல்லா பின்விளைவுகளையும் நித்தியமாக தோற்கடித்தார், மேலும் அந்த ஜெயத்தை நம்முடன் பகிரவும் முடிவுசெய்தார். இந்த ஈஸ்டர் வாரத்தில், அவர் வெற்றி சிறந்து கைப்பற்றிய அரண்களைப் பற்றி சிந்திப்பதில் மூழ்குவோம், அவர் நமக்காக செய்த யுத்தத்தை நினைவுகூறுவோம், மற்றும் அவரை நமது ஜெயக் கொடியாக ஸ்தோத்தரிப்போம். உயிர்த்தெழுதலின் கதை 7 நாட்கள் உங்கள் வாழ்க்கையின் கடைசி வாரம் அதுதான் என்று தெரிந்தால் அதை நீங்கள் எவ்வாறு செலவிடுவீர்கள்? இயேசு பூமியில் மனித வடிவத்தில் இருந்த கடைசி வாரம் மறக்கமுடியாத தருணங்கள். நிறைவான தீர்க்கதரிசனங்கள், கூடி நெருங்கிய ஜெபம், ஆழமான விவாதம், அடையாளச் செயல்கள், மற்றும் உலகையே புரட்டிப்போடும் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. உயிர்த்தெழுதலுக்கு முந்தைய திங்கட்கிழமை தொடங்கும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Life.Churchன் வேத திட்டம் இப்புனித வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஊடாக உங்களை அழைத்து செல்லும். யோவான் 10 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை யோவான் சுவிசேஷத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை நடத்தி செல்லும்.