Posted on 2021-05-012021-10-14 by வாசிப்பு திட்டங்கள் – மே 2021 நிச்சயம் 4 நாட்கள் தேவனால் மன்னிக்கப்பட்டிருக்கிறேன்; பரலோகம் செல்வேன் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய விருப்பம்! இந்த நிச்சயம் தேவனை சந்திப்பதன் மூலமாகவும் அவரது வார்த்தையை தியானம் செய்வதன் மூலமாகவும் அதிகரிக்கிறது. கீழ்க்கண்ட வசனங்களை மனப்பாடம் செய்வதால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் தேவனில் உறுதிப்பட அவை உங்களுக்கு உதவும். வேத வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாற்றப்படட்டும்! வேத வசனங்களை மனப்பாடம் செய்ய ஒரு விளக்க முறைக்கு செல்லவும் MemLok.com ரோமர் 8 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை ரோமர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு மிகச்சிறந்தது. வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (மே) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 5 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 5ம் பகுதியானது முதலாம் இரண்டாம் கொரிந்தியர், உபாகமம் மற்றும் யோசுவா புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிதல் 5 நாட்கள் வாழ்க்கையில் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறீர்களா? தேவனுடன் உள்ள உங்கள் உறவு எங்கு இருந்தாலும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற உணர்வு தேவனிடம் திரும்புவதற்கான ஏக்கம் தான். நாம் தேவனிடம் திரும்பும் வழியை கண்டறிகையில், நாம் அனைவரும் மைல் கற்கள் அல்லது விழிப்புணர்வுகளை சந்திக்கிறோம். இந்த விழிப்புணர்வுகள் ஒவ்வொன்றன் வழியாகவும் பயணம் செய்து, நீங்கள் இப்போது இருப்பதற்கும் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்புங்கள். நாம் தேவனை கண்டடைய விரும்புகிறோம், அவர் கண்டடையப்பட இன்னும் அதிகமாக விரும்புகிறார்.