Posted on 2020-06-012021-10-11 by வாசிப்பு திட்டங்கள் – ஜூன் 2020 1 கொரிந்தியர் 8 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை 1 கொரிந்தியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. தீவிர ஞானம்: தந்தைகளுக்கான 7-நாள் பயனம் 7 நாட்கள் தந்தைகள் நம்மை எவ்வளவு வடிவமைக்கின்றனர் என்பது மிகவும் வினோதமானது. உலகத்திற்குரிய தந்தையின் சக்தியையும் தாக்கத்தையும் விட்டு யாரும் தப்பிப்பதில்லை. மற்றும் பல ஆண்களும் தந்தையாக இருப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை என்று உணர்வதால் – வேதத்திலிருந்தும் பிற தந்தைளிடமிருந்தும், வழிநடத்துதல் பெறுவது அவசியம். தீவிர ஞானம் என்பது வேதத்திலுள்ள கொள்கைகளையும் ஞானத்தையும் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு வயதுமிக்க, ஞானமிக்க தந்தையின் அனுபவத்தோடு கலப்பதின் மூலம், ஞானம் மற்றும் தந்தைகளுக்கான ஆழ்ந்த அறிவு நோக்கிய ஒரு பயனமாகும். பிடிவாதம் – லிசா பெவரேவுடன் 6 நாட்கள் உண்மை என்றால் என்ன? கலாச்சாரமானது உண்மை என்பது ஒரு நதி என்றும், காலப்போக்கில் அது எல்லாவற்றையும் தாண்டி பாய்கிறது என்றும் நமக்கு ஒரு பொய்யை போதித்து வருகிறது. ஆனால் உண்மை என்பது அது நதி அல்ல-அது பாறை. பொங்கி எழும் உங்கள் மனதின் கருத்துக்களில், இந்தத் திட்டம் உங்கள் ஆத்மாவை நங்கூரமிட உதவும் – அலைந்து திரியும் இவ்வுலகில் உங்களுக்கு திசையின் தெளிவான உணர்வைத் தரும். பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள் 10 நாட்கள் சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்”கடினமாக உழையுங்கள்!” என்ற சத்தங்களின் மத்தியிலும் “இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்” என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது அல்லது இதுவாக இருந்தால் என்ன செய்வீர்கள்? பரிசுத்த யுதத்திற்குள் சேருங்கள்-கடின உழைப்பின் வாழ்க்கை மற்றும் நன்கு ஓய்வெடுக்கும் தேவனை கௌரவிக்கும் வழிகள்.